உள்ளடக்கத்துக்குச் செல்

அ. முத்துலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ.முத்துலிங்கம்
பிறப்புசனவரி 19, 1937 (1937-01-19) (அகவை 87)
கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை
இருப்பிடம்கனடா
அறியப்படுவதுஎழுத்தாளர்
பெற்றோர்அப்பாத்துரை,
ராசம்மா
வாழ்க்கைத்
துணை
கமலரஞ்சினி
பிள்ளைகள்சஞ்சயன்,
வைதேகி
வலைத்தளம்
http://www.amuttu.net

அ. முத்துலிங்கம் (A.Muttulingam, பிறப்பு: சனவரி 19, 1937) குறிப்பிடத்தக்க ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இலங்கையில் பிறந்து பணியின் பொருட்டு பல்வேறு நாடுகளில் வசித்த இவர் சிறுகதைகள்,[1] கட்டுரைகள், நேர்காணல்கள், நாவல்கள் என பன்முக இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். கனடாவில் இயங்கும் இலக்கியத் தோட்ட அமைப்பின் நிறுவனராகவும் அறியப்படுகிறார். இந்தியாவிலும் இலங்கையிலும் பல விருதுகளை வென்றுள்ளார்.[2]

அறிமுகம்

[தொகு]

1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாமவர் ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் படிப்பை முடித்தபின் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தின் முகாமைத்துவக் கணக்காளராகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பயணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் அவையின் OPS பிரிவிலும் முக்கியமான பதவிகளில் பணியாற்றி தற்சமயம் புலம் பெயர்ந்து தன் மனைவி கமலரஞ்சினியுடன் கனடாவில் வசித்து வருகிறார். பிள்ளைகள் இருவர் : சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள் தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்சரா.

இலக்கியப் பணிகள்

[தொகு]

அ. முத்துலிங்கம், பேராசிரியர் க. கைலாசபதியால் எழுத்துலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். இலங்கை தினகரன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'அக்கா' சிறுகதையை தலைப்பாகக் கொண்ட இவரின் முதல் தொகுப்பு திரு க. கைலாசபதியின் அணிந்துரையுடன் 1964ல் வெளியானது. நீண்டகால இடைவெளிக்கு பிறகு 1995ல் மறுபடியும் எழுதத் தொடங்கி சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், நேர்காணல்கள், புத்தக மதிப்புரைகள், நாடக, சினிமா விமர்சனங்கள் என்று எழுதி வருகிறார். இருபதுக்கு மேற்பட்ட வெளிநாட்டு ஆங்கில எழுத்தாளர்களுடன் இவர் நடத்திய நேர்காணல் கட்டுரைகள் தொகுப்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது, கனடாவில் பதிவு செய்யப்பட்ட தமிழ் இலக்கியத் தோட்டம் (Tamil Literary Garden) என்னும் அறக்கட்டளை குழுமத்தில் முக்கிய உறுப்பினராக செயலாற்றுகிறார்.

கடந்த இரண்டரை வருடங்களாக, 2015ல் இருந்து ஹார்வார்டு தமிழ் இருக்கை அமைப்பின் உறுப்பினராகச் செயலாற்றுகிறார். 2018 மார்ச் 5ம் தேதி ஹார்வார்டு விதித்த இலக்கான 6 மில்லியன் டொலர்கள் உலகம் முழுவதிலுமிருந்து நன்கொடையாக திரட்டப்பட்டு விட்டதால் தமிழ் இருக்கை உறுதியானது.

நவீன தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். அவர் கதைகளில் காணப்படுவது வெவ்வேறு தேசங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள், வெவ்வேறு மனிதர்கள். ஆனால் தமிழ் வாசகருக்கு அந்நியப்படாமலும், தீவிரம் சிதைக்கப்படாமலும் அப்புனைவுகள் படைக்கப்பட்டிருக்கின்றன. நாம் அறிந்த உலகங்களுக்கு நாம் அறியாத பாதைகளில் அவை எம்மை இட்டுச் செல்கின்றன; பிரமிக்கவைக்கின்றன. அவரின் பார்வை அதிசயமான கூர்மை கொண்டது. வார்த்தைகளே தன்னை வசீகரிப்பதாக, சிந்திக்க வைப்பதாக, ஆட்கொள்ளுவதாகச் சொல்லும் அ.முத்துலிங்கத்தின் எழுத்தும் நம்மை அதேவிதமான பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

இவரது நூல்கள்

[தொகு]

புதினம்

[தொகு]
  1. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - உயிர்மை பதிப்பகம் (2008)
  1. கடவுள் தொடங்கிய இடம்

