ஆங்கிலத்தில் பாலினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒவ்வொரு பெயர்ச்சொல்லும் ஆண், பெண் அல்லது நடுநிலை எனப் பண்டைய ஆங்கிலத்தில் இருந்தன. இடைக்கால ஆங்கிலத்திலும் அந்த நிலை தொடர்ந்தது. நவீன ஆங்கிலம், இயற்கை தொடர்பானவற்றிற்கும் பெயர்கள் மற்றும் பிரதிப்பெயர்களை (he மற்றும் she போன்றவை) பயன்படுத்துகிறது. பாலின வேறுபாடு அற்றவைகளுக்கும் விலங்குகளுக்கும் பொதுவான பிரதிபெயர்ச்சொல் ஒன்றன்பால் (it, they போன்றவை) பயன்படுத்தபடுகிறது. கப்பல்கள் மற்றும் விமானங்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தேசிய அரசுகளை குறிப்பிடும் போது பெண்பால் பிரதிபெயர்கள் சில சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன.[1]

ஆங்கிலத்தில் பாலினம் பயன்பாட்டின் சில அம்சங்கள், பொதுப் பாலின பயன்பாட்டை நோக்கி நகர்கிறது. மேலும் இவை பாலினம் குறிப்பிடப்படாத சூழ்நிலைகளிலும் அவை நடுநிலையாக படர்கை ஒருமை (third person singular) எனப் பயன்படுத்துவதற்கும் பொருந்தும். அதேபோல சில பெண்பால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்து (authoress மற்றும் poetess போன்றவை) ஆண்பால் பெயர்சொற்களை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

சான்றுகள்[தொகு]

  1. Stevenson, Angus (ed.) (2010). Oxford Dictionary of English, 3rd Ed., Oxford University Press, Oxford, New York, p. 598. ISBN 978-0-19-957112-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கிலத்தில்_பாலினம்&oldid=3900225" இலிருந்து மீள்விக்கப்பட்டது