ஆசீர்வாதம் ஆச்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசீர்வாதம் ஆச்சாரி, தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் ராஜலிங்கம் மனா ஜோசப்.

அரசுப் பணிகளில்[தொகு]

1992 மார்ச் மாதம் இந்திய இரயில்வே துறையில் சுருக்கெழுத்தாராகப் (Steno Typist) பணியில் சேர்ந்தவர். 2004ல் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று, இந்திய இரயில்வே துறையில், பிரிவு அதிகாரியாகச் (Section Officer) சேர்ந்தார். 1999ல் இந்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக சேர்ந்து, பிறகு அக்டோபர் 2000ல் சுகாதாரத் துறை அமைச்சரின் கூடுதல் தனிச் செயலாளராக மாற்றப்பட்டு, 2004 டிசம்பர் வரை பணிபுரிந்துள்ளார்.

2004 பொதுத் தேர்தல் முடிந்தவுடன், ஆ. ராசா, சுற்றுப்புறச் சூழல் துறை கேபினெட் [தெளிவுபடுத்துக]அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், 1 சனவரி 2006 முதல் ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2007 மே, 2007ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றப் போது, ஆசிர்வாதம் ஆச்சாரி, ஆ.ராசாவின் விருப்பப்படி, சுற்றுச் சூழல் துறையில் இருந்து தொலைத் தொடர்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, ஆ.ராசாவின் கூடுதல் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

29 அக்டோபர் 2008ல் ஆசிர்வாதம் ஆச்சாரி மீண்டும் இந்திய இரயில்வே துறைப் பணியில் சேர்ந்தார்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில், ஆசிர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலம், சிபிஐ நேரடி சாட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளது.[1]

அரசியல்[தொகு]

இந்திய இரயில்வே பணியிலிருந்து விலகிய ஆசிர்வாதம் ஆச்சாரி, 2016ல் சுப்பிரமணியன் சுவாமி முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[2] பின்னர் ஆசிர்வாதம் ஆச்சாரி பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்படுகிறார்.[3]

மேலும் இந்திய இரயில்வேயில் மேம்பாட்டுக்குழு உறுப்பினராக உள்ள ஆசீர்வாதம் ஆச்சாரியின் [4] முயற்சியால், தென்னக இரயில்வே வழங்கும் பயணச்சீட்டுகளில் தமிழ் மொழியும் இடம் பெறுமாறு நடவடிக்கை எடுத்துள்ளார்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2ஜி வழக்கில் ஆசீர்வாதம் ஆச்சாரி சாட்சியம்
  2. பா.ஜ.,வில் சுப்ரமணிய சுவாமி ஆதரவாளர்களுக்கு 'சீட்' ஒதுக்கீடு
  3. அரசு அறிவிக்க உள்ள சலுகைகள் ஊக்கமளிக்கும் என பாஜகவின் ஆசீர்வாதம் ஆச்சாரி பேட்டி
  4. ரயில்வே மேம்பாட்டு குழு உறுப்பினரிடம் மனு
  5. ரயில் டிக்கெட்டில் தமிழ்
  6. தெற்கு இரயில்வே[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசீர்வாதம்_ஆச்சாரி&oldid=3718077" இலிருந்து மீள்விக்கப்பட்டது