உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகா கான் பெண்கள் மருத்துவமனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகா கான் பெண்கள் மருத்துவமனை
Map

ஆகா கான் பெண்கள் மருத்துவமனை (Aga Khan Hospital for Women) முதலில் 1979 ஆம் ஆண்டு மகப்பேறு இல்லம் எனப்படும் பெண்களுக்கான ஆகா கான் மருத்துவமனையாக நிறுவப்பட்டது.[1] கராச்சியின் புறநகர்ப் பகுதியான கரிமாபாத்தில் 41 படுக்கைகள் கொண்ட மகப்பேறு வசதி கொண்ட சுகாதார சேவையை இம்மருத்துவமனை வழங்குகிறது. இம்மருத்துவமனை வளாகத்தில் ஆகா கான் நோயறிதல் மையம் மற்றும் நாள் அறுவை சிகிச்சை மையம், ஆகியவை அமைந்துள்ளன. மருத்துவமனையை நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை சேவைகளுடன் கரிமாபாத்து நிறைவு செய்கிறது. இப்பிரிவுகள் ஆகா கான் சுகாதார சேவை இன்டர்நேசனல் ரெபரல் அமைப்பின் ஒரு பகுதியாகும். கராச்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு உயர்தர அடிப்படையிலான ஒருங்கிணைந்த சுகாதார அமைப்பைச் செய்யும் நோக்கத்துடன் 2010 ஆம் ஆண்டில் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இம்மருத்துவமனை ஒருங்கிணைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Aga Khan Hospital for Women – Karimabad, Karachi".

வெளி இணைப்புகள்

[தொகு]