ஆசாத் அலி கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசாத் அலி கான்
ஆசாத் அலி கான் 2009 ஆம் ஆண்டில்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு1937
அல்வார், இந்தியா
இறப்பு14 ஜூன் 2011 (73 ஆம் வயதில்)
புது தில்லி, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி செவ்வியல் இசை
இசைக்கருவி(கள்)ருத்ர வீணை

ஆசாத் அலி கான் (1 டிசம்பர் 1937 - 14 ஜூன் 2011) ஓர் இந்திய ருத்ர வீணை இசைக்கலைஞர் ஆவார். இவர் இந்தியாவின் சிறந்த ருத்ர வீணை வாசிப்பவராக 'தி இந்து' நாளிதழால் வர்ணிக்கப்பட்டார். இவருக்கு 2008 ஆண்டில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.[1]

இளமைக்காலம்[தொகு]

கான் 1937 ஆம் ஆண்டு ஆல்வாரில் பிறந்தார். அவரது குடும்பத்தில் ருத்ர வீணை வாசிப்பவர்களில் இவர் ஏழாவது தலைமுறை ஆவார்.[2][3] எனவே கான் இசைச் சூழலில் வளர்ந்தார் மேலும் ஜெய்ப்பூரில் உள்ள பீங்கர் கரானாவில் (ருத்ர வீணை வாசிப்பின் ஸ்டைலிஸ்டிக் பள்ளி) பதினைந்து ஆண்டுகளாக குரலிசை கற்றுக் கொண்டார்.

பாரம்பரியம்[தொகு]

அவரது மூதாதையர்கள் 18 ஆம் நூற்றாண்டில் ராம்பூர், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அரசவைகளில் அரச இசைக்கலைஞர்களாக இருந்தனர்.[4][5] அவரது தாத்தா ரஜப் அலி கான் ஜெய்ப்பூரில் அரசவை இசைக்கலைஞர்களின் தலைவராக இருந்தார்.[5][6] அவரது தாத்தா முஷாரப் கான் (இறப்பு 1909) அல்வாரில் அரசவை இசைக்கலைஞராக இருந்தார், மேலும் 1886 இல் லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.[5][7] கானின் தந்தை சாதிக் அலி கான் ஆல்வார் அரசவையிலும், ராம்பூர் நவாப்பிலும் 35 ஆண்டுகள் இசைக்கலைஞராக இருந்தார்.[7][8]

இசை வாழ்க்கை[தொகு]

ருத்ர வீணையைத் தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்த சிலருள் கானும் ஒருவராவார். தருபத் பள்ளியின் நான்கு பிரிவுகளில் ஒன்றான கந்தார் பாணியில் வாசிக்குப்பவர்களுள் எஞ்சியிருப்பவர் இவரே.[4][5][9] அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் இத்தாலி மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார், மேலும் அமெரிக்காவில் இசை வகுப்புகளை நடத்தினார். கான் அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார், டெல்லி பல்கலைக்கழகத்தில் இசை மற்றும் நுண்கலை பீடத்தில் 17 ஆண்டுகள் சிதார் கற்பித்தார், மேலும் அவர் ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்தார்.[9][10] கானின் மாணவர்களில் அவரது மகன் ஜக்கி ஹைதர், கார்ஸ்டன் விக்கே, கொல்கத்தாவைச் சேர்ந்த பிக்ரம்ஜீத் தாஸ், ஜோதி ஹெக்டே மற்றும் பாடகர் மதுமிதா ரே ஆகியோர் அடங்குவர்.[11][12] இந்தியாவின் சிம்லாவைச் சேர்ந்த டாக்டர் கேசவ் ஷர்மாவும் சிதார் மற்றும் துருபத் ஆகியவற்றைக் கற்ற அவரது சீடராக பல ஆண்டுகள் இருந்தார். ருத்ர வீணையைப் படிப்பதில் இந்தியர்களிடையே விருப்பமின்மை மற்றும் இந்திய மாணவர்களைக் காட்டிலும் அதிகமான வெளிநாட்டு மாணவர்களைக் கொண்டிருப்பதை கான் விமர்சித்தார். ஷியா முஸ்லீமான கான் சிவபெருமானால் உருவாக்கப்பட்டதாக அவர் நம்பிய இசைக்கருவியான ருத்ர வீணையைப் பாதுகாப்பதில் ஈடுபட்டார்.

விருதுகள்[தொகு]

1977 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் 2008 ஆம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலால் வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருது உட்பட பல தேசிய விருதுகளை கான் பெற்றார்.[4][13][14]

மரணம்[தொகு]

கான் 14 ஜூன் 2011 அன்று புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மரணமடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. Kinnear, Michael S. (1985). A discography of Hindustani and Karnatic music. Greenwood Press. பக். 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-313-24479-0. https://books.google.com/books?id=m9ZHAAAAMAAJ&q=%22Asad+Ali+Khan%22. 
  3. Tandon, Aditi (2005-04-26). "Preserving the fading tradition of rudra veena". The Tribune இம் மூலத்தில் இருந்து 11 February 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090211014349/http://tribuneindia.com/2005/20050427/cth1.htm. 
  4. 4.0 4.1 4.2 Massey, Reginald (1996). The Music of India. Abhinav Publications. பக். 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7017-332-9. https://books.google.com/books?id=yySNDP9XVggC&pg=PA144. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Artiste profiles" (PDF). Nagaland University. June 2008. Archived (PDF) from the original on 26 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-21.
  6. Miner, Allyn (2004). Sitar and Sarod in the 18th and 19th Centuries. Motilal Banarsidass. பக். 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-1493-2. https://archive.org/details/sitarsarodin18th00mine. 
  7. 7.0 7.1 Bor, Joep; Bruguiere, Philippe (1992). Masters of Raga. Berlin: Haus der Kulturen der Welt. பக். 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-8030-0501-9. https://books.google.com/books?id=LMfYGwAACAAJ. 
  8. "While my veena gently weeps". The Financial Express. 2006-10-01. http://www.financialexpress.com/news/while-my-veena-gently-weeps/179265/. 
  9. 9.0 9.1 "Profound notes". தி இந்து. 2006-02-18 இம் மூலத்தில் இருந்து 2007-12-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071206044536/http://www.hindu.com/mp/2006/02/18/stories/2006021802180300.htm. 
  10. Sharma, S.D. (2006-10-29). "Sole exponent of Rudra Veena". The Tribune. http://www.tribuneindia.com/2006/20061030/cth2.htm. 
  11. "Rudra veena exponent Ustad Asad Ali Khan passes away". Daily News and Analysis. Press Trust of India. 14 June 2011. http://www.dnaindia.com/india/report_rudra-veena-exponent-ustad-asad-ali-khan-passes-away_1554898. 
  12. Bhatia, Ravi (2008-04-20). "Artist's passion for female faces". The Tribune. http://www.tribuneindia.com/2008/20080421/delhi.htm. 
  13. "Padma Awards". Ministry of Communications and Information Technology (India). பார்க்கப்பட்ட நாள் 18 June 2011.
  14. Sengupta, Debatosh. "Image Number: D-2488". National Informatics Centre. Archived from the original on 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-03-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_அலி_கான்&oldid=3741831" இலிருந்து மீள்விக்கப்பட்டது