ஆசம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகமது ஆசம் கான்
Mohammad Azam Khan 1.jpg
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
23 மே 2019
முன்னவர் நைபால் சிங்
தொகுதி இராம்பூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 பிப்ரவரி 2002
முன்னவர் அப்ரோஸ் அலி கான்
தொகுதி இராம்பூர் மக்களவைத் தொகுதி
பதவியில்
9 சூன் 1980 – 28 அக்டோபர் 1995
முன்னவர் மன்சூர் அலி கான்
பின்வந்தவர் அப்ரோஸ் அலி கான்
தொகுதி இராம்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 14 ஆகத்து 1948 (1948-08-14) (அகவை 71)[1]
இராம்பூர், இராம்பூர் மாவட்டம், ஐக்கிய மாகாணம்
தற்போதைய உத்தரப் பிரதேசம்)
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி சமாஜ்வாதி கட்சி[1]
பிற அரசியல்
சார்புகள்
ஜனதா கட்சி
ஜனதா தளம்
லோக் தளம் &
மதச்சார்பற்ற ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) தசீன் பாத்திமா[1]
பிள்ளைகள் 2
படித்த கல்வி நிறுவனங்கள் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்[2]
தொழில் வழக்கறிஞர், அரசியல்வாதி

ஆசம் கான் (Azam Khan) (பிறப்பு: 14 ஆகஸ்டு 1948), இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞரும் ஆவார். இவர் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத்தலைவர்களில் ஒருவரும், உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக 9 சூன் 1980 முதல் 28 அக்டோபர் 1995 வரை செயல்பட்டவர்.[1][2] இவர் இராம்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 9 முறை உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் சமாஜ்வாதி கட்சி ஆண்ட உத்தரப் பிரதேச அரசில் மூத்த அமைச்சராக விளங்கியவர்.

சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலராக இருந்த ஆசம் கான் 17 மே 2009 அன்று பதவியிலிருந்து விலகினார். [3] 2009 மக்களவைத் தேர்தலில் ஆசாம் கான், ஜெயப்பிரதாவை எதிர்த்துப் போட்டியிட்டு ஆபாசமாக பேசியதால் சர்ச்சைக்குள் சிக்கினார், மேலும் 30,000 வாக்கு வித்தியாசத்தில் ஜெயப்பிரதாவிடம் தோற்றார். [4] இதனால் ஆசாம் கான் 24 மே 2009 அன்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.[5] இருப்பினும் சமாஜ்வாதி கட்சி ஆசாம் கானை 4 திசம்பர் 2010-இல் மீண்டும் கட்சியில் மீண்டும் இணைத்துக் கொண்டது.[6] 2019 மக்களவைத் தேர்தலில் ஆசாம் கான் இராம்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சி சார்பாக மக்களைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

பிணக்குகள்[தொகு]

மக்களவையில் முத்தலாக் மசோதா மேல் நடைபெற்ற விவாதத்தின் போது, சபாநாயகர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் ரமா தேவியைப் பார்த்து ஆசம் கான், ஆபாசச் சொற்களால் பேசியதை கண்டித்த அனைத்து கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள், ஆசாம் கானை, சபையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என குரல் எழுப்பினர்.[8] ஆசாம் கானும் தனது தவறை உணர்ந்து மக்களவையில் நிபந்தனையற்ற மன்னிப்ப்புக் கோரினார். [9] [10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Member Profile". U.P. Legislative Assembly website. http://uplegisassembly.gov.in/ENGLISH/pdfs/members_profile/37.pdf. பார்த்த நாள்: 27 July 2019. 
  2. 2.0 2.1 "Candidate affidavit". My neta.info. http://myneta.info/up2012/candidate.php?candidate_id=1985. பார்த்த நாள்: 27 July 2019. 
  3. "Azam Khan resigns as SP gen secy". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/city/lucknow/Azam-Khan-resigns-as-SP-gen-secy/articleshow/4544405.cms. பார்த்த நாள்: 12 February 2013. 
  4. Bhatt, Virenda Nath (10 May 2009). "Rampuri knives out: Yadav tears into Khan". Express India. http://archive.indianexpress.com/news/rampuri-knives-out-yadav-tears-into-khan/457002/. 
  5. "SP expels Azam Khan for six years", The Hindu. 25 May 2009
  6. "Azam Khan returns to SP". The Indian Express. 5 December 2010. http://archive.indianexpress.com/news/azam-khan-returns-to-sp/720565/0. 
  7. https://m.timesofindia.com/city/bareilly/sp-bsp-rld-combine-names-azam-khan-as-candidate-from-rampur/articleshow/68552951.cms
  8. ANI (25 July 2019). "Uproar in Lok Sabha over SP MP Azam Khan's comment on BJP MP Rama Devi(in the chair) , he said 'Aap mujhe itni acchi lagti hain ki mera mann karta hai ki aap ki aankhon mein aankhein dale rahoon'. Ministers ask Khan to apologize".
  9. மன்னிப்பு கேட்டார் எம்.பி. ஆசம் கான்..
  10. பாஜக பெண் எம்.பி.யை ஆபாசமாக வர்ணித்த சமாஜ்வாடி எம்.பி. பாராளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசம்_கான்&oldid=2937932" இருந்து மீள்விக்கப்பட்டது