உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசியப் புவிப்பரப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Recentissima Asiae Delineatio, the 1730 map of Johan Christoph Homann. ஆசியா வண்ணமடித்துக் காட்டப்பட்டுள்ளது. பெயர்கள் இலத்தீனில் உள்ளன. இது இன்றைய நிலவரையில் இருந்து சற்றேதான் வேறுபடுகிறது. ஆனால் அரசியல் பிரிவுகள் மாறுபட்டுள்ளன.
ஆசியாவின் செயற்கைக்கோள் பார்வை

ஆசியப் புவிப்பரப்பியல் ஆசியாவை யுமுரேசியாவின் நடுவண், கிழக்குப் பகுதிகளையும் வகைப்படுத்தும் புவிப்பரப்புக் கருத்து வரையறைகளை மீள்பார்வை இடுகிறது. இக்கண்டத்தில் தோராயமாக 50 நாடுகள் அமைகின்றன.

புவிப்பரப்புத் தன்மைகள் அல்லது பான்மைகள்

[தொகு]

எல்லைகள்

[தொகு]

ஆசியாவின் நிலப்பகுதி அதி அடங்கும் வட்டார நிலப்பகுதிகளின் கூட்டுத்தொகைக்குச் சமமாகாது எடுத்துக்காட்டாக, நடுவண் ஆசியாவுக்கும். நடுவண் கிழக்கு நாடுகளுக்கும் இடையே அமையும் எல்லைக்கோடு அதை யார் வரையறுக்கிறார்கள் என்பதையும் எதற்காக வரையறுக்கிறார் என்பதையும் பொறுத்துள்ளது. இந்த வேறுபட்ட வரையறைகள் ஒட்டுமொத்த ஆசியாவின் நிலவரையில் அமையாது; எடுத்துகாட்டாக, எகிப்து நடுவண் கிழக்கு நாடுகளில் உள்ளடங்கும். ஆனால் பின்னவை ஆசியாவின் நிலப்பிரிவானாலும் எகிப்து ஒட்டுமொத்த ஆசியாவில் சேர்க்கப்படுவதில்லை.

ஆசியாவையும் ஆப்பிரிக்காவையும் பிரிப்பது சூயசு கால்வாய் நீர்ச்சந்தியும் செங்கடலும் ஆகும். அண்கிழக்கில் உள்ள துருக்கி ஏகியத் தீவுக்குட் புகுந்து ஐரோப்பாவின் பக்கத்தில் இசுதான்புல்லை உள்ளடக்கினாலும், ஐரோப்பாக் கண்டப் பக்க ஆசிய எல்லை கிழக்கு நடுத்தரை நாட்டுக் கடற்கரையில் தொடங்குகிறது. வடக்கில் ஆசியா, ஐரோப்பாவின் எல்லை தார்தனெல்லசு ஊடாக, மர்மரா கடல், போசுபோரசு, கருங்கடல், காக்காச்சு மலைகள், காசுபியக் கடல்,[1] யூரல் ஆற்று தலைவாயில் வரையும் யுரல் மலைகளின் கிழக்காக உருசியாவின் காராக் கடல் வரையும் செல்லும் நீளமான எல்லையாகும். ஆர்டிக் பெருங்கடல் ஆசியாவின் வடக்கெல்லையாக அமைகிறது. பெரிங் நீர்ச்சந்தி ஆசியாவையும் வட அமெரிக்காவையும் பிரிக்கிறது.

ஆசியக் கண்டத்தின் எல்லையில் மலாய்த் தீவகமும் இந்தோனேசியாவும் உள்ளன. சுந்தா கண்டத் திட்டில் உள்ள இந்தோனேசியா இப்போது கிழக்கிந்தியத் தீவுகள் என அழைக்கப்படுவதில்லை. இந்தியத் தீவுகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதில்மக்கள் வழும்/வாழாத அயிரக் கணக்கான திவுகள் உள்ளன. அருகில் ஆத்திரேலியா தனிக் கண்டமாகும். ஆத்திரேலியாவின் வடகிழக்கில் ஜப்பானுக்கும் கொரியாவுக்கும் நெடுந்தொலைவில் அமைந்துள்ள பசுபிச் தீவுகள் ஓசியானா எனப்படுகின்றன. அவை ஆசியாவில் அடங்கா. இந்தோனேசியாவில் இருந்து ஆசிய எல்லை இந்தியப் பெருங்கடல் வழியாக சென்கடல் வரை நீள்கிறது. இந்தியப் பெருங்கடலில் உள்ள பெரும்பாலான தீவுகள் ஆசியாவைச் சேர்ந்தவை ஆகும்.

