உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்கம்பெற்ற பண்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆக்கம்பெற்ற பண்டம் (Finished goods) என்பது உற்பத்தி செயல்பாட்டில் முற்றுபெற்று விற்காமலோ அல்லது இறுதிப் பயனருக்கு விநியோகிக்காமலோ இருக்கும் பண்டங்களைக் குறிப்பதாகும்.

உற்பத்தி[தொகு]

உற்பத்தியில் மூன்று நிலை இருப்புக் கணக்குகள் உள்ளன:

  1. மூலப் பொருள்
  2. செயலாக்க வேலை
  3. ஆக்கம்பெற்ற பண்டங்கள்

மூலப் பொருளாய் கொள்முதல் செய்த ஒரு பண்டம், தயாரிப்பின் உற்பத்திக்கு மாறுகிறது. உற்பத்தி செயல்பாட்டில் பகுதி ஆக்கம்பெற்ற பண்டங்களை செயலாக்க வேலை என்றழைக்கப்படுகிறது. அதுவே உற்பத்தி செயல்பாட்டிலிருந்து முற்றுபெற்று, அவை விற்கப்படாமலோ அல்லது இறுதிப்பயனரிடம் விநியோகிக்காமலோ இருந்தால் அதனை ஆக்கம்பெற்ற பண்டம் என்பர்.

ஆக்கம்பெற்ற பண்டம் என்பதோர் ஒப்புமைச் சொல். விநியோகச் சங்கிலி மேலாண்மை ஓட்டத்தில், கொள்முதலாளரின் மூலப் பொருளுடன் வழங்குநரின் ஆக்கம்பெற்ற பண்டங்களும் உள்ளடக்கியதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கம்பெற்ற_பண்டம்&oldid=2184736" இலிருந்து மீள்விக்கப்பட்டது