உள்ளடக்கத்துக்குச் செல்

அ. மா. பரமசிவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அ. மா. பரமசிவம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்பெ. மலைச்சாமி
பின்னவர்வீரன் அம்பலம்
தொகுதிமேலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1945-08-04)4 ஆகத்து 1945
நெல்லியேந்தல்பட்டி
இறப்பு23 மார்ச்சு 2015(2015-03-23) (அகவை 69)
சென்னை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
முன்னாள் மாணவர்அமெரிக்கன் கல்லூரி, மதுரை (இளங்கலை)
தொழில்விவசாயி

அ. மா. பரமசிவம் (A. M. Paramasivan)(4 ஆகத்து 1945-23 மார்ச்சு 2015) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழக முன்னாள் அமைச்சரும் ஆவார், இவர் 1977ஆம் ஆண்டு முதல் மேலூர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1991 முதல் 1996 வரை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.[1] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். மதுரை மாவட்டம் நெல்லியேந்தலைச் சார்ந்த பரமசிவம், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். விவசாயம் இவரது தொழிலாகும்.[2]

இறப்பு

[தொகு]

மதுரை அண்ணாநகரில் வாழ்ந்துவந்த இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கபட்டு இருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 2015 மார்ச் 23 அன்று இறந்தார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார்-எவர்” (in ஆங்கிலம்-தமிழ்). சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை. 1991. p. 326.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. தமிழ் நாடு சட்டமன்ற பேரவை ”யார்-எவர்”. சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை. 1977. pp. 285–286.
  3. "முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம் மறைவு". Hindu Tamil Thisai. 2015-03-25. Retrieved 2025-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._மா._பரமசிவம்&oldid=4320521" இலிருந்து மீள்விக்கப்பட்டது