உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகெலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகெலைட்டு
Augelite
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமம்
வேதி வாய்பாடுAl2(PO4)(OH)3
இனங்காணல்
நிறம்நிறமற்றது முதல் வெண்மை, மஞ்சள் முதல் வெளிர் ரோசா வரை, பச்சை
படிக இயல்புபட்டகம் அல்லது ஊசி வடிவ படிகங்கள் ; திரட்சி
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புசரிபிளவு {110}, தெளிவு {201}, தெளிவற்றது {001} மற்றும் {101}
முறிவுசமமற்றது
விகுவுத் தன்மைஈரச்சு
மோவின் அளவுகோல் வலிமை4 – 4.5
மிளிர்வுமுத்துப் பளபளப்பு {110} பிளவு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி2.696
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 1.574 nβ = 1.576 nγ = 1.588
இரட்டை ஒளிவிலகல்δ = 0.014
2V கோணம்அளக்கப்பட்டது: 50°
மேற்கோள்கள்[1][2]

ஆகெலைட்டு (Augelite) என்பது Al2(PO4)(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அலுமினியம் பாசுப்பேட்டு கனிமமான இது நிறமற்றது முதல் வெள்ளை, மஞ்சள் அல்லது ரோசா நிறம் வரை மாறுபடும். ஒற்றைச் சரிவச்சுப் படிக அமைப்பில் இக்கனிமம் படிகமாகிறது.[3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆகெலைட்டு கனிமத்தை Aul[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

ஆகெலைட்டு முதன்முதலில் 1868-ஆம் ஆண்டில், சுவீடனின் சுகேனியாவில் அமைந்துள்ள வசுத்தானா இரும்புச் சுரங்கத்தில் காணப்பட்டது. ​​கிறிசுட்டியன் வில்லெம் புளோம்சுட்ராண்ட்டு என்பவரால் விவரிக்கப்பட்டது. மேலும், இதன் முத்து போன்ற பளபளப்பைக் குறிக்கும் வகையில், கிரேக்கச் சொல்லிருந்து கனிமம் தனது பெயரைப் பெற்றது. [1][2]

பாசுப்பேட்டு கொண்ட பெரலுமினசு படிவுகளின் உருமாற்றச் செயல்முறையின் விளைவாகவும், உயர்-வெப்பநிலை நீர்வெப்பத் தாதுப் படிவுகளிலும் ஆகெலைட்டு கனிமம் காணப்படுகிறது. அட்டகோலைட், சுவான்பெர்கைட்டு, இலாசுலைட்டு, ஏமடைட்டு , திரோலைட்டு, பெர்லிணைட்டு, உரூடைல், பைரோஃபில்லைட்டு, பேரைட்டு, ஆர்சனோபைரைட்டு, இசுடாணைட்டு, பைரைட்டு, அந்தோரைட்டு, காசிட்டரைட்டு மற்றும் சிங்கெலைட்டு ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது..[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2025-10-10. Retrieved 2026-03-23.
  2. 1 2 Mindat.org
  3. Richard V. Gaines, H. Catherine W. Skinner, Eugene E. Foord, Brian Mason, and Abraham Rosenzweig: "Dana's new mineralogy", p. 851. John Wiley & Sons, 1997
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகெலைட்டு&oldid=4565929" இலிருந்து மீள்விக்கப்பட்டது