உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிமைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிமைட்டு
Hashemite
இயோர்டான் நாட்டில் கிடைத்த ஆசிமைட்டு கனிமம்
பொதுவானாவை
வகைகுரோமேட்டு கனிமம்
வேதி வாய்பாடுBarium Chromate Ba(S,Cr)O4
இனங்காணல்
நிறம்பழுப்பு முதல் மஞ்சள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்புசரிபிளவு {001}, நன்று {010} {100}
மோவின் அளவுகோல் வலிமை3.5
மிளிர்வுவிடாப்பிடியானது
ஒளிஊடுருவும் தன்மைஒளிகசியும்
ஒப்படர்த்தி4.54 - 4.59
மேற்கோள்கள்[1]

ஆசிமைட்டு (Hashemite) என்பது Ba(Cr,S)O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[2] மிகவும் அரிதான பேரியம் குரோமேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது.[1] இயற்கை குரோமேட்டுகளின் பிரதிநிதியாக, ஒப்பீட்டளவில் சிறிய மற்றும் அரிதான கனிமக் குழுவாக ஆசிமைட்டு கனிமம் கருதப்படுகிறது. ஆசிமைட்டு என்பது தாராபசைட்டின் பேரியம்-ஒப்புமையும் பேரைட்டின் குரோமியம்-ஒப்புமையுமாகும். பேரைட்டு தாதுக்களின் குழுவிற்கு சொந்தமானதாகவும் பார்க்கப்படுகிறது. குரோக்கோயிட்டு மற்றும் குரோமடைட்டைப் போலவே விகிதவியல் கூறுகளுடன் காணப்படுகிறது.[1] நேர்ச்சாய்சதுர படிக அமைப்பில் Pnma என்ற இடக்குழுவில் ஆசிமைட்டு படிகமாகிறது. இயற்கையான தீப்பாறை உருமாற்றம் காரணமாக உருவாகும் பாறைகளின் தோற்றத்திற்கு பெயர் பெற்ற அட்ருரிம் உருவாக்கத்தில் குரோமியம் தாங்கியுள்ள எட்ரிங்கைட்டு மற்றும் அபடைட்டு குழு கனிமத்துடன் சேர்ந்து காணப்படுகிறது. இயோர்டானின் ஆசிமைட்டு இராச்சியத்தின் நினைவாக கனிமத்திற்கு ஆசிமைட்டு எனப் பெயரிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Hashemite: Hashemite mineral information and data". Mindat.org. Retrieved 5 March 2016.
  2. 1 2 Hauff, P.L., Foord, E.E., and Rosenblum, S., 1983. Hashemite, Ba(Cr,S)O4, a new mineral from Jordan. American Mineralogist 68, 1223-1225.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிமைட்டு&oldid=4282575" இலிருந்து மீள்விக்கப்பட்டது