ஆக்ரா மாவட்ட மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்ரா மாவட்ட மருத்துவமனை (District Hospital, Agra) இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் அரசு நடத்தும் ஒரு மருத்துவமனையாகும். மகாத்மா காந்தி சாலை, சிப்பிட்டோலா, ஆக்ரா, உத்திரப்பிரதேசம் 282001 என்ற முகவரியில் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது.[1] ஆக்ரா மாவட்ட மக்களுக்கு இம்மாவட்ட மருத்துவமனை சேவையளிக்கிறது.

2016 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த மருத்துவமனையில் 100 பொதுப் படுக்கைகள், 12 அவசரச் சிகிச்சை படுக்கைகள் மற்றும் 6 தனியார் படுக்கைகள் என 112 படுக்கைகள் இருந்தன. பணிபுரியும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 160 ஆகும், 56 மருத்துவர்கள், 44 துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் 60 பேர் என்பது மொத்த பணியாளர்க்களின் வகைப்பாடு ஆகும். மருத்துவர்களில் 53 பேர் சிறப்பு நிபுணர்களாக இருந்தனர்.[2]

இம்மாவட்ட மருத்துவமனை இந்திய மருத்துவ குழுவின் சட்டம் 1956 இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆக்ராவில் உள்ள லேடி லியால் மருத்துவமனை ஆக்ரா மாவட்ட மருத்துவமனையுடன் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Government Hospitals in Agra
  2. "District Hospital, Agra". Archived from the original on 2018-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-11-19.