ஆசா பட்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசா பட்டார்
Aasa Buttar

ਆਸਾ ਬੁੱਟਰ
Assa Buttar
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப் (இந்தியா)
மண்டலம்பஞ்சாப்
மாவட்டம்Sri Muktsar Sahib
தாலுகாகள்கித்தார்பாகா
ஏற்றம்185 m (607 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,692
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பஞ்சாபி (குர்முக்கி)
 • மண்டலம்பஞ்சாபி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்151025[1]
அருகிலுள்ள நகரம்சிறீ முக்த்சர் சாகிப்
பாலின விகிதம்1000/933 /

ஆசா பட்டார் (Aasa Buttar) இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், முக்த்சர் மாவட்டத்தில் உள்ள கித்தர்பாகா தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001[2] ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆசா பட்டார் நகரின் மொத்த மக்கள் தொகை, 464 குடும்பங்களைச் சேர்ந்த 2,692 பேர் ஆகும். இவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 1393 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 1299 ஆகும். மக்கள் தொகையில் 52% பேர் ஆண்கள் மற்றும் 48% பேர் பெண்கள் ஆவர். ஆசா பட்டார் நகரத்தின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற அளவில் இருந்தது[3]

புவியியல்[தொகு]

30°26′30″வடக்கு மற்றும் 74°39′57″கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் ஆசா பட்டார் கிராமம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் பிரதான நகரான முக்த்சர் சாகிப் நகரிலிருந்து 18 கி.மீ, பூட்டிவாலா (3.5 கி.மீ), சூரிவாலா (4 கி.மீ) மற்றும் தோடா (12.5 கி.மீ) ஆகியன இக்கிராமத்தைச் சூழந்துள்ள மற்ற கிராமங்களாகும்.

சமயம்[தொகு]

ஆசா பட்டார் கிராம மக்கள் சீக்கிய மதத்தின் பால் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். இங்குள்ள சாட் இன மக்கள் யாவரும் சீக்கியர்களேயாவர்.

பொருளாதாரம்[தொகு]

ஆசா பட்டார் ஒரு கிராமம் என்பதால் இங்குள்ள சாட் இன மக்களின் பொருளாதாரம் முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aasa Buttar PIN code". www.pin-code.co.in. Archived from the original on 7 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  3. "Aasa Buttar, Giddarbaha sub-district (Sr. No. 1)". Government of India. www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 8 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_பட்டார்&oldid=3792072" இலிருந்து மீள்விக்கப்பட்டது