ஒட்டுமொத்த அளவுகள்

[தொகு]

கற்பனையான ஆசிய எல்லைக்குள் அடங்கிய நிலப்பரப்பைப் பற்றி, பல தகவல் வாயில்கள் பல்வேறு மதிப்பீடுகளைத் தருகின்றன. நியூயார்க் இதழின் உலக வரைபடம் 43,608,000 km2 (16,837,000 sq mi) பரப்பளவைத் தருகிறது.[2] சேம்பர் உலக அட்டவணை இம்மதிப்பை 44,000,000 km2 (17,000,000 sq mi) என முழுமைப் படுத்துகிறது.[3] ஆனால் கொலம்பியச் சுருக்கமான கலைக்களஞ்சியம் இதை 44,390,000 km2 (17,140,000 sq mi) என மதிப்பிடுகிறது.[4] The 2011 Pearson's has 44,030,000 km2 (17,000,000 sq mi).[5] இப்பரப்பை மதிப்பிட உதவும் முறையையோ, எப்பகுதிகள் மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டன எனும் தகவலையோ இவை வெளியிடவில்லை.

ஆசியக் கண்ட நிலவரைப் பரப்பு அறுதி வடக்கு, தெற்கு அகலாங்குகளையும் அறுதி கிழக்கு, மேற்கு நெட்டாங்குகளையும் கொண்ட நிலக்கோளச் சதுரக் கோண அளவுக்குள் அமைகிறது. செல்யுசுக்கின் முனை அகலாங்கு 77° 43′ வ; மலேசியத் தீவகப் பியாயி முனை அகலாங்கு 1° 16′ வ; துருக்கியில் உள்ள பாபா முனை நெட்டாங்கு 26° 4′ கி; தெழ்னியோவ் முனை நெட்டாங்கு 169° 40′மே; எனவே ஆசியக் கண்டம் அகலாங்கில் 77° நிலவரைக் கோணமும் நெட்டாங்கில் 195° நிலவரைக் கோணமும் வெட்டுகிறது.[6] சேம்பரின்படி, ஏறக்குறைய நீளம் 8560 கி.மீ; அகலம் 9600 கி.மீ. பியர்சன்படி, நீளம் 8700 கி.மீ; அகலம் 9700 கி.மீ.

ஆசியக் கண்டத்தின் தென்கிழக்கில் உள்ள இந்தோனேசியா பல்லாயிரம் தீவுகளைக் கொண்டுள்ளது. இதுதான் பேரளவுப் பரப்பை ஆசியக் கண்டத்துக்கு அளிக்கிறது. மேலும் இது ஆசியாவின் அகலாங்கை மேலும் தெற்காகத் தள்ளுகிறது. இந்நாட்டின் புவிப்பரப்பியலின் தன்மை இதன் கடலும் கடற்படுகையும் ஆசியாவுக்குள் அடங்குமா என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆத்திரேலியவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் இதற்கான பேரம் இன்னமும் நடந்துவருகிறது. நடப்பு 1997 ஒப்பந்தமும் ஒப்புதல் பெறப்படாமலே உள்ளது. கடலில் மீன் பிடிக்கும் உரிமையும் கடற்படுகையில் கனிமச் சுரங்கம் அகழும் உரிமையும் வேறு தீர்வுகாண வேண்டியுள்ளன. இவையும் பேரத்தில் உள்ளன. கடற்படுகைக்கான அறுதித் தெற்கு எல்லை 10° 50'தெ, A3 அகலாங்கு ஆத்திரேலியாவும் இந்தோனேசியாவும் பாப்புவா நியூகினியாவும் சந்த்திக்கும் மும்மைப் புள்ளியாகும். அருதித் தெற்கு நீர்க்கம்ப்ப் புள்ளி Z88 புள்ளியான 13° 56' 31.8" அகலாங்காகும்.

வட்டாரங்கள்

[தொகு]

18 ஆம் நூற்றாண்டு தொடங்கி ஆசியா பல உள்வட்டாரங்களகப் பிரித்து தொடர்பேதும் இன்ற வரையறுக்கப்பட்டுள்ளன. ஆசியா சொல்லைப் பயன்படுத்த பொதுக் கருத்தேற்பு ஏதும் இல்லாத்தைப் போலவே இவற்றுக்கு வரலாற்றுப் பொதுவேற்பு ஏதும் இல்லை.

