ஆஃபியா செர்பானோ சியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஃபியா செர்பானோ சியா
Afiya Shehrbano Zia
தாய்மொழியில் பெயர்عافیہ شہربانو ضیا
பிறப்புஆஃபியா செர்பானோ சியா
தேசியம்பாகிஸ்தானியர்
படித்த கல்வி நிறுவனங்கள்தொராண்டோ பல்கலைக்கழகம், யார்க்கு பல்கலைக்கழகம்
பணிபெண்ணிய ஆராய்ச்சியாளர், எழுத்தாளர்
அறியப்படுவதுபாக்கித்தானில் உண்மையும் பெண்ணியமும் என்ற நூலை எழுதியவர்.

ஆஃபியா செர்பானோ சியா (Afiya Shehrbano Zia) என்பவர் ஒரு பாக்கித்தானிய பெண்ணிய ஆராய்ச்சியாளராவார். கராச்சி நகரைச் சேர்ந்த இவர் பெண்ணிய எழுத்தாளராகவும் செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்படுகிறார்.[1] 2018 ஆம் ஆண்டு சகெக்சு அகாடமிக் அச்சகம் ஆஃபியா செர்பானோ சியா எழுதிய "பாக்கித்தானில் உண்மையும் பெண்ணியமும் என்ற நூலை வெளியிட்டது. [2][3] பெண்கள், மதச்சார்பின்மை மற்றும் மதம் பற்றிய பல கட்டுரைகளை ஆஃபியா ஏராளமாக எழுதியுள்ளார். [4][5] பெண்கள் உரிமைகளுக்கான நிறுவனமான பெண்கள் செயல் மன்றத்தின் செயல்படும் உறுப்பினராக இவர் உள்ளார். [6][7]

சுயசரிதை[தொகு]

ஆஃபியா 1992 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் யார்க் பல்கலைக்கழகத்தில் பெண்கள் தொடர்பான ஆய்வில் முதுகலை பட்டம் பெற்றார். [8] மேலும் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் பாலின ஆய்வுகளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். [9][10]

ஆஃபியா ஒரு தனித்துவமான ஆராய்ச்சியாளராகவும் அறியப்படுகிறார். 1993 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை இவர் பெண்கள் வளர்ச்சிக்கான அரசு சாரா வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபாட்டுடன் பணியாற்றினார். பெண்களின் சிக்கல்கள் தொடர்பான ஆவணங்கள் பலவற்றை எழுதினார். பெண்கள் பிரச்சினைகள் குறித்து பல புத்தகங்களைத் திருத்தினார். கராச்சியில் உள்ள கல்லூரியில் ஆஃபியா ஒரு பேராசிரியராக சமூகவியல் பாடம் கற்பிக்கிறார். தொடர்ந்து செய்தித்தாள்களுக்கும் படைப்புகள் எழுதுகிறார். கராச்சியில் இருக்கும் ஒரு கல்வி குழுவின் நிறுவன உறுப்பினராக உள்ளார். சமூக-அரசியல் தலைப்புகளில் வர்ணனையாளராக பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகளில் பங்கேற்றுத் தோன்றுகிறார். [11] டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் அபீப் பல்கலைக்கழகங்களில் இவர் ஒரு கல்விப் பருவ பாடத்திட்டத்திற்காக கற்பித்தார், அங்கு இவர் பெண்கள், வேலை மற்றும் இசுலாம் குறித்த ஒரு பாடத்திட்டத்தையும் புதியதாக வடிவமைத்தார். [12]

வெளியீடுகள்[தொகு]

"இசுலாமிய சூழலில் பாலியல் குற்றம்" [13] "குரல் கோரிக்கைகள்" "போட்டியிடும் பெண்ணியம், பாலினம் மற்றும் ஆசியாவில் பாலினம்" [14] உட்பட பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை ஆஃபியா எழுதியுள்ளார். இவரது கட்டுரைகள் சர்வதேச பெண்ணிய அரசியல் பத்திரிகை அரசியல் மற்றும் பெண்ணிய விமர்சனம் போன்ற பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன . பாக்கித்தானில் உண்மையும் பெண்ணியமும் என்ற புத்தகம் சமீபத்திய ஆண்டுகளில் பாக்கித்தானில் மதச்சார்பற்ற பெண்ணிய இயக்கங்கள் சந்தித்த சாதனைகள், வரலாறு மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றி பேசுகிறது.

