ஆக்னஸ் திரோப்
தோகாவில் நடந்த 2019 உலக தடகள வாகையாளார் போட்டியில் வெண்கலப் பதக்கத்துடன் திரோப். | |
| தனிநபர் தகவல் | |
|---|---|
| பிறந்த பெயர் | ஆக்னஸ் ஜெபட் திரோப் |
| பிறப்பு | 23 அக்டோபர் 1995 உசைன் ஜிசு கவுன்டி, கென்யா[1] |
| இறப்பு | 13 அக்டோபர் 2021 (அகவை 25) ஐடென், கென்யா |
| விளையாட்டு | |
| நாடு | கென்யா |
| விளையாட்டு | தடகள விளையாட்டு |
| நிகழ்வு(கள்) | 5000 மீட்டர், 10,000 மீட்டர்; குறுக்கு நாடுகள் |
| சாதனைகளும் விருதுகளும் | |
| உலக இறுதி | |
| ஒலிம்பிக் இறுதி |
|
| தனிப்பட்ட சாதனை(கள்) | |
பதக்கத் தகவல்கள் | |
ஆக்னஸ் ஜெபெட் திரோப் (Agnes Jebet Tirop) (23 அக்டோபர் 1995-13 அக்டோபர் 2021) ஓர் கென்ய தொழில்முறை நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 2017 மற்றும் 2019 உலக தடகள வாகையாளர் போட்டியின் 10,000 மீட்டரில் வெண்கலப் பதக்கங்களை வென்றார். 2015 உலக தடகள அமைப்பின் உலக வாகையாளார் போட்டியில், சோலா புட்-க்கு அடுத்தபடியாக, மகளிர் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இளையவர் என்ற பெருமையை டிராப் பெற்றார். 2021 ஆம் ஆண்டில் இவர் இறக்கும் போது, மகளிருக்கான 10 கிலோமீட்டர் போட்டியில் உலக சாதனையாளராக இருந்தார்.[2]
இளையோர் மட்டத்தில், 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தடகளத்தில் உலக இளையோர் வாகையாளர் போட்டியில் வெண்கலப் பதக்கமும், 2013 ஆம் ஆண்டு உலக தடகள அமைப்பு நடத்தும் உலக குறுக்கு நாடு வாகையாளர் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார். 2012 மற்றும் 2014 ஆப்பிரிக்க வாகையாளர் போட்டியில் முறையே வெள்ளி மற்றும் தங்கப்பதக்கத்தை வென்றார்.
திரோப் தனது 25 வயதில் கழுத்து மற்றும் வயிற்றில் பல கத்திக்குத்து காயங்களால் இறந்து கிடந்தார். இவரின் கணவர் இப்ராகிம் ரோட்டிச் இவரைத் தாக்கிக் கொன்றதாக முக்கிய சந்தேக நபராக விசாரணையில் உள்ளார். கென்யாவின் மலைப்பகுதிகளில் உள்ள இவரது சொந்த ஊரில் நடந்த இறுதிச் சடங்கில் 1,000 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.[3][4][5]
தொழில் வாழ்க்கை
[தொகு]2012 ஆம் ஆண்டில் கென்ய குறுக்கு நாடுகள் வாகையாளர் போட்டியில் உலக இளையோர் வெற்றியாளரான பெய்த் கிபிகோனுக்கு அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்தபோது திரோப் முதன்முதலில் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றார்.[6] இது 2012 ஆப்பிரிக்க குறுக்கு நாடுகள் வாகையாளர் போட்டியில் இவரது முதல் தேசியத் தேர்வு மற்றும் சர்வதேச பதக்கத்திற்கு வழிவகுத்தது, அங்கு இவர் மீண்டும் கிபிகோனுக்கு அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும் இளையோருக்கான வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார்.[7] 2012 ஆம் ஆண்டு உலக இளையோர் தடகளப் போட்டியில் 5,000 மீட்டர் போட்டியில் கென்யாவின் மிக முக்கியமான நுழைவு வீரராக இருந்தார். மேலும் எத்தியோப்பியன் போட்டியை 15: 36.74 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
2013 கென்ய குறுக்கு நாடுகள் வாகையாளர் போட்டியில் கிபிகோனுக்கு அடுத்து மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மேலும் இந்த இணை உலக தடகள வாகையாளர் பட்டத்தை வென்றனர்.[8][9] இவர் அந்த ஆண்டு தடகளத்தில் முன்னேற்றம் அடைந்தார். 3,000 மீட்டர் ஓட்டத்தை 8:39.13 நிமிடங்களிலும், 5,000 மீட்டர் ஓட்டத்தை 14:50.36 நிமிடங்களிலும் கடந்து தனிப்பட்ட சிறந்த நேரங்களாகப் பதிவு செய்தார். மேலும் சாலைகளிலும், அரை மராத்தான் ஓட்டத்திலும் 71:57 நிமிடங்களில் கடந்து சிறந்த நேரத்தைப் பதிவு செய்தார்.[10]
