ஆசி. கந்தராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசி. கந்தராஜா
Kantharajah.jpg
பிறப்புகைதடி
தேசியம்இலங்கைத் தமிழர், ஆத்திரேலியர்
கல்விமுதுகலை (செருமனி), கலாநிதி (செருமனி), MIASc. (ஆத்திரேலியா)
பணிபேராசிரியர்
அறியப்படுவதுஎழுத்தாளர், பேராசிரியர்
வலைத்தளம்
http://www.aasi-kantharajah.com/

ஆசி. கந்தராஜா அவுத்திரேலிய, ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, சப்பான் மற்றும் அவுத்திரேலிய பல்கலைக்கழகங்களில் படித்தவர். பணிபுரிந்தவர்.[1]

வெளிவந்த நூல்கள்[தொகு]

 • பாவனை பேசலன்றி (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000)
 • தமிழ் முழங்கும் வேளையிலே(செவ்விகளின் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்)
 • உயரப்பறக்கும் காகங்கள் (சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2003)
 • Horizon (மித்ர பதிப்பகம், 2007, ஆங்கில மொழிபெயர்ப்பு)
 • கீதையடி நீயெனக்கு... குறுநாவல் தொகுப்பு, மித்ர வெளியீடு (2014) ISBN 978-93-81322-29-1
 • கறுத்தக் கொழும்பான். புனைவுக் கட்டுரை தொகுப்பு, மித்ர வெளியீடு (2014) ISBN 978-93-81322-28-4
 • செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.  புனைவுக் கட்டுரை தொகுப்பு. ஞானம் வெளியீடு (2017). ISBN 978-955-8354-53-7
 • கள்ளக்கணக்கு (சிறுகதைத் தொகுப்பு) காலச்சுவடு வெளியீடு (2018) ISBN 978-93-86820-49-5
 • ஹெய்க்கோ (சிறுகதைத் தொகுப்பு) சிங்கள மொழிபெயர்ப்பு. 'கொடகே' பதிப்பகம் (2019), ISBN 9789553095794

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

 • சிறீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு (பாவனை பேசலன்றி - சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக)
 • இந்திய சாகித்திய அகாதெமி பதிப்பித்து வெளிவந்துள்ள 'கண்களுக்கு அப்பால். இதயத்திற்கு அருகில்...' என்னும் சிறுகதைத் தொகுப்பில் இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.[2]
 • திருப்பூர் (இந்தியா) இலக்கியவிருது 2016 ‘கறுத்தக்கொழும்பான் புனைவுக் கட்டுரைத் தொகுதி'[3]
 • தமிழியல் விருது 2015. கறுத்தக் கொழும்பான் நூலுக்கு...! வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது.[4]
 • இந்தியா திருப்பூர், தமிழ்சங்க விருது 2015. கீதையடி நீயெனக்கு... குறுநாவல் தொகுதிக்கு. மித்ரா பதிப்பகம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசி._கந்தராஜா&oldid=2737018" இருந்து மீள்விக்கப்பட்டது