ஆசியப் புல் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியப் புல் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
விலங்கு
பிரிவு:
முதுகுநாணி
வகுப்பு:
நீர்நில வாழ்வன
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இரானா
இனம்:
இ. சென்சினென்சிசு
இருசொற் பெயரீடு
இரானா சென்சினென்சிசு
டேவிட், 1875

ஆசியப் புல் தவளை அல்லது சீன பழுப்பு தவளை (Rana chensinensis-இரானா சென்சினென்சிசு) என்பது சீனா மற்றும் மங்கோலியாவில் காணப்படும் ரானிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும்.[2]

வாழிடம்[தொகு]

ஆசியப் புல் தவளையின் இயற்வாழிடம் மிதவெப்பமண்டல காடுகள், ஆற்றிடைப் பகுதிகள், சதுப்புநிலங்கள், நன்னீர் ஏரிகள், நன்னீரிடை சதுப்புநிலங்கள், விளை நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பாசன நிலங்கள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

அச்சுறுத்தல்[தொகு]

இந்த தவளை சீன விவசாயத்தில் பூச்சித் தீங்குயிரிகளை வேட்டையாடும் திறனுக்காகக் குறிப்பிடப்படுகிறது. 1982 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் கிங்யுவான் மஞ்சு தன்னாட்சி மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், இத்தவளைகளின் இனப்பெருக்கம் பூச்சிக்கொல்லி மற்றும் சுற்றுச்சூழலில் மாசுபாட்டினால் குறைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.[3]

சீனாவிற்குள், இத்தவளையின் பாலோபியன் குழாய்களுக்கு அருகில் உள்ள கொழுப்பு திசுக்கள் காசுமா எனும் சீன இனிப்பு பொருளின் மூலப்பொருளாகவும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sergius Kuzmin, Masafumi Matsui, Zhao Wenge, Vladimir Ishchenko, Natalia Ananjeva, Nikolai Orlov (2004). "Rana chensinensis". IUCN Red List of Threatened Species 2004: e.T58572A11805122. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58572A11805122.en. https://www.iucnredlist.org/species/58572/11805122. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Frost, Darrel R. (2014). "Rana chensinensis David, 1875". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 7 April 2014.
  3. Li, Wenhua (2001). Agro-ecological Farming Systems in China. Taylor & Francis. பக். 195–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-3-103784-9. https://books.google.com/books?id=lqIQvt15VuQC&pg=PA195. 
  4. Deutsch, Jonathan (2012). They Eat That?: A Cultural Encyclopedia of Weird and Exotic Food from Around the World. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-38058-7. https://books.google.com/books?id=kcikMWmnQm4C&pg=PA75. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியப்_புல்_தவளை&oldid=3506369" இலிருந்து மீள்விக்கப்பட்டது