ஆக்சோனியம் அயனி
ஆக்சோனியம் அயனி (Oxonium ion) என்பது மூன்று பிணைப்புகள் கொண்ட எந்த ஓர் ஆக்சிசன் நேர்மின் அயனியையும் குறிக்கும்[1]. ஐதரோனியம் அயனி (H3O+) ஓர் எளிய ஆக்சோனியம் அயனிக்கு எடுத்துக்காட்டாகும்[2]
ஆல்கைல் ஆக்சோனியம்[தொகு]
ஆக்சோனியம் அயனிகளின் வரிசையில் இடம் பெற்றுள்ள அயனிகளில் ஐதரோனியம் அயனியும் ஒன்றாகும். இதன் பொது வாய்ப்பாடு R3−nHnO+. ஆகும். பொதுவாக ஆக்சிசன் ஒரு sp3 கலப்புடன் கூடிய பட்டைக்கூம்பு வடிவ மூலக்கூறு ஆகும். பிரமிடு ஆகும். n = 2 என்ற மதிப்பைக் கொண்ட அயனிகள் அனைத்தும் முதன்மை ஆக்சோனியம் அயனிகள் எனப்படுகின்றன. புரோட்டானேற்றம் பெற்ற மெத்தனால் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். ஆல்ககால்கள் அல்லது ஈதர்கள் (R−C−O+
−R
1R
2) புரோட்டானேற்றம் அல்லது ஆல்க்கைலேற்றம் அடைவதால் மற்ற ஐதரோகார்பன் ஆக்சோனியம் அயனிகள் உருவாகின்றன. அமில ஊடகத்தில் ஆல்ககால்களை புரோட்டானேற்றம் செய்வதால் உற்பத்தியாகும் ஆக்சோனியம் வேதி வினைக்குழு இ2 வகை நீக்கல் வினைகளில் விடுபடும் குழுவாக இருக்க முடியும். வினை விளைபொருள் ஒரு ஆல்க்கீன் ஆக இருக்கும். அதிகபட்சமான அமிலத்தன்மை நிபந்தனைகளில் வெப்பப் படுத்துதல் மற்றும் நீர் நீக்கம் செய்தல் போன்ற செயற்பாடுகள் பொதுவாகத் தேவைப்படுகின்றன.
இரண்டாம் நிலை ஆக்சோனியம் அயனிகள் R2OH+ என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. புரோட்டானேற்றம் அடைந்த ஈதர்கள் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
மூன்றாம் நிலை ஆக்சோனியம் அயனிகள் R3O+ என்ற பொது வாய்ப்பாட்டைக் கொண்டுள்ளன. டிரைமெத்தில் ஆக்சோனியம் இதற்கு எடுத்துக்காட்டாகும்[3]. மூன்றாம் நிலை ஆல்க்கைல் ஆக்சோனியம் உப்புகள் பயனுள்ள ஆல்கைலேற்றும் முகவர்களாகச் செயல்படுகின்றன. உதாரணமாக, வெண்மை நிறப் படிகத் திண்மமான டிரையெத்தில் ஆக்சோனியம் டெட்ரா புளோரோபோரேட்டு (Et3O+)(BF−4) ஓர் ஆல்க்கைலேற்றும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. எத்தில் எசுத்தர்கள் உற்பத்தியில் பாரம்பரியமான பிசர் எசுத்தராக்கல் முறை பொருந்தாத வேளையில் இது பயன்படுகிறது[4]. மேலும் ஈனால் ஈதர்களையும் அதனுடன் தொடர்புகொண்ட வேதி வினைக்குழுக்களையும் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது[5][6].
![]() |
![]() |
![]() |
![]() |
ஆக்சோனியம் அயனி |
டிரைமெத்தில் ஆக்சோனியம் நேர் மின்னயனி |
டிரைமெத்தில் ஆக்சோனியம் |
டிரைமெத்தில் ஆக்சோனியம் |
ஆக்சாடிரைகுயினேன் மற்றும் ஆக்சாடிரைகுயினேசீன் போன்றவை நிலைப்புத்தன்மை கொண்ட ஆக்சோனியம் அயனிகளாகும். 2008 ஆம் ஆண்டில் முதன் முதலாக இவை விவரிக்கப்பட்டன. ஆக்சாடிரைகுயினேன் கொதி நீர் அல்லது ஆல்ககால்கள், தயோல்கள், ஆலைடு அயனிகள் அல்லது அமீன்கள் போன்றவற்றுடன் வினைபுரிவதில்லை. ஆனால் ஐதராக்சைடு, சயனைடு மற்றும் அசைடு போன்ற வலிமையான அணுக்கரு கவரிகளுடன் வினைபுரிகின்றன.
ஆக்சோகார்பீனியம் அயனி[தொகு]
கரிம வேதியியலில் ஆக்சோகார்பீனியம் அயனி என்ற மற்றொரு வகை ஆக்சோனியம் அயனிகள் காணப்படுகின்றன. கார்பனைல் குழுவை புரோட்டானேற்றம் அல்லது ஆல்க்கைலேற்றம் செய்வதால் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. R−C=O+−R′ இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
- ↑ George A. Olah (1998). Onium Ions. John Wiley & Sons. பக். 509. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780471148777.
- ↑ Olah, George A. (1993). "Superelectrophiles". Angew. Chem. Int. Ed. Engl. 32: 767–88. doi:10.1002/anie.199307673.
- ↑ Douglas J. Raber, Patrick Gariano, Jr, Albert O. Brod, Anne L. Gariano, And Wayne C. Guida "Esterification Of Carboxylic Acids With Trialkyloxonium Salts: Ethyl And Methyl 4-acetoxybenzoates" Org. Synth. 1977, 56, 59.எஆசு:10.15227/orgsyn.056.0059
- ↑ Justin R. Struble And Jeffrey W. Bode "Synthesis Of A N-mesityl Substituted Aminoindanol-derived Triazolium Salt" Org. Synth. 2010, 87, 362. எஆசு:10.15227/orgsyn.087.0362
- ↑ Lous S. Hegedus, Michael A. Mcguire, And Lisa M. Schultze "1,3-Dimethyl-3-methoxy-4-phenylazetidinone" Org. Synth. 1987, 65, 140.எஆசு:10.15227/orgsyn.065.0140