உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்லாந்து சிப்பிக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்லாந்து சிப்பிக் கழகம்
உருவாக்கம்1931
வகைகற்றறிந்த சமூகம், அறக்கட்டளை
துறைநத்தையினவியல், சிப்பியோட்டியல்
வலைத்தளம்www.aucklandshellclub.net.nz

ஆக்லாந்து சிப்பிக் கழகம் (Auckland Shell Club), அல்லது ஆக்லாந்து அருங்காட்சியக நிறுவனத்தின் சிப்பியியல் பிரிவு என்பது மெல்லுடலிகள், மெல்லுடலிகளின் ஓடுகள் (சிப்பிகள்) பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள நியூசிலாந்து அமைப்பாகும்.

வரலாறு

[தொகு]

ஆக்லாந்து சிப்பிக் கழகம், முதன்முதலில் 1931இல்,[1] ஆக்லாந்து கழக அருங்காட்சியகத்தின் சிப்பியியல் பிரிவாகத் தொடங்கப்பட்டது.[2] இப்பிரிவு ஆக்லாந்து போர் நினைவு அருங்காட்சியகத்திற்குள் செயல்படும் சிறப்பு ஆர்வக் குழுக்கள் அல்லது அமைப்புகளாக இருந்தன. இவற்றுள் இந்தச் சிப்பிக் கழகமே மிகவும் பழமையானதாகும்.[3] இது நியூசிலாந்தில் உள்ள மூன்று சிப்பிக் கழகங்களில் ஒன்றாகும்.[4]

இக்கழகத்தின் முதல் ஒருங்கிணைப்பாளர் பேடன் பவல் (மெல்லுடலியலாளர்) ஆவார். பவல் பள்ளி நேரத்திற்குப் பிறகு வாராந்திரக் கூட்டங்களை நடத்தினார். இதில் ஆக்லாந்தைப் சேர்ந்த பல பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். மெல்லுடலிகளைத் தேடுவதற்காக ஹவ்ராக்கி வளைகுடா தீவுகள், தகாபுனாவிலுள்ள மான் டெசிர் பாரை நோக்கி பவல் களப்பயணங்களை மேற்கொண்டார். மேலும், ஆக்லாந்து துறைமுகத்தின் அடிப்பகுதியைத் தோண்டி ஒரு துறைமுகக் கணக்கெடுப்பையும் நடத்தினார். கழக உறுப்பினர்கள் இந்தத் தோண்டப்பட்ட மாதிரிகள் மற்றும் மணலிலிருந்து சிறிய சிப்பிகளைப் பிரித்தெடுத்தனர். சார்லசு பிளெமிங் (பறவையியலாளர்), பீட்டர் புல், ரிச்சர்ட் டெல் ஆகியோர் தங்கள் பதின்ம வயதிலேயே இக்கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். புல் பிற்காலத்தில் ஒரு பறவையியலாளராகவும் சூழியலாளராகவும் மாறினார். டெல் டொமினியன் அருங்காட்சியகத்தில் மெல்லுடலிகளின் பொறுப்பாளராக உயர்ந்தார். பிளெமிங் தொல்லுயிர் புவியியல் மற்றும் அடுக்குப்பாறையியல் ஆகியவற்றை ஆய்வு செய்யும் ஒரு தொல்லுயிரியலாளரானார்.[5] சிப்பிக் கழகத்தின் மூலம், சார்லசு பிளெமிங் இராபர்ட் பல்லா, அருங்காட்சியகத்தின் இயக்குநர் கில்பர்ட் ஆர்ச்சி ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். இவ்விருவரும் இவரது பிற்கால அறிவியல் வாழ்க்கைக்கு முக்கியமானவர்களாக அமைந்தனர். பவல் அப்போது 14 வயதே நிரம்பிய பிளெமிங்கை வாங்கனுய் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்று, என்றி சுட்டர் என்பவரின் சேகரிப்பில் இருந்த பிளையோசீன் வகை மாதிரிகளைக் காண்பித்தார். மேலும் 1933-இல், இந்த இளவயது இயற்கை ஆர்வலர் பவலின் சதாம் தீவுகள் நோக்கிய பயணத்திலும் உடன் சென்றார்.[6]

இக்கழகத்தின் இரண்டாவது ஒருங்கிணைப்பாளர் செக் நாட்டைச் சேர்ந்த மெல்லுடலியலாளர் வால்டர் ஆலிவர் செர்னோஹோர்சுகி ஆவார்.[7]

இக்கழகத்தின் கூட்டங்கள் ஆக்லாந்து போர் நினைவு அருங்காட்சியகத்தின் மெல்லுடலியல் துறையின் பிரத்யேகப் அரங்கில் நடைபெற்றன. இங்கு கழகத்தின் நூலகமும் செயல்பட்டது. சிப்பியியல் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்கள் 1980 அக்டோபரில் நடைபெற்றன. இதில் மான் டெசிர் விடுதியில் இரவு உணவும், வாங்கபரோவா தீபகற்பத்திற்கு ஒரு களப்பயணமும் மேற்கொள்ளப்பட்டன.[7] The jubilee celebrations of the Conchology Club was held in October 1980, with a dinner at the Mon Desir Hotel and a field trip to Whangaparaoa Peninsula.[6]

