ஆசாதி பூஜை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசாதி பூஜை
அனுசரிப்புகள்ஜார்கண்ட்
நாள்ஆசாதி (ஜூன்)
நிகழ்வுஒவ்வொரு ஆண்டும்

ஆசாதி பூஜை என்பது சார்க்கண்டு மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. ஆசாதி (தமிழில்: ஆடி) மாதத்தில் அதற்கு முன்பான மழைக்காலத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீர் ஆறுகளில் நிறைந்து புதுப்புனலாக பாய்ந்து வந்து பூமியை மகிழ்வித்து அதன்மூலம் விவசாய நிலங்களில் செழுமையும் நல்ல அறுவடையும் கிடைப்பதற்காக நாற்றுகளை விதைப்பதற்கு முன் ஆசாத் மாதத்தில் இந்த திருவிழா அனுசரிக்கப்படுகிறது. இது சார்க்கண்டின் சதன் மற்றும் பஹான் பழங்குடிகளாலும் பிற பழங்குடிகளாலும் கொண்டாடப்படுகிறது.[1][2]

கொண்டாட்டம்[தொகு]

இது ஆங்கில ஜூன் மற்றும் தமிழ் ஆடி மாதங்களுக்கு இணையான ஆசாத் மாதத்தின் ஆரம்பத்தில்  கொண்டாடப்படுகிறது. இயற்கை நல்ல மழையை  தந்து மக்கள் பயிரிடுவதை ஆசிர்வதித்து அறுவடையை பெருகப்பண்ண வேண்டி நெல் நாற்றுகளை விதைப்பதற்கு முன் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில் மக்கள் கோழி அல்லது ஆட்டை பலியிட்டு, தங்கள் வீடுகளின் முற்றத்தில் சூரியனுக்கு தப்பான் எனப்படும் அவர்களே தயாரிக்கும் சாராயத்தையும்[1][3] படையலிட்டு வழிபடுகிறார்கள். மேலும் அவர்களால் புனிதமானதாக கருதப்படும் அத்தி மரத்தடியில் நீரூற்றி நல்ல மழை மற்றும் அறுவடைக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். பஹான் இனத்தை சேர்ந்த மக்கள் நல்ல மழை மற்றும் அறுவடைக்காக சேவல் மற்றும் செம்மறி ஆடுகளையும் பலியிட்டு வேண்டுதல் செய்து வருகின்றனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாதி_பூஜை&oldid=3650362" இருந்து மீள்விக்கப்பட்டது