ஆக்ராபாதி பள்ளிவாசல்
ஆக்ராபாதி பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | தில்லி |
புவியியல் ஆள்கூறுகள் | 28°39′00″N 77°14′16″E / 28.6499°N 77.2379°E |
சமயம் | இசுலாம் |
ஆட்சிப்பகுதி | தில்லி |
மாவட்டம் | பழைய தில்லி |
நிலை | பள்ளிவாசல் |
அக்பராபாதி பள்ளிவாசல் (Akbarabadi Mosque) இந்தியாவின் தில்லியிலுள்ள ஒரு பள்ளிவாசலாகும். இது 1650இல் ஷாஜகானின் மனைவிகளில் ஒருவரான அக்பராபாதி மகால் என்பவரால் கட்டப்பட்டது. பழைய தில்லியிலுள்ள பல முகலாய கால பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று. 1857 ஆம் ஆண்டு எழுச்சியின் போது தில்லி மீண்டும் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்களால் இது இடிக்கப்பட்டது. இது பழைய தில்லியின் நவீன நேதாஜி சுபாஷ் பூங்காவில் இருந்ததாக நம்பப்படுகிறது.
வரலாறு
[தொகு]அக்பராபாதி பள்ளிவாசல் ஷாஜகானின் மனைவிகளில் ஒருவரான அக்பராபாதி பேகத்தால் 1650இல் கட்டப்பட்டது. இதை கட்டி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. அக்பராபாதி பேகம் தற்போதைய அக்பராபாதி பள்ளிவாசலின் தளத்தில் குர்ஆனை அரபு மொழியிலிருந்து சொந்த மொழியில் மொழிபெயர்த்திருக்க வேண்டும். அவரின் பணிக்கு மரியாதை நிமித்தமாக அதே இடத்தில் பள்ளிவாசல் ஒன்றை கட்டும் யோசனை அவருக்கு வந்தது. அதன் இருப்பு காலத்தில், ஷாஜகானாபாத்தில் முகலாய அரச குடும்ப பெண்களால் கட்டப்பட்ட பதேபூரி பள்ளிவாசல், ஜீனத்-உல் மசூதி போன்ற பல பள்ளிவாசல்களில் இதுவும் ஒன்று.
சாத்தியமான கண்டுபிடிப்பு
[தொகு]6 சூலை 2012 அன்று, நேதாஜி சுபாஷ் பூங்கா பகுதியில் ஒரு மெட்ரோ நிலையம் அமைப்பதற்காக மண் தோண்டியபோது, தில்லி மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரிகள் நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட சில இடைக்கால கட்டுமானத்தின் எச்சங்களைக் கண்டனர். [1] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் விசாரணைக்குப் பிறகு, கட்டுமானப் பணியிடத்தில் பயன்படுத்திய பொருள் மற்றும் தளத்திலிருந்து தோண்டப்பட்ட மட்பாண்டங்கள் போன்றவற்றின் காரணமாக எச்சங்கள் முகலாய காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது.[2] எஞ்சியவை அக்பராபாதி பள்ளிவாசலின் எச்சங்களா அல்லது அதன் ஒரு பகுதியா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இடிபாடுகளின் சரியான அடையாளத்தை கண்டறிய அதன் விசாரணைகள் நடந்து வருகின்றன என ASI கூறுகிறது. தில்லி மெட்ரோ இரயில் நிறுவனம் தோண்டுவதை நிறுத்தியது. இது தில்லி மெட்ரோவின் கட்டம் -3 திட்டத்தின் ஒரு பகுதியாகும். பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய பகுதிகளில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுமான விதிமுறைகளை கடைபிடிக்க பாதையில் சிறிய மாற்றம் செய்யப்பட வேண்டும்.[3]
இந்த கண்டுபிடிப்பு உள்ளூர் மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் எச்சங்கள் அக்பராபாதி பள்ளிவாசலுக்கு சொந்தமானது என்று உறுதியாக நம்புகிறார்கள். சட்டவிரோத செங்கல் அமைப்பு கட்டுமானத்தைத் தொடர்ந்து முஸ்லிம் குடியிருப்பாளர்கள் இடிபாடுகள் உள்ள இடத்தில் தொழுகை நடத்தத் தொடங்கினர்.[4] கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சோயிப் இக்பால் அதே இடத்தில் மசூதியின் மறு கட்டுமானத்தை மேற்பார்வையிடத் தொடங்கினார். ஆனால் தில்லி அரசாங்கத்தின் உத்தரவின் பின்னர் அது நிறுத்தப்பட்டது. திருக்குர்ஆனின் நகல்களையும் சில பிரார்த்தனை பாய்களையும் காவலர்கள் அந்த இடத்திலிருந்து அகற்ற முயன்றபோது இது கல் வீச்சுக்கும் சிறு தீக்குளிப்புக்கும் வழிவகுத்தது. [5] [6] [7]