1962 முதல் 2014 வரை, இச்சிப்பிக் கழகம் பொய்ரியேரியா என்ற ஆய்விதழை வெளியிட்டது, இவ்வாய்விதழ் பல்லுயிர் பாரம்பரிய நூலகத்தில் கிடைக்கிறது.[8]

ஆக்லாந்து சிப்பிக் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நியூசிலாந்து சிப்பிக் கண்காட்சியில் பங்கேற்கிறது. இக்கண்காட்சி முறையே ஆக்லாந்து, வெல்லிங்டன் நகரங்களில் மாறி மாறி நடத்தப்படுகிறது.[9][10]

தற்போதைய மற்றும் முன்னாள் உறுப்பினர்கள்

[தொகு]
  • வில்மா எம். ப்ளோம்[11]
  • ஆல்பர்ட் யூஜின் புரூக்சு[12]
  • வால்டர் ஆலிவர் செர்னோகோர்சுகி[7]
  • ரிச்சர்ட் டெல்[2]
  • சார்லசு பிளெமிங் (பறவையியலாளர்)[5]
  • புரூசு ஹேவர்ட்[13]
  • மார்கரெட் எசு. மோர்லி[14]
  • வின்சுடன் பாண்டர்[5]
  • பேடன் பவல் (மெல்லுடலியலாளர்)[7]
  • கீத் ஆர்தர் ஜான் வைசு[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Abadia, Karina (1 May 2013). "Shells are a passion". Stuff (website). Retrieved 24 November 2022.
  2. 1 2 Beu, Alan; Marshall, Bruce; Ponder, Winston (2003). "Richard Kenneth (‘Dick’) Dell, 1920–2002: obituary, bibliography and a list of his taxa". Molluscan Research 23: 85–99.
  3. ↑ "Sections". Auckland War Memorial Museum. Retrieved 24 November 2022.
  4. ↑ Wassilieff, Maggy (12 June 2006). "Shellfish - Shell collecting". Te Ara: The Encyclopedia of New Zealand. Retrieved 24 November 2022.
  5. 1 2 3 Beechey, Des (December 2005). "Dr Bill Rudman and Dr Winston Ponder retire". Australasian Shell News (Malacological Society of Australasia) 127. http://www.malsocaus.org/docs/newsletter/MSA127.pdf. பார்த்த நாள்: 24 November 2022.
  6. 1 2 Mary McEwen (2005). Charles Fleming: Environmental Patriot (in ஆங்கிலம்). நெல்சன்: Potton & Burton. ISBN 1-877333-23-9. OL 12108137M. விக்கித்தரவு Q115763336.
  7. 1 2 3 4 Thwaites, I. G.; Gill, B. J.; Blom, W. (2015). "Walter Oliver Cernohorsky F.L.S. Surveyor, malacologist – 1927–2014" (in en). Papahou: Records of the Auckland Museum 50: 13–18. விக்கித்தரவு Q58628995. பன்னாட்டுத் தர தொடர் எண்:1174-9202. https://www.aucklandmuseum.com/discover/research/publications/records/vol50/cernohorsky-obit.
  8. ↑ Crowley, Bianca (22 October 2015). "From Scarborough to Svjatoj Nos: BHL's latest in-copyright additions". Biodiversity Heritage Library. Retrieved 24 November 2022.
  9. ↑ Mulligan, Jesse. "She seeks sea shells". https://www.rnz.co.nz/national/programmes/afternoons/audio/2553589/she-seeks-sea-shells.
  10. ↑ Cawley, Rose (1 May 2013). "Shells on show". https://www.stuff.co.nz/auckland/local-news/eastern-courier/8613125/Shells-on-show.
  11. ↑ "Newsletter - September 2013". Auckland Shell Club. Retrieved 25 November 2022.
  12. ↑ Blom, Wilma M. (2017). "Fossil and Recent molluscan types in the Auckland Museum Part 2: Polyplacophora and Scaphopoda" (in en). Papahou: Records of the Auckland Museum 52: 71-76. doi:10.32912/RAM.2018.52.5. விக்கித்தரவு Q104815052. பன்னாட்டுத் தர தொடர் எண்:1174-9202. https://www.aucklandmuseum.com/discover/research/publications/records/vol52/molluscan-types-2.
  13. ↑ "Newsletter - November 2003". Auckland Shell Club. Retrieved 25 November 2022.
  14. ↑ Bozetti, L; Sargent, Dennis M (2011). "A new species of Euprotomus (Gastropoda: Strombidae) from New Zealand and the Kermadec Islands". Visaya 3 (3): 23–27.
  15. ↑ Early, J. W. (2012). "Keith Arthur John Wise F.R.E.S. 1926–2012" (in en). Papahou: Records of the Auckland Museum 48: 107-114. விக்கித்தரவு Q58623386. பன்னாட்டுத் தர தொடர் எண்:1174-9202. https://www.jstor.org/stable/42905929.

வெளி இணைப்புகள்

[தொகு]