ஆசியாவின் வட்டாரங்களாகப் பின்வரும் வட்டாரங்கள் பொதுவாக அமையும்;

இதில் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடங்கும்.

இதில் பொதுவாக[7] சீனா, ஃஆங்காங், மக்காவோ, தைவான், வடகொரியா, தென்கொரியா, ஜப்பான், மங்கோலியா ஆகிய நாடுகள் உள்ளடங்கும்.

இதில் பொதுவாக[8] ஆப்கனித்தான், பாக்கித்தான், இந்தியா, மாலத்தீவுகள், சிறிலங்கா, நேப்பாளம், பூட்டான், வங்க தேசம் ஆகிய நாடுகள் உள்ளடங்கும். ஆப்கனித்தனைத் தவிர்த்த இவ்வட்டாரம் இந்தியத் துணைக்கண்டம் என இணையாக அழைக்கப்படுகிறது.

இதில் பொதுவாக[9] புரூனேi, கம்போடியா, இந்தோனேசியா, இலாவோசு, மலேசியா, மயன்மார், பிலிப்பைன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, திமோர்-இலெசுத்தே, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளடங்கும்.

இதில் பொதுவாக[10] ஆர்மேனியா, அசர்பைசான், பகுரைன், ஜார்ஜியா, ஈரான், ஈராக், இசுரவேல், ஜோர்டான், குவைத், இலெபனான், காசா Strip, ஓமன், குவத்தார், சவுதி அரேபியா, சிரியா, துருக்கி, ஒன்றிய அரபு நாடுகள் அல்லது பேரரசுகள், யேமன் ஆகிய நாடுகள் உள்ளடங்கும்.

ஆசியாவின் புவியரசியல் தரவுகள்

[தொகு]

அறிமுகம்

[தொகு]

பட்டியலின் தரவுகள் உரிய தரப்பட்டுள்ள தகவல் வாயிகளில் இருந்து எடுக்கப்பட்டவை; அல்லாவிடில் அவை உலக சி.ஐ.ஏ முகநூல்வழி பெறப்பட்டவை. மக்கள் தொகையைப் பிரிக்க முயலவில்லை. உருசியாவின் மக்கள்தொகை அந்நாடு முழுவதற்குமானது. எனவே, தனித்தனியான மக்கள் தொகையைக் கூட்டி ஆசியாவின் மக்கள் தொகையைப் பெறமுடியாது. குறிப்புகள் எந்நாடுகள் சில முகமைகளால் கண்டத்திடை நாடுகள் எனக் கருதப்படுகின்றன என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் இதுபற்றிய பொதுவான ஏற்பேதும் இதுவரை இல்லை.

பட்டியல்

[தொகு]
Code Name of region and
territory, with கொடி (சின்னம்)
பரப்பளவு
(km²)
மக்கள் தொகை மக்கள் தொகை அடர்த்தி
(/km²)
Date தலைநகரம்
143 நடு ஆசியா
398  கசக்கஸ்தான்b[›] 2,724,927 16,536,000 6.1 Jan 2011 அஸ்தானா
417  கிர்கிசுத்தான் 199,951 5,587,443 27.9 Jul 2011 பிசுக்கெக்
762  தஜிகிஸ்தான் 143,100 7,627,200 53.3 Jul 2011 துசான்பே
795  துருக்மெனிஸ்தான் 488,100 4,997,503 10.2 Jul 2011 அசுகாபாத்
860  உஸ்பெகிஸ்தான் 447,400 28,128,600 62.9 Jul 2011 தாஷ்கந்து
030 கிழக்காசியா
156  சீனாf[›]g[›] 9,640,821 1,322,044,605 134.0 பெய்ஜிங்
344  ஆங்காங்

f[›]

