ஆகா கானின் கல்லறை

ஆள்கூறுகள்: 24°05′18″N 32°52′44″E / 24.088275°N 32.878897°E / 24.088275; 32.878897
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நைல் நதியின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மலையின் மேல் இந்த கல்லறை அமைந்துள்ளது.

ஆகா கானின் கல்லறை (Mausoleum of Aga Khan ) என்பது 1957 இல் இறந்த மூன்றாம் ஆகாகான் சர் சுல்தான் முகம்மது ஷாவின் கல்லறை ஆகும். கல்லறை எகிப்தின் அஸ்வான் நகரில் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. எகிப்து, முன்னர் இஸ்மாயிலி சியா வம்சத்தின் பாத்திம கலீபகத்தின் அதிகார மையமாக இருந்தது.

கல்லறையின் கட்டுமானம் 1956இல் தொடங்கி 1960இல் முடிந்தது. [1] ஆகா கானின் மனைவி பேகம் ஓம் அபீபே ஆகா கான், கல்லறை கட்டுமானத்தை ஆரம்பித்தார். இது ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது. இருப்பினும், 1997 ஆம் ஆண்டில் கல்லறையின் உட்பகுதி பொதுமக்களுக்கு மூடப்பட்டது. [2]

ஆகா கானின் கல்லறையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிவப்பு உரோசா வைக்கப்படுகிறது. இது முதலில் பேகம் ஓம் ஆபீபே ஆகா கானால் தொடங்கப்பட்டது.[3]

தளம்[தொகு]

கல்லறையானது நைல் நதியின் மேற்குக் கரையில் ஒரு மலையின் மேல் மூன்றாம் ஆகா கானின் மனைவி பேகம் ஓம் அபீபே ஆகா கானின் மாளிகையையும், இளவரசர் சத்ருதீன் ஆகா கானின் மாளிகையையும் பார்த்தபடி அமைந்துள்ளது.[4] இந்த மாளிகையை எகிப்திய கட்டிடக் கலைஞர் அசான் பாத்தி என்பவர் வடிவமைத்தார். இது மூன்றாம் ஆகா கானின் குளிர்கால இல்லமாக இருந்தது.[4] [5]

மூன்றாம் ஆகா கானின் அடக்கம்[தொகு]

மூன்றாம் ஆகா கான் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 20, 1959 அன்று இந்தக் கல்லறையில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவரது உடல் முதலில் சுவிட்சர்லாந்தில் அடக்கம் செய்யப்பட்டது.[6] [7] இந்த நிகழ்ச்சியில் நான்காம் ஆகா கான், பேகம் ஓம் அபீபே ஆகா கான் ஆகியோருடன் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்களும் கலந்து கொண்டனர். [6] பேகம் ஓம் அபீபே ஆகா கான் 2000ஆம் ஆண்டில் காலமானதையடுத்து தனது கணவரின் கல்லறைக்கு அருகேயே அடக்கம் செய்யப்பட்டார்.[7]

புகைப்படங்கள்[தொகு]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Farid Shafie. 
  2. "Aga Khan Mausoleum (Tomb of Muhammad Shah Aga Khan)". www.viator.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-09.
  3. "Aswan Landmarks and Monuments: Aswan, Egypt". www.aswan.world-guides.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-02-24.
  4. 4.0 4.1 "Prince Sadruddin Aga Khan House". Archnet. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  5. Aswan, Philae, Abu Simbel: 150 colour illustrations. 
  6. 6.0 6.1 "AGA KHAN III REBURIED: Ismailis Gather for Rites at Mausoleum on the Nile". The New York Times. 1959. 
  7. 7.0 7.1 Vickers, Hugo (2000). "Obituary: The Begum Aga Khan". The Independent. 

நான்காம் ஆகா கான்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகா_கானின்_கல்லறை&oldid=3206763" இலிருந்து மீள்விக்கப்பட்டது