ஆசியக் கோப்பை (கால்பந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆசியக் கோப்பை (கால்பந்து)
தோற்றம்1956
மண்டலம்ஆசியா (ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு)
அணிகளின் எண்ணிக்கை16
தற்போதைய வாகையாளர் சப்பான்
(4வது கோப்பை)
அதிக முறை வென்ற அணி சப்பான் (4 முறை)
2015 ஆசியக் கிண்ணம்

ஆசியக் கோப்பை (கால்பந்து) அல்லது ஏஎஃப்சி ஆசியக் கோப்பை (AFC Asian Cup) என்பது ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பால் நடத்தப்பெறும் நாடுகளுக்கிடையேயான கால்பந்துப் போட்டித் தொடராகும். கோப்பா அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் பழமையான கண்ட கால்பந்துப் போட்டியாகும். இதன் வாகையாளர் நேரடியாக ஃபிஃபா கூட்டமைப்புகள் கோப்பையில் ஆடத் தகுதிபெறுவர்.

ஆசியக் கோப்பையானது நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பெறுகிறது. முதல் போட்டி 1956-இல் ஹாங்காங்கில் நடத்தப்பெற்றது. அங்கு 2004-ஆம் ஆண்டு வரை நடத்தப்பெற்றது. இதே சுழற்சியில் ஒலிம்பிக் போட்டிகளும் ஐரோப்பிய கால்பந்துப் போட்டிகளும் நடத்தப்பெற்றதால், ஆசியக் கோப்பையை நடத்துவதற்கான காலகட்டம் மாற்றப்பட்டது. 2007-லிருந்து நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்பெறுகிறது. 2007-இல் இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் நடத்தின.

வெளியிணைப்புகள்[தொகு]