1,104 7,122,508 6,451.5 Jul 2011
392  சப்பான் 377,947 127,920,000 338.5 Jul 2011 தோக்கியோ
408  வட கொரியா 120,540 23,479,095 184.4 பியொங்யாங்
410  தென் கொரியா 98,480 49,232,844 490.7 சியோல்
446  மக்காவுf[›] 25 460,823 18,473.3
496  மங்கோலியா 1,565,000 2,996,082 1.7 உலான் பத்தூர்
158  தாய்வான்f[›] 35,980 22,920,946 626.7 தாய்பெய்
N/A வடக்கு ஆசியா
643  உருசியாd[›] 13,119,600 37,630,081 2.9 மாஸ்கோ
035 தென்கிழக்காசியா
096  பகுரைன் 5,770 381,371 66.1 பண்டர் செரி பெகாவான்
104  மியான்மர் 676,578 47,758,224 70.3 நைப்பியிதோ
116  கம்போடியா[11] 181,035 13,388,910 74 புனோம் பென்
360  இந்தோனேசியாc[›] 1,919,440 230,512,000 120.1 ஜகார்த்தா
418  லாவோஸ் 236,800 6,677,534 28.2 வியஞ்சான்
458  மலேசியா 329,847 27,780,000 84.2 கோலாலம்பூர்
608  பிலிப்பீன்சு 300,000 92,681,453 308.9 மணிலா
702  சிங்கப்பூர் 704 4,608,167 6,545.7 சிங்கப்பூர்
764  தாய்லாந்து 514,000 65,493,298 127.4 பேங்காக்
626  கிழக்குத் திமோர்c[›] 15,007 1,108,777 73.8 டிலி
704  வியட்நாம் 331,690 86,116,559 259.6 ஹனோய்
034 Southern Asia
004  ஆப்கானித்தான் 647,500 32,738,775 42.9 காபூல்
050  வங்காளதேசம் 147,570 153,546,901 1040.5 டாக்கா
064  பூட்டான் 38,394 682,321 17.8 திம்பு
356  இந்தியாg[›] 3,287,263 1,147,995,226 349.2 புது தில்லி
462  மாலைத்தீவுகள் 300 379,174 1,263.3 மாலே
524  நேபாளம் 147,181 29,519,114 200.5 காட்மாண்டு
586  பாக்கித்தான்g[›] 803,940 167,762,049 208.7 இஸ்லாமாபாத்
144  இலங்கை 65,610 21,128,773 322.0 சிறீ ஜெயவர்தனபுர கோட்டை
145 தென்மேற்கு ஆசியா
051  ஆர்மீனியாe[›] 29,800 3,299,000 280.7 யெரெவான்
031  அசர்பைஜான்a[›]b[›] 86,660 8,845,127 102.736 பக்கூ
048  பகுரைன் 665 718,306 987.1 மனாமா
196  சைப்பிரசுe[›] 9,250 792,604 83.9 நிக்கோசியா
268  சியார்சியாa[›] 69,700 4,636,400 65.1 திபிலீசி
364  ஈரான் 1,648,195 70,472,846 42.8 தெகுரான்
368  ஈராக் 437,072 28,221,181 54.9 பகுதாது
376  இசுரேல் 20,770 7,112,359 290.3 எருசலேம்h[›]
400  யோர்தான் 92,300 6,198,677 57.5 அம்மான்
414  குவைத் 17,820 2,596,561 118.5 குவைத் நகரம்
422  லெபனான் 10,452 3,971,941 353.6 பெய்ரூத்
512  ஓமான் 212,460 3,311,640 12.8 மஸ்கத்
275  பலத்தீன் 6,257 4,277,000 683.5 ரம்லா
634  கத்தார் 11,437 928,635 69.4 தோகா
682  சவூதி அரேபியா 1,960,582 23,513,330 12.0 ரியாத்
760  சிரியா 185,180 19,747,586 92.6 திமிஷ்கு
792  துருக்கிa[›]b[›] அங்காரா
784  ஐக்கிய அரபு அமீரகம் 82,880 4,621,399 29.5 அபுதாபி (நகரம்)
887  யேமன் 527,970 23,013,376 35.4 சனா
142 Asia 43,810,582 4,162,966,086 89.07

பட்டியல் குறிப்புகள்

[தொகு]