உள்ளூர் குடிமை நிறுவனமான வடக்கு தில்லி மாநகராட்சி ஆரம்பத்தில் அந்த இடத்தில் தொழுகை நடத்துவதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் தொடர தடை செய்தது.[8] இருப்பினும், 20 சூலை 2012 அன்று தில்லி உயர் நீதிமன்றம் அந்த இடத்தில் அனைத்து கட்டுமானத்துக்கும், பிற மத நடவடிக்கைகளுக்கு தடை விதித்தது. அந்த இடம் சில பழங்கால பள்ளிவாசலுக்குச் சொந்தமானது என்றாலும் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எந்த மத நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறியது.[9] அதன் விசாரணையைத் தொடங்க நிலத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திடம் ஒப்படைக்குமாறு வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. [10] 25 சூலை 2012 அன்று இந்த இடம் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்திடம்]ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மழைக்காலத்திற்குப் பிறகுதான் அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடங்கும் என்று தொல்லியல் அமைப்பு கூறியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் வேலை செய்யும் போது பலத்த காவலர் பாதுகாப்பு அளிக்கப்படும்.[11] ASI இன் வேண்டுகோளைத் தொடர்ந்து, 30 சூலை 2012 அன்று தில்லி உயர் நீதிமன்றம் வடக்கு தில்லி மாநகராட்சிக்கு சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க உத்தரவிட்டது. மேலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்க பலத்த பாதுகாப்பையும் கோரியது. [12] 11 அக்டோபர் 2012 அன்று, மழைக்காலம் காரணமாக மிகவும் தாமதத்திற்குப் பிறகு, வடக்கு தில்லி மாநகராட்சி இந்த இடத்தில் இடிக்கும் முயற்சியைத் தொடங்கும் பொருட்டு துணை ராணுவப் பாதுகாப்பை நாடியது. [13]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- பதேபூரி பள்ளிவாசல்
- தில்லியின் வரலாறு
- சிப்பாய்க் கிளர்ச்சி
- பழைய தில்லி
- ஷாஜகான்
- தில்லி முற்றுகை
சான்றுகள்
[தொகு]- ↑ Akbarabadi Masjid found?
- ↑ Relics belong to Mughal era
- ↑ "Metro plans for alternative location". Archived from the original on 31 October 2013. பார்க்கப்பட்ட நாள் 19 July 2012.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ People offer namaaz at possible Mosque site
- ↑ . 5 September 2012.
- ↑ . 22 July 2012.
- ↑ . 23 July 2012.
- ↑ Construction at relics site banned
- ↑ All activity banned at site
- ↑ Hand over land to ASI: Delhi High Court
- ↑ Work on site only after monsoons: ASI
- ↑ Demolish structure over Mughal-era ruins: Delhi HC
- ↑ "Now, corporation seeks paramilitary cover". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 October 2012 இம் மூலத்தில் இருந்து 2013-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029183829/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-12/delhi/34411463_1_illegal-structure-india-files-justice-sanjay-kishan-kaul.