ஆக்டிவ்எக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ActiveX
File:ActiveX logo.png
வடிவமைப்புமைக்ரோசாப்ட்
உருவாக்குனர்மைக்ரோசாப்ட்
தொடக்க வெளியீடு1996; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1996)
இணையத்தளம்http://microsoft.com/com/tech/activex.asp

ஆக்டிவ் எக்ஸ் (ActiveX ) என்பது வெவ்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்ட மென்பொருள் செயல் உறுப்புகள் (components) ஒரு பிணையப் பணிச் சூழலில் தமக்குள் உறவாடிக் கொள்ள வகை செய்யும் தொழில் நுட்பங்களின் கூட்டுத் தொகுதி ஆகும். 1990களின் இடைப்பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை உருவாக்கியது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் காம் (COM-Component Object Model) தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது மையவிரிவலையில் பயனாளர் உறவாடும் பக்கங்களை வடிவமைக்க ஆக்டிவ்எக்ஸ் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேசைக் கணினிப் பயன்பாடுகளிலும், ஏனைய நிரலாக்கங்களிலும் கூடப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆக்டிவ்எக்ஸ் இயக்குவிசைகள்[தொகு]

ஆக்டிவ்எக்ஸ் தொழில் நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய மென்பொருள் செயலுறுப்புகள். அசைவூட்டம் (animation), மீள்-எழுபட்டிகள் (pop-up menu) போன்ற தினிச்சிறப்பான செயல்பாடுகளை வலைப்பக்கங்களிலும் உருவாக்குவதற்கு இச்செயலுறுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சி, சி++ , விசுவல் பேசிக், விசுவல் சி++ போன்ற மொழிகளில் ஆக்டிவ்எக்ஸ் செயலுறுப்புகளை உருவாக்க முடியும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மணவை முஸ்தபா. கணினி களஞ்சிய பேரகராதி - 1. மணவை பப்ளிகேஷன். http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-62.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டிவ்எக்ஸ்&oldid=2062729" இருந்து மீள்விக்கப்பட்டது