ஆக்கபூர்வமாகப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கான பேர்கோப் ஆய்வுநிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முரண்பாட்டுக் கற்கைகளுக்கான பேர்கோப் ஆய்வுநிலையம் 1993 ஆம் ஆண்டு முரண்பாடு ஆய்வுகளுக்கான பேர்கோப் நிலையத்தினரால் சமூக அரசியற் பிரச்சினைகளை ஆக்கபூர்வமான நடைமுறைகள் மூலம் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது.

இனம் மற்றும் அரசியல் பிணக்குகளுக்குத் தீர்வு காண, கருத்தியல் கொள்கைக்கும் நடைமுறை நிலைப்பாட்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை எய்தி அணுகுவது ஆய்வுமையத்தின் குறிக்கோள் ஆகும். இந்நிலையத்தினூடாகச் செய்யப்படும் ஆய்வுகள் ஊடாக முரண்பாட்டில் இருந்து நீங்குவதற்கான எண்ணக்கருக்கள், வழங்கள், கருவிகள் வழங்குகின்றன. இந்த அமைபின் இலட்சியமானது சமானத்தைக் கட்டிக்காப்பதற்கு உதவுவதுடன் அதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் ஆகும்.

இவ்வமைப்பின் கற்கைகளுள் பிரதானமானவை எவ்வாறு முரண்பாடு ஒன்றில் இருந்து சமாதானத்தை உருவாக்குவதாகும். இதற்காக சமூகத்தில் எவ்வாறான தூண்டுதல்களை உருவாக்க வேணடும் போன்ற விடயங்களை ஆய்வுசெய்வதாகும். அத்துடன் அரசியற் சக்திகள், மக்கள் குழுக்கள், அரசு அல்லாத சக்திகள் (Non state Actors) போன்றவை எவ்வாறு சிக்கலான இவ்விடயத்திற்கு ஆக்கபூர்வமாகப் பங்களிக்கலாம் என்பதேயாகும். [1]

இலங்கை அலுவலகம்[தொகு]

இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இவ்வலுவலகம் ஆனது 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் உருவாக்கப்பட்டது. இலங்கை அரசு விடுதலைப் புலிகள் பல்வேறு பட்ட சமாதானப் பேச்சுவார்தைகளுக்கமைய பல்வேறு மாற்றங்களை இந்த அமைப்பு ஏற்படுத்திக் கொண்டது. இலங்கையில் இந்த அமைப்பிற்கு வெளிநாட்டு அலுவல்களுக்கான சுவிஸ் சமஷ்டி அமைப்பு, ஜேர்மனியின் பொருளாதார விருத்தி மற்றும் கூட்டுறவு அமைச்சு, ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகிய அமைப்புக்கள் அனுசரணை வழங்குகின்றன.[2]

வெளியிணைப்புக்கள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]