ஆஃபினியம்(IV) சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
15823-43-5 | |
ChemSpider | 16019775 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 13094115 |
| |
பண்புகள் | |
Hf(SO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 370.62 கி/மோல் (நீரிலி) |
தோற்றம் | வெண்மையான திண்மம்[1] |
அடர்த்தி | 4.86 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 350 °C (662 °F; 623 K)[2] (சிதைவடையும்) |
கரையும்[1] | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம்[1] |
ஒருங்கிணைவு வடிவியல் |
8 (ஆஃபினியம்)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆஃபினியம்(IV) நைட்ரேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சிர்க்கோனியம்(IV) சல்பேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஆஃபினியம்(IV) சல்பேட்டு (Hafnium(IV) sulfate) என்பது Hf(SO4)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெரும்பாலும் நீரேற்றாகவே இச்சேர்மம் உருவாகிறது. ஆஃபினியத்தின் நீரேற்று Hf(SO4)2·nH2O என்ற பொது வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. வாய்ப்பாட்டிலுள்ள n இன் மதிப்பு 0 முதல் 7 வரை மாறுபடும். பொதுவாக நீரற்ற மற்றும் நான்கு நீரேற்று வடிவங்களை உருவாக்குகிறது, இவை இரண்டும் வெள்ளை நிறத் திடப்பொருட்களாகும்.[1]
கட்டமைப்பு
[தொகு]நீரற்ற ஆபினியம்(IV) சல்பேட்டு, சல்பேட்டு-பாலம் கொண்ட ஆஃப்னியம் அணுக்களின் பல்லுருவ வலையமைப்பைக் கொண்டுள்ளது. இது சிர்க்கோனியம்(IV) சல்பேட்டுடன் சமகட்டமைப்பை வெளிப்படுத்துகிறது.[1][1]
ஆஃப்னியம்(IV) சல்பேட்டு நான்குநீரேற்றும் சிர்கோனியம்(IV) சல்பேட்டு நான்குநீரேற்றும் சமகட்டமைப்பில் உள்ளன. மேலும் இது Hf(SO4)2(H2O)4 இன் அடுக்கடுக்கான தகடுகளைக் கொண்டுள்ளது. இங்கு சல்பேட்டு ஈந்தணைவிகள் இருபல் ஈந்தணைவிகளாக உள்ளன.[1]
தயாரிப்பு
[தொகு]ஆஃப்னியம் உலோகம் அல்லது ஆஃப்னியம்(IV) ஆக்சைடை செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்துடன் வினைபுரியச் செய்து, பின்னர் கரைசலை ஆவியாக்குவதன் மூலம் ஆஃபினியம்(IV) சல்பேட்டு நான்கு நீரேற்று தயாரிக்கப்படுகிறது.[1]
- Hf + 2 H2SO4 → Hf(SO4)2 + 2 H2
ஆஃபினியம்(IV) சல்பேட்டு நான்கு நீரேற்றை 350 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்துவதன் மூலம் நீரற்ற வடிவத்தை உருவாக்க முடியும். நீரற்ற வடிவத்தை 820 °செல்சியசு வெப்பநிலைக்கு வெப்பப்படுத்தினால், அது ஆஃப்னியம்(IV) ஆக்சைடு, கந்தக ஆக்சைடுகள் மற்றும் ஆக்சிசனாக சிதைகிறது. சிதைவின் வழிமுறை முழுமையாக தெளிவுபடுத்தப்படவில்லை.[2]
[Hf18O10(OH)26(SO4)12.7(H2O)20]Cl0.6·nH2O போன்ற ஆஃப்னியம்(IV) ஆக்சைடின் பல்வேறு நீராற்பகுப்பு செய்யப்பட்ட வழித்தோன்றல்கள் அறியப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 I.J. Bear; W.G. Mumme (1970). "The preparation and characterization of phases in the Hf(SO4)2H2O system" (in en). Journal of Inorganic and Nuclear Chemistry 32 (4): 1159–1164. doi:10.1016/0022-1902(70)80110-5.
- ↑ 2.0 2.1 H.A. Papazian; P.J. Pizzolato; R.R. Orrell (1972). "The Thermal Decomposition of Aluminum Sulfate and Hafnium Sulfate" (in en). Thermochimica Acta 4 (2): 97–103. doi:10.1016/S0040-6031(72)80023-6. Bibcode: 1972TcAc....4...97P.
- ↑ Ali Kalaji; L. Soderholm (2014). "Aqueous Hafnium Sulfate Chemistry: Structures of Crystalline Precipitates" (in en). Inorganic Chemistry 53 (20): 11252–11260. doi:10.1021/ic501841e. பப்மெட்:25299984.