ஆசியா பீபி தெய்வ நிந்தனை நிகழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியா பீபி
பிறப்புஆசியா நோரீன்
1971
தேசியம்பாகிஸ்தான்
அறியப்படுவதுதெய்வ நிந்தனைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது. (இன்னும் நிறைவேற்றப்படவில்லை)

ஆசியா நோரீன் (Aasiya Noreen, உருது மொழி: آسیہ نو رین, பிறப்பு: 1971) பொதுவாக ஆசியா பீபி என்று அறியப்படுபவர்[1][2]. இவர் பாக்கிஸ்தானைச் சார்ந்தவர். இவர் இஸ்லாத்தின் முகம்மது நபியைப் பற்றி 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சக பெண்களிடம் அறுவடையின் போது தவறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர். இவருக்கு மரணதண்டனை என்று பாகிஸ்தான் நீதிமன்றத்தால் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஷேய்க்குப்புரா மாவட்டத்தில் பிறந்தவர். இவரது தண்டனை நிறைவேற்றப்பட்டால் பாகிஸ்தானில் தெய்வ நிந்தனைக்காக சட்டத்தின் மூலம் கொல்லப்பட்ட முதல் பெண்மணி இவர் ஆவார்.[3][4] இவரது மரண தண்டனையை எதிர்த்து உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kazim, Hasnain (November 19, 2010). "Eine Ziege, ein Streit und ein Todesurteil [A goat, a fight and a death sentence]" (in German). Der Spiegel. http://www.spiegel.de/panorama/gesellschaft/0,1518,729847,00.html. பார்த்த நாள்: November 19, 2010. 
  2. "Fear for Pakistan's death row Christian woman". BBC News. December 5, 2010 இம் மூலத்தில் இருந்து டிசம்பர் 6, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101206045829/http://www.bbc.co.uk/news/world-south-asia-11923701. பார்த்த நாள்: December 5, 2010. 
  3. Hussain, Waqar (November 11, 2010). "Christian Woman Sentenced to Death". Agence France-Presse இம் மூலத்தில் இருந்து நவம்பர் 14, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101114071047/http://news.yahoo.com/s/afp/20101111/wl_sthasia_afp/pakistanunrestreligionchristian. பார்த்த நாள்: November 11, 2010. 
  4. Crilly, Rob; Sahi, Aoun (November 9, 2010). "Christian Woman sentenced to Death in Pakistan for blasphemy". த டெயிலி டெலிகிராப் (London) இம் மூலத்தில் இருந்து நவம்பர் 11, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101111174909/http://www.telegraph.co.uk/news/newstopics/religion/8120142/Christian-woman-sentenced-to-death-in-Pakistan-for-blasphemy.html. பார்த்த நாள்: November 11, 2010.