சிறுகதை தொகுப்பு

[தொகு]
  1. அக்கா (1964)
  2. திகடசக்கரம் (1995)
  3. வம்சவிருத்தி (1996)
  4. வடக்கு வீதி (1998)
  5. மகாராஜாவின் ரயில் வண்டி (2001)
  6. அ.முத்துலிங்கம் கதைகள் (சிறுகதைகள் முழுதொகுப்பு-2004 வரை எழுதியவை)
  7. ஒலிப்புத்தகம் - (சிறுகதைகள் தொகுப்பு - 2008)
  8. அமெரிக்கக்காரி (2009)
  9. Inauspicious Times - 2008 - (Short stories by Appadurai Muttulingam - translation by Padma Narayanan - available at Amazon.com)
  10. குதிரைக்காரன் - (2012)
  11. கொழுத்தாடு பிடிப்பேன்(தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) - (2013) - காலச்சுவடு பதிப்பகம் - தொகுப்பு ஆசிரியர் க.மோகனரங்கன்
  12. பிள்ளை கடத்தல்காரன் (2015)
  13. ஆட்டுப்பால் புட்டு (2016)
  14. After Yesterday - Translated from Tamil – Short stories – 2017
  15. அ.முத்துலிங்கம் சிறுகதைகள் முழுத் தொகுப்பு – இரண்டு பாகம்- 2016

கட்டுரைத் தொகுப்பு

[தொகு]
  1. அங்கே இப்ப என்ன நேரம்? (2005)
  2. பூமியின் பாதி வயது - உயிர்மை பதிப்பகம் (2007)
  3. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது- (மதிப்புரைகள் தொகுப்பு - 2006)
  4. வியத்தலும் இலமே (நேர்காணல்கள்) - காலச்சுவடு பதிப்பகம் (2006)
  5. அமெரிக்க உளவாளி - கிழக்கு பதிப்பகம் (2010)
  6. ஒன்றுக்கும் உதவாதவன் - உயிர்மை பதிப்பகம் (2011)
  7. தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை – நேர்காணல்கள்  (2013)
  8. தோற்றவர் வரலாறு (2016)
  9. அ.முத்துலிங்கம் கட்டுரைகள் – முழுத்தொகுப்பு – இரண்டு பாகம்- 2018ல் வெளிவருகிறது

