ஆசாத்து உல்லா சா
Appearance
ஆசாத்து உல்லா சா | |
---|---|
உறுப்பினர், சம்மு காசுமீர் சட்டப் பேரவை | |
பதவியில் 1977–1983 | |
தொகுதி | குப்வாரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1926 குப்வாரா சம்மு காசுமீர் இராச்சியம் |
இறப்பு | 2004 குப்வாரா சம்மு காசுமீர் மாநிலம் |
அரசியல் கட்சி | சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி |
துணைவர் | பக்தவார் பேகம் |
ஆசாத்து உல்லா சா (Assad Ullah Shah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1977 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை சம்மு காசுமீர் மாநிலத்தின் குப்வாரா தொகுதில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] குப்வாரா தேசிய மாநாட்டிற்கு தலைவராகவும் இவர் இருந்தார். காசுமீர் வெளியேறு இயக்கத்தின் உறுப்பினராகவும், சேக் அப்துல்லாவுக்கு நெருக்கமானவராகவும் ஆசாத்து உல்லா சா இருந்தார். பக்தவார் பேகம் என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]ஆசாத்து உல்லா சா தனது அரசியல் வாழ்க்கையை காசுமீர் வெளியேறு இயக்கத்தின் மூலம் தொடங்கினார். இதற்காக ஐந்து ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.[2] 1977 ஆம் ஆண்டில் இவர் சம்மு காசுமீரின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kupwara". Outlook. 16 September 2002. https://www.outlookindia.com/website/story/kupwara/217248.
- ↑ "🗳️ Assad Ullah Shah, Kupwara Assembly Elections 1977 LIVE Results | Election Dates, Exit Polls, Leading Candidates & Parties | Latest News, Articles & Statistics | LatestLY.com". LatestLY (in ஆங்கிலம்). Retrieved 2021-06-25.