அ (இடைச்சொல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

என்பது தமிழிற் பயன்படுத்தப்படும் ஓர் இடைச்சொல் ஆகும்.[1] இது விகுதி, சாரியை, வேற்றுமை உருபு, சுட்டு, முன்னொட்டு போன்றனவாகப் பயன்படுத்தப்படுகின்றது.

சுட்டு[தொகு]

அ அகச்சுட்டாகவோ புறச்சுட்டாகவோ அமையலாம்.[2] மொழிமுதலில் சுட்டுப்பொருளைக் காட்டும்படி வந்தால் மட்டுமே இது சுட்டாகக் கொள்ளப்படும்.[3] எனவே, அன்பு போன்ற சுட்டுப்பொருள் உணர்த்தாத சொற்களைச் சுட்டாகக் கருத முடியாது.[4]

அகச்சுட்டு[தொகு]

சொல்லின் அகத்தேயிருந்து சுட்டுப்பொருள் உணர்த்துவது அகச்சுட்டாகும்.[5] அவன், அந்த, அங்கு, அது முதலிய சொற்களை அ அகச்சுட்டாக அமைவதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.[4][6]

புறச்சுட்டு[தொகு]

சொல்லின் புறத்தேயிருந்து சுட்டுப்பொருள் உணர்த்துவது புறச்சுட்டாகும்.[5] இங்குச் சுட்டெழுத்தைப் பிரித்தாலும் மற்றையது தனித்து நின்று பொருள் தரும்.[4] அக்காடு, அச்சிலை, அவ்யானை, அவ்வாடு முதலிய சொற்களை அ புறச்சுட்டாக அமைவதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.[6] செய்யுள்களில் அகரச் சுட்டு நீண்டு ஆ ஆவதுமுண்டு.[7] ஆ + இடை = ஆயிடை, ஆ + இருதிணை = ஆயிருதிணை முதலியவற்றை இதற்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.[7][8]

வேற்றுமை உருபு[தொகு]

அ என்பது ஓர் ஆறாம் வேற்றுமை உருபாகும்.[9] வருமொழி பன்மையாக இருப்பின் இவ்வுருபு பயன்படுத்தப்படும்.[10] இது தற்கிழமைப் பொருளிலும் பிறிதின்கிழமைப் பொருளிலும் வரும்.[11] வேற்றுமை உருபாக அ பயன்படுத்தப்படுவதற்கு எடுத்துக்காட்டுகளாகத் தன கைகள், தன தாள்கள் முதலியவற்றைக் கூறலாம்.[11]

விகுதி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. அ. கி. பரந்தாமனார். நல்ல தமிழ் எழுத வேண்டுமா?. பக். 54. http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=171&pno=54. 
 2. சங்கர நமச்சிவாயர். நன்னூல் விருத்தியுரை. பக். 151. http://www.tamilvu.org/slet/l0100/l0100pd1.jsp?bookid=6&auth_pub_id=17&pno=151. 
 3. அ இ உம்முதற் றனிவரிற் சுட்டே
  -நன்னூல் 66
 4. 4.0 4.1 4.2 பண்டிதர் க. நாகலிங்கம் (2000). செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம். ஏழாலை மஹாத்மா அச்சகம். பக். 24. 
 5. 5.0 5.1 "அகச்சுட்டு, புறச்சுட்டு விளக்கம் தருக.". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 2015 செப்டம்பர் 6.
 6. 6.0 6.1 மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் (1985). செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி முதன்மடலம்–முதற் பகுதி அ. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம். பக். 1. http://www.tamilvu.org/library/ldpam/ldpam01/ldpam011/images/ldpam011001.jpg. 
 7. 7.0 7.1 பண்டிதர் க. நாகலிங்கம் (2000). செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம். ஏழாலை மஹாத்மா அச்சகம். பக். 98. 
 8. வைத்தியநாத தேசிகர். இலக்கண விளக்கம் எழுத்ததிகாரம். பக். 428. http://www.tamilvu.org/slet/l0B10/l0B10pd1.jsp?bookid=10&pno=428. 
 9. "வேற்றுமை தொடர்பான பிற கருத்துகள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் 2015 செப்டம்பர் 6.
 10. ஆறனொருமைக் கதுவு மாதுவும்
  பன்மைக் கவ்வு முருபாம்
  -நன்னூல் 300
 11. 11.0 11.1 ஆறுமுகநாவலர் (1949). இலக்கணச்சுருக்கம். வித்தியாநுபாலனயந்திரசாலை. பக். ௯௭. 

வெளியிணைப்புகள்[தொகு]

 •   – விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ_(இடைச்சொல்)&oldid=1917787" இருந்து மீள்விக்கப்பட்டது