ஆஃப் மைசு அண்ட் மென்
| நூலாசிரியர் | ஜான் இசுட்டீன்பெர்க் |
|---|---|
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| வகை | துன்பியல் |
| வெளியீட்டாளர் | கோவிசி பிரையடு |
ஆஃப் மைசு அண்ட் மென் (Of Mice and Men) என்பது 1937-ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் ஜான் இசுடீன்பெக் எழுதிய குறும் புதினம் ஆகும்.[1][2] ஜார்ஜ் மில்டன், லென்னி சுமால் ஆகிய இரண்டு இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர்கள், பெரும் மந்தநிலையின் போது வேலைகளைத் தேடி கலிபோர்னியாவின் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களை இது விவரிக்கிறது.
1910களில் புலம்பெயர்ந்த பண்ணைத் தொழிலாளர்களுடன் பணிபுரிந்த ஒரு இளைஞனாக, ஒகீசு வருவதற்கு முன்பு, அவர் தனது புதினமான தி கிரேப்ஸ் ஆஃப் ராத் இல் விவரிக்கும் தனது சொந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இசுடெய்ன்பெக் இந்தப் புதினத்தை எழுதினார். இதன் தலைப்பு இராபர்ட் பர்னசு எழுதிய "டூ எ மவுஸ்" என்ற கவிதையிலிருந்து எடுக்கப்பட்டது.
இந்த நூல் பல பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது[3] என்றாலும், ஆஃப் மைசு அண்ட் மென் இதில் பயன்படுத்தியிருக்கும் கொச்சையான வார்த்தைகள், இனவெறியினைத் தூண்டும் வார்த்தைகளுக்காகப் பரவலாகத் தணிக்கை மற்றும் புத்தகத் தடைக்கு இலக்கானது. இதன் விளைவாக, இது அமெரிக்க நூலகச் சங்கத்தின் 21-ஆம் நூற்றாண்டின் மிகவும் சவாலான நூலின் பட்டியலில் இடம்பெற்றது.[4]
கதைச் சுருக்கம்
[தொகு]ஜார்ஜ் மில்டன், லென்னி சுமால் என்ற இரு பண்ணைத் தொழிலாளர்கள் கதையின் மாந்தர்கள் ஆவர். பொருளாதார மந்தநிலையின் காலத்தில் வேலை தேடி அவர்கள் கலிபோர்னியாவின் பல பண்ணைகளுக்குச் செல்கின்றனர். புத்திசாலியான ஜார்ஜ், மனவளர்ச்சி குறைபாடு கொண்ட ஆனால் உடல் வலிமை மிகுந்த லென்னியை எப்போதும் பாதுகாத்து வருகிறார். ஒருநாள் அவர்கள் ஒரு பண்ணையில் வேலை பெறுகின்றனர். தங்களுக்கென ஒரு சிறிய நிலம் வாங்கிச் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற கனவை இருவரும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆனால் லென்னியின் கட்டுப்பாடற்ற வலிமையால் பல எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்கின்றன. இறுதியில் பண்ணை முதலாளியின் மருமகள் உயிரிழக்கிறார். இதனால் லென்னியை மற்றவர்கள் கொல்ல முயல்கின்றனர். தனது நண்பன் வேதனைப்படக் கூடாது என்பதற்காக ஜார்ஜ் தானே லென்னியை சுட்டுக் கொல்கிறார். நட்பு, தனிமை, கனவுகள் மற்றும் சமூக நிஜங்கள் ஆகியவற்றை இந்தப் புதினம் சித்தரிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Of Mice and Men Summary". OxNotes GCSE Revision (in ஆங்கிலம்). Archived from the original on June 4, 2023. Retrieved 2018-10-10.
- ↑ Who, what, why: Why do children study Of Mice and Men? பரணிடப்பட்டது பெப்ரவரி 3, 2023 at the வந்தவழி இயந்திரம் on BBC
- ↑ Stephen Maunder (March 25, 2011). "Who, what, why: Why do children study Of Mice and Men?". BBC News இம் மூலத்தில் இருந்து February 3, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230203010352/http://www.bbc.co.uk/news/magazine-12829392.
- ↑ "American Library Association Top 100 Banned/Challenged Books: 2000–2009". web page. American Library Association. 2011. Archived from the original on January 4, 2012. Retrieved July 1, 2011.