ஆங்கரி பேர்ட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆங்கரி பேர்ட்ஸ் (பின்னர் ஆங்கரி பேர்ட்ஸ் கிளாசிக் என மறுபெயரிடப்பட்டது) என்பது 2009 ஆம் ஆண்டு ரோவியோ என்டர்டெயின்மென்ட் உருவாக்கிய புதிர் நிகழ்பட விளையாட்டு ஆகும். சிறகு இல்லாத பறவைகளின் ஓவியத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு 2009 ஆம் ஆண்டு திசம்பரில் முதன்முதலில் ஐஓஎஸ், மேமோ சாதனங்களுக்காக வெளியிடப்பட்டது.[1][2]அன்றிலிருந்து 12 மில்லியனுக்கும் அதிகமான விளையாட்டின் பிரதிகள் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரில் வாங்கப்பட்டுள்ளன.[3] பின்னர் பிற தொடுதிரை அடிப்படையிலான  நுண்ணறிபேசிகளுக்காக வடிவமைக்கப்பட்டன. குறிப்பாக  ஆண்டிராய்ட், சிம்பியன், விண்டோசு மற்றும் பிளாக்பேரி10 ஆகிய சாதனங்களில் விளையாடுவதற்காக வடிவமைக்கப்பட்டன. 2015 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இந்த விளையாட்டின் தொடர்ச்சியான ஆங்கரி பேர்ட்ஸ் 2 ஐஓஎஸ், ஆண்டிராய்ட் இயங்குதளங்களிற்காக வெளியிடப்பட்டது.

ஆங்கிரி பேர்ட்ஸ் கிளாசிக்
ஆக்குனர் ரோவியோ எண்டர்டைமண்ட்
வெளியீட்டாளர் சிலிங்கோ
ரோவியோ எண்டர்டைமண்ட்
வடிவமைப்பாளர் ஜாக்கோ லிசாலோ
ஓவியர் டூமஸ் எரிகொய்னின்
இசையமைப்பாளர் எரி புல்கினின்
தொடர் ஆங்கரி பேர்ட்ஸ்
வெளியான தேதி மேமோ, ஐஓஎஸ்
December 11, 2009
ஆண்டிராய்ட்
October 19, 2010
விண்டோஸ் போன்
June 2011
பாணி புதிர் நிகழ்பட விளையாட்டு


ஆங்கரி பேர்ட்ஸ் கதாபாத்திரங்களால் 2016 இல் அனிமேசன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கேலிச்சித்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2014 சனவரி நிலவரப்படி அனைத்து இயங்குதளங்களிலும் ஆங்கரி பேர்ட்ஸ் தொடர்கள் சிறப்பு பதிப்புகள் உட்பட 2 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன.[4]

விளையாடும் முறை[தொகு]

ஆங்கரி பேர்ட்ஸின் முட்டைகள் பச்சை நிற பன்றிகளால் திருடப்பட்டுள்ளன.[5] விளையாடுபவர் ஆங்கரி பேர்ட்ஸின் பல வண்ணப் பறவைகளை கட்டுப்படுத்தி அவற்றை மீட்டெடுக்க வேண்டும். எதிரி பன்றிகள் மரம், கண்ணாடி,  கல் போன்ற பல்வேறு பொருட்களால் ஆன கட்டமைப்புகளில் தங்கவைக்கப்பட்டிருக்கும்.[6] விளையாடுபவர் கவணில் பறவைகளை பயன்படுத்தி பன்றிகளை நேரடியாகத் தாக்க அல்லது அவற்றின் சுற்றியுள்ள கட்டமைப்புகளை சேதப்படுத்த வேண்டும். எதிரில் உள்ள அனைத்து பன்றிகளையும் அகற்றுவதே விளையாட்டின் நோக்கம் ஆகும். விளையாடுபவர் கவணை இழுப்பதன் மூலம் பறவையின் பயணத்தின் கோணத்தையும் சக்தியையும் அமைக்கலாம். விளையாட்டில் பல்வேறு வகையான பறவைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை நிறம் மற்றும் வடிவத்தால் வேறுபடுகின்றன.[7] விளையாட்டில் முன்னேறும்போது கூடுதல் வகையான பறவைகள் கிடைக்கின்றன. சில பறவைகள் குறிப்பிட்ட பொருட்களுக்கு எதிராக சிறப்பு திறன்களைக் கொண்டுள்ளன. பன்றிகளும் வேறுபடும். சிறிய பன்றிகள் பலவீனமாகவும், எளிதில் வெல்லப்பட கூடியவையாகவும் இருக்கும். பெரிய பன்றிகள் அதிக சேதத்தைத் தாங்க கூடியவையாக வீழ்த்த கடினமாகவும் இருக்கும். சில பன்றிகள் தொப்பிகள் அல்லது கவசங்களை அணிந்து சேதத்தை எதிர்க்கின்றன. ஒவ்வொரு நிலைகளிலும் குறிப்பிட்ட அளவு பறவைகளினால் அனைத்து பன்றிகளும் அகற்றப்பட்டால் அந்த நிலை முடிவடைந்து அடுத்த நிலை திறக்கப்படும்.

