உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசா காஜி எல்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசா காஜி எல்மி
Asha Haji Elmi
عائشة حاجي علمي
பிறப்பு1962 (அகவை 62–63)
சோமாலியா
தேசியம்சோமாலியா
படித்த கல்வி நிறுவனங்கள்சோமாலிய தேசியப் பல்கலைக்கழகம்
ஐக்கிய நாடுகள் பன்னாட்டுப் பல்கலைக்கழகம்
பணிஅமைதி செயல்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
அப்தி பரா சிர்டன் சையது
விருதுகள்ரைட் லவ்லிவுட் விருது (2008)
கிளிண்டன் பிரபஞ்ச குடிமகன் விருது (2009)

ஆசா காஜி எல்மி (Asha Haji Elmi)(பிறப்பு 1962) என்பவர் சோமாலிய அரசியல்வாதியும் அமைதி ஆர்வலரும் ஆவார். ஆகத்து 2012 நிலவரப்படி, இவர் சோமாலியாவின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.

பின்னணி

[தொகு]

எல்மி 1962ஆம் ஆண்டு சோமாலியாவில் பிறந்தார். இவர் காபர் கிதிரின் சலீபன் துணை குலத்தைச் சேர்ந்தவர்.[1]

தனது உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக, எல்மி சோமாலி தேசியப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். இவர் அமெரிக்கச் சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

எல்மி, சோமாலியாவின் முன்னாள் பிரதமரும், பிரபலத் தொழிலதிபருமான அப்தி பரா சிர்டன் சையத்தை மணந்தார்.[2]

தொழில்

[தொகு]

அமைதி செயல்பாடு

[தொகு]

2000களில், சோமாலிய அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்காக எல்மி ஆறாவது குல பெண்கள் இயக்கத்தை உருவாக்கினார். பின்னர் இவர் ஆகத்து 29, 2004 அன்று இடைக்காலக் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவியில் இவர் 2009 வரை பணியாற்றினார்.[3]

எல்மி, 1992ஆம் ஆண்டு சோமாலிய உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட சோமாலி பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்போம் அமைப்பின் நிறுவனர் ஆவார்.[4][5]

மேலும், சோமாலியாவிலும் பிற பகுதிகளிலும் பெண் உறுப்பு சிதைப்பிற்கு எதிரான இவரது செயல்பாட்டிற்காகப் பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். உலகெங்கிலும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அடிக்கடி பயணம் செய்து, உள்ளூர் அரசியல் நிலைமைகள், பெண் உறுப்பு சிதைப்பின் விளைவுகள் குறித்து உரைகளை வழங்குகிறார்.[6]

கூட்டாட்சி நாடாளுமன்றம்

[தொகு]

ஆகத்து 2012-இல், எல்மி சோமாலியாவின் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

விருதுகள்

[தொகு]

எல்மி தனது அமைதிப் பணிக்காக ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 2008ஆம் ஆண்டில், "போரினால் பாதிக்கப்பட்ட தனது நாட்டில் அமைதியினையும் நல்லிணக்கச் செயல்பாட்டில் பெண்களின் பங்களிப்பைப் பெரும் தனிப்பட்ட ஆபத்தில் தொடர்ந்து வழிநடத்தியதற்காக" ரைட் லைவ்லிவுட் விருதைப் பெற்றார்.[7] செப்டம்பர் 2009-இல், கிளிண்டன் பிரபஞ்ச குடிமகன் விருதிற்கு ஐந்து பரிந்துரைக்கப்பட்டு பரிசுபெற்றவர்களில் இவரும் ஒருவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 THE OFFICIAL LIST OF THE NEW MEMBERS OF SOMALI PARLIAMENT IN 2012-2016 பரணிடப்பட்டது சூன் 24, 2013 at the வந்தவழி இயந்திரம்
  2. . 6 October 2012. https://af.reuters.com/article/commoditiesNews/idAFL6E8L60GZ20121006. 
  3. "Selected Members of the Transitional Federal Parliament of Somalia (275) 29.08.2004 - 2009" (PDF). Somali-CivilSociety.org. 2004-08-29. Archived from the original (PDF) on September 13, 2015. Retrieved 2007-02-07.
  4. "Somali Women Hope To Affect Khartoum Peace Talks". US Department of State. 2006-10-16. Archived from the original on 2008-02-13. Retrieved 2007-02-08.
  5. "Save Somali Women and Children". Archived from the original on 2006-08-25. Retrieved 2007-02-08.
  6. "Somalian Human Rights Activist Soffa Lecturergjnregreng". University of Wisconsin–Madison. 2006-09-18 இம் மூலத்தில் இருந்து 2007-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070504010724/http://www.international.wisc.edu/news/newsitems/detail.asp?idEventsNews=1344. 
  7. "Asha Hagi Elmi". The Right Livelihood Award (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-01-07.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசா_காஜி_எல்மி&oldid=4206764" இலிருந்து மீள்விக்கப்பட்டது