உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாங்சா தியோ சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆகாங்சா தியோ சர்மா
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய ஆடைகள் வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில்
பணிஇந்தியத் தொழில்துறை ஆடைகள் வடிவமைப்பாளர்
அமைப்பு(கள்)ஐகேஇஏ

ஆகாங்சா தியோ சர்மா (Akanksha Deo Sharma) இவர் ஓர் இந்தியத் தொழில்துறை ஆடைகள் வடிவமைப்பாளர், ஆடைகள் புத்தாக்கவியலாளர் மற்றும் காட்சிக்கலைஞர் ஆவார்.[1][2] இவரது படைப்புகள், கைவினைக்கலைகள் மற்றும் கட்டுமான நுட்பங்களை ஒருங்கிணைத்து, எளிமையான, நேர்த்தியான மற்றும் களிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன. 2020 ஆம் ஆண்டில், போர்ப்சு இந்தியா வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட 30 நபர்கள் பட்டியலில் இவர் 8-வது இடத்தைப் பிடித்துள்ளார்.[3]நெதர்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் சுவீடன் பன்னாட்டு நிறுவனமான ஐகேஇஏ -வுடன் இணைந்து பணியாற்றும் இந்தியாவின் ஒரே பெண் இவராவார்.[1]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

ஆகாங்சா தியோ சர்மா வணிகவியல் துறையில் கல்வி பயின்றார். அதன் பிறகு, புது தில்லியில் உள்ள தேசிய வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 2016-ஆம் ஆண்டில் தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு, 10 மாத காலப் பயிற்சியை மேற்கொள்வதற்காக இவர் சுவீடன் சென்றார்.[4] தற்போது, ​​இவர் குருகிராமில் உள்ள ஐகேஇஏ நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். இதற்கு முன்னதாக,செல் டிசைன், ரா மேங்கோ மற்றும் லவ் பேர்ட்சு போன்ற பல்வேறு வர்த்தக நிறுவனங்களுடனும் இவர் பணியாற்றியுள்ளார்.

விருதுகள்

[தொகு]

ஆகாங்சா தியோ எல்லி டிகோர் இந்தியா சிறந்த வடிவமைப்பாளர் விருது 2009 ஆம் ஆண்டில் பெற்றுள்ளார்[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Savlani, Sonam (21 June 2019). "Akanksha Deo Sharma: IKEA girl with the rice straw project". [The Hindu] ([N. Ravi]) இம் மூலத்தில் இருந்து 22 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200822130142/https://www.thehindu.com/life-and-style/akanksha-deo-sharma-ikea-girl-with-the-rice-straw-project/article28098777.ece.
  2. "JODI TALKS : AKANKSHA DEO SHARMA". The Jodi Life. Jodi. 5 November 2019. Retrieved 23 October 2020.
  3. 1 2 "Akanksha Deo Sharma: The only Indian designer at IKEA". [Forbes India]. 2020. Archived from the original on 22 August 2020. Retrieved 22 August 2020.
  4. Kumar, Surya Praphulla (1 September 2017). "Sharma's Swedish story". [The Hindu] ([N. Ravi]) இம் மூலத்தில் இருந்து 22 August 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200822130158/https://www.thehindu.com/life-and-style/fashion/sharmas-swedish-story/article19601615.ece.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகாங்சா_தியோ_சர்மா&oldid=4517461" இலிருந்து மீள்விக்கப்பட்டது