அ. சின்னசாமி
தோற்றம்
அ. சின்னசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1971–1976 | |
| முன்னையவர் | கே. எ. எ. கே. மூர்த்தி |
| பின்னவர் | வெ. கருணாமூர்த்தி |
| தொகுதி | ஜெயங்கொண்டம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 அக்டோபர் 1938 பெரியம்மாபாளையம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| முன்னாள் மாணவர் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் |
| தொழில் | கல்லூரிப் பேராசிரியர் |
அ. சின்னசாமி (A. Chinnasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் மாவட்டம் பெரியம்மாபாளையம் கிராமத்தினைச் சேர்ந்தவர். அரும்பாவூர் கழக உயர்நிலைப் பள்ளியிலும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். சட்டமன்ற உறுப்பினராக பதவிவகிக்கும் முன்னர், சென்னை மதராசு மருத்துவக் கல்லூரி, கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, திருவாரூர் திரு. வி. க. கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1971ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
தேர்தல் செயல்பாடு
[தொகு]1971
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திமுக | அ. சின்னசாமி | 41,627 | 57.78% | 5.21% | |
| காங்கிரசு | எசு. இராமசாமி | 29,346 | 40.73% | -2.82% | |
| சுயேச்சை | பி. கே. இராமசாமி | 1,071 | 1.49% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 12,281 | 17.05% | 8.03% | ||
| பதிவான வாக்குகள் | 72,044 | 80.50% | -0.52% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 91,719 | ||||
| திமுக கைப்பற்றியது | மாற்றம் | 5.21% | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 69-70.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.