ஆசிரியர் (இலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைவருக்கும் கல்வி என்பது உலகநெறி. இதன் அடிப்படையில் கல்வி வழங்கும் பொறுப்பினை இக்காலத்தில் அரசு மேற்கொண்டுள்ளது. இங்குக் கூறப்படுவது அதற்கு முந்தைய நிலை. ஆசிரியர், மாணாக்கர் பற்றிய செய்திகளைப் பண்டைய நூல்கள் தொகுத்துக் கூறுகின்றன.

நன்னூல்[தொகு]

நல்லாசிரியர் இயல்பு [1]

  • கொடைக்குணம் உடைய குலத்தில் பிறந்தவர்
  • இரக்கம் மற்றும் அன்பு காட்டும் அருள் உடையவர்
  • தெய்வத்தன்மை கொண்டவர்
  • கற்பிக்கும் கொள்கையில் உறுதிப்பாடு கொண்டவர்
  • மக்களில் மேம்பட்டவர்
  • பெருமை, திண்மை, தாங்கும் தன்மை ஆகியன கொண்ட நிலம் போன்ற பண்புள்ளவராய் மாணவரின் முயற்சிக்கு ஏற்பப் பலன் தருபவராதல்.
  • மலை போல் அளக்கமுடியாத கல்விவளம், அசையாத் தன்மை, (மாணவன்) வறண்ட காலத்திலும் வழங்கும் தன்மை கொண்டவராதல்
  • துலாக்கோல் போல எல்லா மாணாக்கரையும் சமமாக நோக்குதல்
  • மலர் போல் அனைவர்க்கும் மகிழ்வும் மணமும் தருதல்
  • உலகியல் அறிவு பெற்றிருத்தல்
  • உயர்குணம் உடைமை

ஆகிய பாங்குகளை உடையவர் நல்லாசிரியர்.

தகுதியில்லா அல்லாசிரியர் [2]

  • கற்றுத்தரும் குணம் இல்லாமை, இழிந்த பண்புகள் உடைமை, அழுக்காறு, அவா, வஞ்சம், அச்சம், மடமை போன்ற குணமுள்ளவர்.
  • இறங்கும் பதநீரைக் கள்ளாக்கும் கள்ளுக்குடம் போன்றவர்
  • தானே விழுந்தாலன்றி ஏறிப் பறிக்கமுடியாத கருக்குப்பனைமரம் போன்றவர்
  • கொடுப்பதை வாங்கிக்கொண்டு உடைத்தால் மட்டுமே தரும் பருத்திக் குண்டிகை என்னும் உண்டியல் போன்றவர்
  • ஒருவர் வீட்டு நீரால் சாய்ந்து வளர்ந்து தேங்காயை அடுத்தவர் வீட்டில் விழச் செய்யும் முடத்தெங்கு போன்றவர்

ஆசிரியர் ஆகும் தகுதி இல்லாதவர்.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. நன்னூல் 26-30
  2. நன்னூல் 31-35
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியர்_(இலக்கணம்)&oldid=3302231" இலிருந்து மீள்விக்கப்பட்டது