அ. பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அ. பொன்னுசாமி (A. Ponnusamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஈரோடு மாவட்டம் பெத்தாம் பாளையத்தினைச் சேர்ந்தவர். பொன்னுசாமி பெருந்துறை கழக உயர்நிலைப் பள்ளியிலும், சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரி, சர் தியாகராசர் கல்லூரி, இசுடாலின் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் கல்வி பயின்றுள்ளார். மருத்துவத்தில் முது நிலை பட்டமும் பெற்றுள்ளார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக, 1977ஆம் ஆண்டு மற்றும் 1984 தேர்தல்களில் பெருந்துரை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1977 தமிழக தேர்தல் முடிவுகள்" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது.
  2. "1984 தமிழக தேர்தல் முடிவுகள்" (PDF). 2018-11-13 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-23 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._பொன்னுசாமி&oldid=3540301" இருந்து மீள்விக்கப்பட்டது