ஆசிய மைனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டைய அனதோலியாவில் ஆசிய மைனர் பகுதிகள்

ஆசிய மைனர் (Asia Minor), என்பது ஆசியா கண்டத்தின் தற்கால துருக்கி மற்றும் ஆர்மேனியாவின் மேட்டு நிலங்களை உள்ளடக்கிய மூவலந்தீவுப் பகுதியாகும். இது உலக நாகரீகங்களின் தொட்டிலாக விளங்கிய பகுதி.[1]

துருக்கி மொழியே ஆசிய மைனரின் பெரும்பாலான மொழியாகும். கருங்கடல், ஏஜியன் கடல் மற்றும் மத்தியதரைக் கடல் ஆசிய மைனரின் மூன்று பகுதிகளை சுற்றி அமைந்துள்ளது. ஐரோப்பா கண்டம் மற்றும் ஆசிய கண்டம் ஆகியவைகளுக்கிடையே ஆசிய மைனர் பகுதி அமைந்துள்ளதால், இங்கு பல்வேறு மேலை நாட்டு மற்றும் கீழை நாட்டு கலாசாரங்களையும், நாகரீகங்களையும் பின்பற்றும் பல்வேறு இன மக்கள் இன்றளவும் ஆசியா மைனரில் வாழ்கின்றனர்.

கிரேக்கர்கள், ரோமானியர்கள், கோத் மக்கள், பைசாண்டியர்கள், லிடியர்கள், ஹிட்டைட்டைஸ்கள், பாரசீகர்கள் மற்றும் ஆர்மீனியர்கள் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க மக்கள் ஆசிய மைனர் பகுதியை கைப்பற்றி வாழ்ந்தனர்.

ஆசியா கண்டத்தின் இச்சிறு பகுதி உரோமானியப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக இருந்ததால், இப்பகுதியை பின்னாளில் ஆசியா மைனர் (சிற்றாசியா) என்றழைக்கப்பட்டது. [2]

ஆசியா மைனர் பகுதியில் அமைந்த ட்ராய் (Troy) நகரம் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Asia Minor
  2. Asia Minor

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_மைனர்&oldid=2520952" இருந்து மீள்விக்கப்பட்டது