ஆக்டைல் சயனோ அக்ரைலேட்டு
| பெயர்கள் | |
|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்டைல் 2-சயனோபுரோப்-2-யீனோயேட்டு | |
| வேறு பெயர்கள்
ஆக்டைல் 2-சயனோபுரோப்பனேயேட்டு
ஆக்டைல் 2-சயனோ அக்ரைலேட்டு ஆக்ரைலேட்டு | |
| இனங்காட்டிகள் | |
| 6701-17-3 | |
| ChemSpider | 21678 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 23167 |
| |
| UNII | 6C655P1XVG |
| பண்புகள் | |
| C12H19NO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 209.29 g·mol−1 |
| தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
| அடர்த்தி | 1.0±0.1 கி/செ.மீ3 |
| கொதிநிலை | 297.6±23.0 °C |
| Reacts | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 137.2±9.4 °செல்சியசு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆக்டைல் சயனோ அக்ரைலேட்டு (Octyl cyanoacrylate) என்பது C12H19NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மாகும். சயனோ அக்ரைலேட்டு எசுத்தர் சேர்மமான இது 2-சயனோ-2-புரோப்பனாயிக் அமிலத்தின் ஆக்டைல் எசுத்தர் ஆகும். கூர்மையான, எரிச்சலூட்டும் வாசனையுடன் கூடிய தெளிவான நிறமற்ற திரவமாகக் காணப்படுகிறது. மருத்துவ சயனோ அக்ரைலேட்டு பசைகளின் முக்கிய அங்கமாக இதன் முக்கிய பயன்பாடு உள்ளது.
மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ பயன்பாடுகளில், ஆக்டைல் சயனோ அக்ரைலேட்டு என்-பியூட்டைல் சயனோ அக்ரைலேட்டு மற்றும் ஐசோபியூட்டைல் சயனோ அக்ரைலேட்டு ஆகியவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை விரைவாக காயத்தை மூடுவதற்கு பயன்படுகின்றன.[1]பியூட்டைல் எசுத்தர்கள் வலுவான பிணைப்பை வழங்குகின்றன, ஆனால் பசை உறுதியானது. ஆக்டைல் எசுத்தர், பலவீனமான பிணைப்பை வழங்கினாலும், அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டது. நெகிழ்வுத்தன்மை மற்றும் வலுவான பிணைப்பு இரண்டையும் வழங்கும் ஆக்டைல் சயனோ அக்ரைலேட்டு மற்றும் என்-பியூட்டைல் சயனோ அக்ரைலேட்டு கலவைகள் கிடைக்கின்றன.
ஈரப்பதத்தின் முன்னிலையில் ஆக்டைல் சயனோ அக்ரைலேட்டு விரைவாக பலபடியாக்கம் அடைகிறது.
அதிக வெப்பநிலைக்கு சூடாக்கினால் பதப்படுத்தப்பட்ட பசையின் வெப்பச்சிதைவும் பலபடிநீக்கமும் அடைகிறது. இதனால் நுரையீரல் மற்றும் கண்களுக்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தும் வாயு பொருட்கள் உருவாகின்றன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Singer, A. J.; McClain, S. A.; Katz, A. (2004). "A porcine epistaxis model: hemostatic effects of octylcyanoacrylate". Otolaryngology–Head and Neck Surgery 130 (5): 553–557. doi:10.1016/j.otohns.2003.09.035. பப்மெட்:15138419.