ஆக்ரா பேடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தா
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிஇந்தியா, இலங்கை, பாக்கித்தான்
தொடர்புடைய சமையல் வகைகள்இந்திய உணவுமுறை
கண்டுபிடிப்புதெரியவில்லை
முக்கிய சேர்பொருட்கள்சாம்பல் பூசணி, சர்க்கரை
வேறுபாடுகள்குங்குமப்பூ பெத்தா, திராட்சை பெத்தா, உலர் பெத்தா, சாக்கலேட் பெத்தா, தாம்பூலம் பெத்தா, உரோசா பெத்தா
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
~250 கலோரி

ஆக்ரா பேடா அல்லது பெத்தா (இந்தி: पेठा உச்சரிக்கப்படுகிறது [ˈpeːʈʰa] ) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் மென்மையான இனிப்பு மிட்டாய் ஆகும். இது நீற்றுப்பூசணி (குளிர்கால முலாம்பழம் அல்லது வெள்ளை பூசணி அல்லது இந்தி மற்றும் உருது மொழிகளில் பெத்தா என்றும் அழைக்கப்படுகிறது).[1][2] தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் இது தடியங்காய் மரப்பா என்று அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

பெத்தா செய்யச் சாம்பல் பூசணியைச் சிறு சிறு சதுர துண்டுகளாக வெட்டி, எலுமிச்சை சாற்றில் ஊறவைக்க வேண்டும். பின்னர் இதனை அவித்துச் சுவையூட்டப்பட்ட சர்க்கரை பாகில் ஊறவைக்க வேண்டும்.[3]

அதிகரித்து வரும் தேவையினால் புதுமையுடன், அசல் தயாரிப்பின் பல வகைகள் கிடைக்கின்றன. பல சுவையான வகைகள் கிடைக்கின்றன. எ.கா. குங்குமப்பூ பெத்தா, திராட்சை பெத்தா போன்றவை. உள்ளடக்கத்தின் அடிப்படையில் வேறு சில வகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று தேங்காய் கலந்தது, மற்றொன்று சில கொட்டைகள் கலந்து தயார் செய்யப்பட்டது. சில சமயங்களில் பெத்தாவில் மனத்திற்காக கேவ்டா வாசனைத் திரவியம் பயன்படுத்தப்படுகிறது.[4][5]

வரலாறு[தொகு]

சார்கண்ட்டு மற்றும் பீகார் போன்ற இடங்களில் ஓல் மற்றும் ஓல் கா முரப்பா போன்ற பல்வேறு பெயர்களில் பெத்தா இந்தியத் துணைக்கண்டத்திலிருந்ததாக கூறப்படுகிறது. இது சாஜகான் காலத்தில் முகலாய சமையலில் தோன்றியதாகவும், தாஜ்மகால் கட்டுமான தொழிலாளர்களுக்கு உணவளிக்கப் பயன்படுத்தப்பட்டது என்றும் புராணக்கதை உள்ளது. ஆனால் நுஸ்கா-இ-ஷாஜஹானி போன்ற சாஜகானின் சமையல் புத்தகங்களில் பெத்தா பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. முகலாயர்கள் துணைக்கண்டத்திற்கு வருவதற்கு முன்பு பெத்தாவை ஒத்த உணவுகள் இந்தியாவில் இருந்ததை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் முகலாயர்களின் இனிப்பு தனித்துவமானது, பால் மற்றும் மாவா நிறைந்த உணவுகள் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.[6][2][5][7]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • பேடா
  • மதுரா பேடா

மேற்கோள்கள்[தொகு]

  1. T. R. Gopalakrishnan Vegetable Crops கூகுள் புத்தகங்களில்
  2. 2.0 2.1 Sharma, Sudhirendar (2019-10-12). "Name, place, confection, thing" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/society/history-and-culture/name-place-confection-thing/article29657621.ece. 
  3. "Petha Recipe | How to Make Petha | Agra Ka Petha". NDTV Food. பார்க்கப்பட்ட நாள் 2020-10-28.
  4. Ammas cooking பரணிடப்பட்டது 2013-05-26 at the வந்தவழி இயந்திரம்
  5. 5.0 5.1 "Food Secrets: The Sweet Stories Behind The Legendary Agra Petha and Mysore Pak". The Better India (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-02-02. பார்க்கப்பட்ட நாள் 2020-10-28.
  6. "Food Safari: in search of Agra Petha". http://www.thehindu.com/features/magazine/food-safari-in-search-of-agra-petha/article3500491.ece. 
  7. "Petha industry not harming Taj: Kalraj". http://timesofindia.indiatimes.com/city/agra/Petha-industry-not-harming-Taj-Kalraj/articleshow/41368950.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா_பேடா&oldid=3320679" இலிருந்து மீள்விக்கப்பட்டது