மதச்சார்பற்ற பெண்ணிய இயக்கத்தின் தொடர்பு நாடு முழுவதும் மதப் போராளிகளின் கீழ் பாக்கித்தான் முழுவதும் அதிகரித்த தொழிலாள வர்க்கப் பெண்களின் இயக்கங்கள் சிலவற்றைக் கொண்டு புத்தகத்தில் இவர் விளக்கியுள்ளார். போலியோ தடுப்பூசிகள், சுகாதாரப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், விவசாயிகள் மற்றும் கலைஞர்கள் நேரடியாக இலக்கு வைத்து கொல்லப்பட்டனர் தாராளவாத கொள்கைகளுக்கான அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்காக. எந்தவிதமான பாதுகாப்பையும் ஆதிக்க அரசியல் கொடுக்கவில்லை என்று இவர் வாதிடுகிறார். ஆஃபியா நாட்டில் இந்த இயக்கங்களின் திறனை நூலில் அங்கீகரிக்க முயற்சிக்கிறார். இசுலாமியப் பெண்களின் மதச்சார்பற்ற தன்னாட்சி பெரும் மாற்றத்திற்கு உறுதியளிக்கிறது என்றும் ஆண் ஆதிக்கத்தை திறம்பட எதிர்க்கிறது என்றும் ஆஃபியா கூறுகிறார்.

டான் நியூசு, நயதவுர், தி நியூசு இன்டர்நேசனல், ஓப்பன் டெமாக்கரசி, தி பிரைடே டைம்சு, டிஎன்எசு- தி நியூசு ஆன் சண்டே, பொருளாதார மற்றும் அரசியல் வாராந்திரி, தி எக்சுபிரசு டிரிப்யூன், டெய்லி டைம்சு (பாக்கித்தான்) மற்றும் தி கார்டியன் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் ஆஃபிரயாவின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. "KARACHI: More citizens upset with beach project" (in en). DAWN.COM. 28 February 2007. https://www.dawn.com/news/235044. 
 2. "Faith and Feminism in Pakistan". www.sussex-academic.com. Archived from the original on 2020-11-11. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
 3. Zaidi, S. Akbar (22 January 2018). "Celebrating women academics" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1384408. 
 4. Jalil, Xari (13 January 2019). "Zia regime painted ‘open’ woman as immoral" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1457160. 
 5. Paracha, Nadeem F. (1 September 2019). "SMOKERS’ CORNER: THE HOPE OF THE APOLOGIST" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1502795. 
 6. "Professor Dr. Afiya S. Zia". Trust for Democratic Education and Accountability (TDEA). Archived from the original on 2021-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-09-02.
 7. Inam, Moniza (14 February 2016). "Women empowerment: The spring of hope" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1239461. 
 8. "DOCTORAL RESEARCH SEMINAR" (PDF).
 9. "Faith and Feminism in Pakistan; Religious Agency or Secular Autonomy? Talk by Afiya S. Zia". T2F | A Project of PeaceNiche. 5 June 2018.
 10. Reporter, The Newspaper's Staff (5 October 2019). "‘Women are silenced through laws, traditions’" (in en). DAWN.COM. https://www.dawn.com/news/1509115. 
 11. "Faith and Feminism in Pakistan: Afiya Zia and Gayatri Spivak in conversation" (in ஆங்கிலம்). 12 February 2013.
 12. "SARC Event: Faith and Feminism in Pakistan: Religious Agency or Secular Autonomy". www.southasia.ox.ac.uk (in ஆங்கிலம்).
 13. "Contributors". Manchester University Press. 18 August 2020.
 14. "Contesting Feminisms". www.sunypress.edu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஃபியா_செர்பானோ_சியா&oldid=3671735" இலிருந்து மீள்விக்கப்பட்டது