சிறுகதைகள் பட்டியல்

[தொகு]
சிறுகதைகள் ஆண்டு
அக்கா தொகுப்பு 1964
1. கடைசி கைங்கரியம் 1958
2. ஊர்வலம் 1958
3. கோடைமழை 1959-1961
4. அழைப்பு 1959-1961
5. ஒரு சிறுவனின் கதை 1959-1961
6. அனுலா 1959-1961
7. சங்கல்ப நிராகரணம் 1959-1961
8. இருப்பிடம் 1959-1961
9. பக்குவம் 1959-1961
10. அக்கா 1959-1961
திகடசக்கரம் தொகுப்பு 1995
11. பார்வதி 1994
12. குங்கிலிய கலய நாயனார் 1994
13. பெருச்சாளி 1994
14. மாற்றமா?தடுமாற்றமா? 1994
15. வையன்னா கானா 1994
16. குதம்பேயின் தந்தம் 1994
17. செல்லரம்மான் 1994
18. திகடசக்கரம் 1994
வம்சவிருத்தி தொகுப்பு 1996
19. துரி 1995
20. ஒருசாதம் 1995
21. கிரகணம் 1995
22. விழுக்காடு 1995
23. பீனிக்ஸ் பறவை 1995
24. முழுவிலக்கு 1995
25. முடிச்சு 1995
26. ஞானம் 1995
27. சிலம்பு செல்லப்பா 1995
28. வம்சவிருத்தி 1995
29. பருத்தி பூ 1995
30. வடக்கு வீதி 1996-1997
வடக்கு வீதி தொகுப்பு 1998
31. எலுமிச்சை 1996-1997
32. குந்தியின் தந்திரம் 1996-1997
33. வசியம் 1996-1997
34. பூமாதேவி 1996-1997
35. யதேச்சை 1996-1997
36. கம்ப்யூட்டர் 1996-1997
37. ரி 1996-1997
38. உடும்பு 1996-1997
39. மனுதர்மம் 1996-1997
40. விசா 1996-1997
41. ஒட்டகம் 1996-1997
மகாராஜாவின் ரயில்வண்டி தொகுப்பு 2001
42. மகாராஜாவின் ரயில்வண்டி 1999-2000
43. நாளை 1999-2000
44. தொடக்கம் 1999-2000
45. ஆயுள் 1999-2000
46. விருந்தாளி 1999-2000
47. மாற்று 1999-2000
48. அம்மாவின் பாவாடை 1999-2000
49. செங்கல் 1999-2000
50. கடன் 1999-2000
51. பூர்வீகம் 1999-2000
52. கறுப்பு அணில் 1999-2000
53. பட்டம் 1999-2000
54. ஐவேசு 1999-2000
55. எதிரி 1999-2000
56. ஐந்தாவது கதிரை 1999-2000
57. தில்லை அம்பல பிள்ளையார் கோயில் 1999-2000
58. கல்லறை 1999-2000
59. கொம்புளானா 1999-2000
60. ராகு காலம் 1999-2000
61. ஸ்ரோபரி ஜாம் போத்தலும் அபீஸீனியன் பூனையும் 1999-2000
பிற
62. 23 சதம் 2001
63. மொசுமொசுவென்று சடை வைத்த வெள்ளை முடி ஆடுகள் 2001
64. அடைப்புகள் 2001
65. போரில் தோற்றுப்போன குதிரை வீரன் 2001
66. தாத்தா விட்டுபோன தட்டச்சு மெசின் 2002
67. ஆப்பிரிக்காவில் அரை நாள் 2002
68. கொழுத்தாடு பிடிப்பேன் 2002
69. அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை 2003
70. முதல் விருந்து முதல் பூகம்பம் முதல் மனைவி 2003
71. காபூல் திராட்சை 2003
72. நாற்பது வருட தாபம் 2003
73. பூமத்திய ரேகை 2003
74. தளுக்கு 2003
75. எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை 2003
குதிரைக்காரன் தொகுப்பு 2012
76. குதிரைக்காரன் 2012
77.குற்றம் கழிக்க வேண்டும் 2012
78.மெய்காப்பளன் 2012
79.பாரம் 2012
80.ஐந்து கால் மனிதன் 2012
81.ஜகதலப்ரதாபன் 2012
82.புளிக்கவைத்த அப்பம் 2012
83.புது பெண்சாதி 2012
84.22 வயது 2012
85.எங்கள் வீட்டு நீதிவான் 2012
86.தீர்வு 2012
87.எல்லாம் வெல்லும் 2012
88.மூளையால் யோசி 2012
89.ஆச்சரியம் 2012
90.கனகசுந்தரி 2012
அமெரிக்ககாரி தொகுப்பு 2009

பரிசுகளும், விருதுகளும்

[தொகு]
  • தினகரன் சிறுகதைப் போட்டி பரிசு - 1961
  • கல்கி சிறுகதைப் போட்டி பரிசு
  • திகடசக்கரம் - லில்லி தேவசிகாமணிப் பரிசு - 1995
  • வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - தமிழ்நாடு அரசாங்கம் முதல் பரிசு - 1996
  • வம்சவிருத்தி - சிறுகதைத் தொகுப்பு - இந்திய ஸ்டேட் வங்கி முதல் பரிசு - 1996
  • ஜோதி விநாயகம் பரிசு - 1997
  • வடக்கு வீதி - சிறுகதைத் தொகுப்பு - இலங்கை அரசு சாகித்தியப் பரிசு - 1999
  • கனடா தமிழர் தகவல் - நாற்பது ஆண்டு தமிழ் இலக்கியச் சாதனை விருது - பிப்ரவரி 2006
  • திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது - 2012
  • குதிரைக்காரன் - சிறுகதைத் தொகுப்பு - 2012ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான விகடன் விருது[3]
  • எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராய விருது 2013
  • மார்க்கம் நகரசபை இலக்கிய விருது - 2014

மேற்கோள்கள்

[தொகு]
  1. "After Yesterday: A search for home, hope and love in Appadurai Muttulingam’s translated short stories.". firstpost. 24 March 2012. https://www.firstpost.com/living/after-yesterday-a-search-for-home-hope-and-love-in-appadurai-muttulingams-translated-short-stories-4874891.html. 
  2. "After Yesterday and other stories". purplepencilproject. 14 September 2020. https://www.purplepencilproject.com/book-review-tamil-after-yesterday-stories-appadurai-muttulingam/. 
  3. "விகடன் விருதுகள் 2012". Archived from the original on 2013-01-12. பார்க்கப்பட்ட நாள் 2013-01-11.

வெளி இணைப்புக்கள்

[தொகு]
தளத்தில்
அ. முத்துலிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.

இவரைப் பற்றி மற்ற எழுத்தாளர்கள்...

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._முத்துலிங்கம்&oldid=4056166" இலிருந்து மீள்விக்கப்பட்டது