ஆசிசு குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசிசு குமார்
தனித் தகவல்கள்
முழுப் பெயர் ஆசிசு குமார்
நாடு  இந்தியா
நகரம் அலகாபாத்
வகை ஆண்கள் கலை சீருடற்பயிற்சி
நிலை மூத்தோர் அனைத்துலக உயரடுக்கு
மன்றம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு
தலைமைப் பயிற்சியாளர்(கள்) விளாதிமிர் செர்ட்கோவ்
உதவிப் பயிற்சியாளர்(கள்) பிரவின் சர்மா

ஆசிசு குமார் (Ashish Kumar) இந்தியாவின் அலகாபாத்தைச் சேர்ந்த ஒரு சீருடற்பயிற்சி விளையாட்டு வீரராவார். சீருடற்பயிற்சி விளையாட்டில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. 2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டபோது இச்சாதனையை ஆசிசு குமார் நிகழ்த்தினார். இதன் மூலம் பொதுநலவாய விளையாட்டு வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இந்திய சீருடற்பயிற்சி வீரரானார். இப்போட்டியின் வெவ்வேறு பிரிவுகளில் வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை இவர் வென்றார். [1] [2]

போட்டி வரலாறு[தொகு]

2006[தொகு]

குமார் முதன்முதலில் இந்தியாவின் சூரத்தில் நடத்தப்பட்ட 2006 ஆசிய கலை சீருடற்பயிற்சி வெற்றியாளர் போட்டியில் பங்கேற்றார். சிரிய நாட்டின் சீருடற்பயிற்சி வீரர் பாதி பக்லாவனுடன் இணைந்த தரைப் பயிற்சிப் பிரிவு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். கலை சீருடற்பயிற்சி விளையாட்டு வரலாற்றில் இந்தியாவின் முதல் பெரிய அனைத்துலகப் பதக்கம் இதுவாகும். கத்தார் நாட்டின் தோகாவில் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் குமார் போட்டியிட்டார். இறுதிப் போட்டிவரை முன்னேறிய குமார் 18 ஆவது இடத்தைப் பிடித்தார்.

2010[தொகு]

2010 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இவர் முதலில் தரைப் பயிற்சிப் பிரிவு போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பின்னர் பெட்டகத்தின் மீதான போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். தங்கம் இங்கிலாந்தின் லூக் ஃபோல்வெல்லுக்குக் கிடத்தது. கனடாவின் இயன் கால்வன் இப்பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். [3] சீனாவின் குவாங்சோவில் 2010 இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குமார் தரைப் பயிற்சிப் பிரிவு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீருடற்பயிற்சி விளையாட்டில் இந்தியாவின் ஒரே பதக்கமாக இது இருந்தது.

2011[தொகு]

2011 ஆம் ஆண்டு டிசம்பரில் டாக்காவில் நடந்த தென் மத்திய ஆசிய சீருடற்பயிற்சி விளையாட்டு வெற்றியாளர் பட்டத்திற்கானப் போட்டியில் குமார் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றார். தனிநபர், அனைத்துப் பிரிவு போட்டியாளர், தரைப் பயிற்சிப் பிரிவு போட்டி, பெட்டகப் போட்டி மற்றும் உயர் கம்பித்தடுப்பு நிகழ்வுகளில் இவருக்குப் பதக்கங்கள் கிடைத்தன. [4]

2014[தொகு]

2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீருடற்பயிற்சி விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற தன்மையை ஏற்பட்டது. குழப்பமான தேர்வு செயல்முறையைத் தொடர்ந்து, குமார் இந்த நிகழ்வில் தரைப் பயிற்சி பிரிவு இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறிவிட்டார். முடிவில் தனிப்பட்ட அனைத்து சுற்றில் இவரால் 12 ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. .

மேற்கோள்கள்[தொகு]

  1. "I could have got gold had equipment arrived earlier: CWG medallist Ashish". Hindustan Times. 9 October 2010 இம் மூலத்தில் இருந்து 3 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103125428/http://www.hindustantimes.com/sports-news/OtherSports/I-could-have-got-gold-had-equipment-arrived-earlier-CWG-medallist-Ashish/Article1-610455.aspx. 
  2. "COMMONWEALTH GAMES: Ashish wins India's first CWG gymnastics medal". 8 October 2010 இம் மூலத்தில் இருந்து 12 அக்டோபர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101012230720/http://cwg.ndtv.com/commonwealth/article/id/spoen20100155801/type/latest/Ashish-wins-Indias-first-CWG-gymnastics-medal-57971.html. 
  3. "High-flying Ashish locks silver in vault". The Times of India. 9 October 2010. http://timesofindia.indiatimes.com/sports/commonwealth-games-2010/india-news/High-flying-Ashish-locks-silver-in-vault/articleshow/6716729.cms. 
  4. "Ashish strikes gold at Central Asian Championships". The Times of India. 3 January 2012. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/others/Ashish-strikes-gold-at-Central-Asian-Championships/articleshow/11350125.cms. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிசு_குமார்&oldid=3316064" இலிருந்து மீள்விக்கப்பட்டது