வரவேற்பு[தொகு]

2010 ஆம் ஆண்டு பிப்ரவரி இல் ஐக்கிய இராச்சியத்திற்கான ஆப் ஸ்டோரில் அதிக விற்பனையான கட்டண பயன்பாடாக இடம்பிடித்தது.[8] சில வாரங்களுக்குப் பிறகு ஐக்கிய அமெரிக்கா ஆப் ஸ்டோரில் அக்டோபர் 2010 வரை முதலிடத்தை பெற்றது.[9] அந்த விளையாட்டு வெளியிடப்பட்டதில் இருந்து ஆப்பிள் ஐஓஎஸ் இற்கான இலவச மற்றும் வரையறுக்கப்பட்ட பதிப்பு 11 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி முழு அம்சங்களுடன் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் பதிப்பு 7 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.[10] விளையாட்டின் ஆண்ட்ராய்டு பதிப்பு வெளியான முதல் 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்டது.[11] இலவச ஆண்ட்ராய்டு பதிப்பில் தோன்றும் விளம்பரங்களிலிருந்து ரோவியோ நிறுவனம் மாதத்திற்கு சுமார் 1 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயைப் பெறுகிறது.[12] 2010 ஆம் ஆண்டு திசம்பரில் ஆங்கரி பேர்ட்ஸ் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவை முன்னிட்டு ரோவியோ இந்த விளையாட்டு ஐஓஎஸ் சாதனங்களில் 12 மில்லியனுக்கும் அதிகமாகவும், ஆண்டிராய்ட் சாதனங்களில் 10 மில்லியனுக்கும் அதிகமாகவும், 50 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தது.[13][14]2014 சனவரிக்குள் ஆங்கரி பேர்ட்ஸ் தொடர் தொடர் 2 பில்லியன் பதிவிறக்கங்களை எட்டியுள்ளது. 2011 கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும், பல்வேறு ஆங்கரி பேர்ட்ஸ்  விளையாட்டுகளின் 6.5 மில்லியன் பிரதிகள் அனைத்து  தளங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டன.[15]

விருதுகள்[தொகு]

2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எசுப்பானியாவில் பார்சிலோனாவில் நடைபெற்ற 6 வது ஆண்டு சர்வதேச மொபைல் கேமிங் விருதுகளில் சிறந்த விளையாட்டுக்கான பரிந்துரையைப் பெற்றது.[16] 2010 ஆம் ஆண்டு ஆங்கிரி பேர்ட்ஸ்  ஐ. ஜி. என் இன் சிறந்த எல்லா நேரத்திலும்  நான்காவது ஐபோன் விளையாட்டாக பெயரிடப்பட்டது.[17] 2011 ஆம் ஆண்டு ஏப்ரலில் பெஸ்ட் கேம் அப் மற்றும் அப் ஒப் த இயர் ஆகிய விருதுகளை இங்கிலாந்தின் அப்பி விருதிகளில் வென்றது.[18] 2011 ஆம் ஆண்டு வெப்பி விருதுகளில் கைப்பேசி சாதனங்கள் சிறந்த விளையாட்டுக்கான விருதினை வென்றது.[19]

குறிப்புகள்[தொகு]

 1. "Angry Birds Review - iPhone Review at IGN". web.archive.org. 2010-05-04. Archived from the original on 2010-05-04. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 2. "Angry Birds - maemo.org - Talk". talk.maemo.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 3. "Angry Birds Hits 42 Million Free and Paid Downloads". web.archive.org. 2010-12-18. Archived from the original on 2010-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 4. "Two billion downloads? We're just getting started, says Angry Birds creator Rovio | Features | Edge Online". web.archive.org. 2014-01-25. Archived from the original on 2014-01-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 5. "Mobile Apps information, news, and howto advice". Macworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 6. Rovio Mobile. Angry Birds. Scene: Achievements screen. Icepicker: 5000 glass blocks smashed
 7. "Mobile Apps information, news, and howto advice". Macworld (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 8. Sandstrom, Gustav (2010-05-12). "Angry Birds Smartphone App Takes Off For Rovio". WSJ (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 9. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
 10. "How did Angry Birds become a blockbuster? Rovio video interview and transcript | Mobile Web Go". web.archive.org. 2010-09-19. Archived from the original on 2010-09-19. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 11. "[Update] Angry Birds is Free, & It's Out!". Phandroid - Android News and Reviews (in அமெரிக்க ஆங்கிலம்). 2010-10-15. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 12. "Angry Birds Hits 42 Million Free and Paid Downloads". web.archive.org. 2010-12-18. Archived from the original on 2010-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 13. "Angry Birds hits 50 million downloads, creates simple in-app purchases on Android". TechCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 14. "Angry Birds Hits 42 Million Free and Paid Downloads". web.archive.org. 2010-12-18. Archived from the original on 2010-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 15. "Angry Birds downloaded 6.5M times on Christmas Day". GameSpot (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 16. "imgawards - Previous years : 2008". web.archive.org. 2010-11-02. Archived from the original on 2010-11-02. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 17. "The Top 25 iPhone Games - Wireless Feature at IGN". web.archive.org. 2010-12-16. Archived from the original on 2010-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 18. Whitworth, Dan (2011-12-04). "Angry Birds triumphs at Appy Awards". BBC Newsbeat (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
 19. "Home" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கரி_பேர்ட்ஸ்&oldid=3484855" இலிருந்து மீள்விக்கப்பட்டது