^ a: அசர்பைஜான், Georgia, and துருக்கி are often considered to be transcontinental countries, spanning both Asia and Europe. Many organisations, such as the பிபிசி[12] place them in Europe, while others such as the CIA[13] include them in Asia, தென்மேற்கு ஆசியா and the மத்திய கிழக்கு நாடுகள் to be precise. All are included in European organisations such as the Council of Europe[14] and are considered to be European, and thus eligible to join, by the ஐரோப்பிய ஒன்றியம்.[15]
^ b: அசர்பைஜான், கசக்ஸ்தான், and துருக்கி are considered split by some between two continents: Azerbaijan north of the Caucasus, Kazakhstan west of the Ural River and Turkey west of the Bosphorus might be construed as in Europe. Only national data is presented. Splitting a nation would be more problematic; for example, the Ural River is not a well-defined boundary in places; moreover, some geopolitical units straddle it. The UN convention is followed here, which does not define any transcontinental regions.
^ c: இந்தோனேசியா is often considered a transcontinental country with territory in both Asia and ஓசியானியா, and கிழக்குத் திமோர் can be placed in either Asia or Oceania. Population and area figures for Indonesia do not include Irian Jaya and மலுக்கு தீவுகள், frequently reckoned in Oceania.
^ d: Russia is considered a transcontinental country with territory in Eastern Europe and Northern Asia; population and area figures are for the Ural Federal District, Siberian Federal District and Far Eastern Federal District of Russia, which belong to Asia.
^ e: The island of சைப்பிரசு is located on the Asian Anatolian plate,[16] but is a member of European organisations such as the Council of Europe[14] and the European Union.[15] ஆர்மீனியா is similarly located fully within Asia, but is a member of the Council of Europe.[14]
^ f: ஆங்காங் and மக்காவு are Special Administrative Regions (SAR) of சீனா. சீனக் குடியரசு (officially the Republic of China) is a de facto state claimed by the PRC. Figures given for China do not include these areas.
^ g: The area of இந்தியா includes சம்மு காசுமீர், a disputed territory contested between India, பாக்கித்தான், and சீனா.
^ h: In 1980, எருசலேம் was proclaimed Israel's united capital, following its annexation of Arab-dominant கிழக்கு எருசலேம் during the 1967 Six-Day War. The ஐக்கிய நாடுகள் அவை and many countries do not recognize this claim, with most countries maintaining embassies in டெல் அவீவ் instead.

மேற்கோள்கள்

[தொகு]
 1. Mughal, Muhammad Aurang Zeb. 2013. "Caspian Sea." Robert Warren Howarth (ed.), Biomes & Ecosystems, vol. 2. Ipswich, MA: Salem Press, pp. 431-433.
 2. The New York Times and Bartholomew, Edinburgh (1992). The New York Times Atlas of the World. New York: Times Books (Random House). p. 44.
 3. "Asia". Chambers World Gazetteer (5th). (1988). 
 4. "Asia". The Concise Columbia Encyclopedia (2nd). (1989). 
 5. Edgar Thorpe; Shawick Thorpe (2011). The Pearson General Knowledge Manual. India: Dorling Kindersley. p. A.25.
 6. "Asia: The Land". The New Encyclopædia Britannica (15th). 
 7. "East Asia". Archived from the original on 4 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. "South Asia". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 9. "Southeast Asia". Archived from the original on 4 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 10. "West Asia/Middle East". Archived from the original on 27 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 6 May 2015.
 11. "General Population Census of Cambodia 2008 – Provisional population totals, National Institute of Statistics, Ministry of Planning, released 3rd September 2008" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2010-06-01.
 12. "News Europe". BBC. பார்க்கப்பட்ட நாள் 5 April 2011.
 13. "Middle East". நடுவண் ஒற்று முகமை. Archived from the original on 27 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2011.
 14. 14.0 14.1 14.2 "47 countries, one Europe". Council of Europe. பார்க்கப்பட்ட நாள் 5 April 2011.
 15. 15.0 15.1 "European countries". ஐரோப்பிய ஒன்றியம். பார்க்கப்பட்ட நாள் 5 April 2011.
 16. Shimon Wdowinski; Zvi Ben-Avraham; Ronald Arvidsson; Goran Ekström (2006). "Seismotectonics of the Cyprian Arc". Geophysics Journal International (164): 176–181. doi:10.1111/j.1365-246X.2005.02737.x. Bibcode: 2006GeoJI.164..176W. http://www.geodesy.miami.edu/articles/2006/Wdowinski_et_al_2006_JGI.pdf. பார்த்த நாள்: 5 April 2011. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Geography of Asia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 • "Estimated Population Densities". UNEP/GRID-Arendal. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 • "The Soil Maps of Asia". European Digital Archives of Soil Maps – EuDASM. European Commission Joint Research Centre. Archived from the original on 13 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
 • "Asia Maps". Perry-Castañeda Library Map Collection. University of Texas Libraries. பார்க்கப்பட்ட நாள் 20 July 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியப்_புவிப்பரப்பியல்&oldid=3619620" இலிருந்து மீள்விக்கப்பட்டது