இறப்பு
[தொகு]திரோப் 13 அக்டோபர் 2021 அன்று எல்கியோ-மரக்வெட் கவுண்டியின் ஐடெனில் உள்ள தனது வீட்டில் இறந்து கிடந்தார். இவரது கழுத்து மற்றும் வயிற்றில் பல கத்திக்குத்து காயங்கள் இருந்தன.[11][12][13] வீட்டில் தனது கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக திரோப் குத்தப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.[14] திரோப்பின் கணவர் இப்ராகிம் ரோட்டிச்சை தேடும் பணி தொடங்கியது. பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேற முயன்றார். இறுதியில் மொம்பாஸா அருகே கண்டுபிடிக்கப்பட்டார்.[14] பின்னர் இவர் கைது செய்யப்பட்டு திரோப்பின் மரணம் குறித்து விசாரிக்கப்பட்டார்.[15] பின்னர், நவம்பர் 2023 இல் பிணையில் விடுவிக்கப்பட்டார்.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eurosport.com. Agnes Jebet Tirop. Retrieved 7 August 2020.
- ↑ "World record-holder Tirop dies". உலக தடகள அமைப்பு. 13 October 2021. Retrieved 13 October 2021.
- ↑ "Court orders Rotich's DNA samples in athlete Tirop's murder trial". The Star. 11 December 2023. Retrieved 10 December 2024.
- ↑ "Slain Kenyan Olympian Agnes Tirop buried in her home village". Reuters. 23 October 2021. https://www.reuters.com/world/africa/slain-kenyan-olympian-agnes-tirop-buried-her-home-village-2021-10-23/. பார்த்த நாள்: 25 October 2021.
- ↑ "Agnes Tirop: Kenyan Olympian's funeral attended by over 1,000 mourners". The Guardian. 23 October 2021. Retrieved 10 December 2024.
- ↑ Mutuota, Mutwiri (18 February 2012). Karoki and Chepkirui steal the headlines in Nairobi. IAAF. Retrieved on 28 March 2015.
- ↑ Williamson, Norrie (19 March 2012). Langat and Chepkirui take African XC titles in Cape Town. IAAF. Retrieved on 28 March 2015.
- ↑ Mutuota, Mutwiri (16 February 2013).Rono and Muriuki win Kenyan World Cross Trials in Nairobi. IAAF. Retrieved on 28 March 2015.
- ↑ Bamford, Nicola (24 March 2013). Kipyegon majestic in title defence – Bydgoszcz 2013 junior women's report. IAAF. Retrieved on 28 March 2015.
- ↑ Agnes Jebet Tirop Progression. IAAF. Retrieved on 28 March 2015.
- ↑ "Agnes Tirop: world record holder found dead at home in Kenya". The Guardian. 13 October 2021. Retrieved 13 October 2021.
- ↑ Haigh, Phil (13 October 2021). "World Championship 10,000m medallist Agnes Jebet Tirop found stabbed to death at home". Metro.co.uk. Retrieved 13 October 2021.
- ↑ "Athletics Kenya". Retrieved 13 October 2021.
- 1 2 Patta, Debora (15 October 2021). "Olympic runner Agnes Tirop's husband arrested in her killing". CBS News. Retrieved 15 October 2021.
- ↑ "Agnes Tirop: Husband arrested in Kenya after athlete's death". BBC News. 14 October 2021. https://www.bbc.com/news/world-africa-58919391.
- ↑ "Kenyan slain Olympian Agnes Tirop's husband freed on bail". trtafrika.com. Retrieved 9 September 2024.
