அ. சவ்தா உம்மாள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அ. சவ்தா உம்மாள் (பிறப்பு: செப்டம்பர் 28 1959), இந்திய முஸ்லிம் பெண் எழுத்தாளர், இந்தியா காரைக்காலில் பிறந்து தற்போது காரைக்கால் காரை கோவில்பத்து புளியங்கொட்டை சாலை எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட இவர் காரைக்கால் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி முதுகலைத் தமிழ் துறை விரிவுரையாளரும், எழுத்தாளரும், பேச்சாளரும், இலக்கியம், சமூகவியல், தத்துவம், பெண்ணியம், புனைகதை ஆகிய துறைகளில் அதிக ஈடுபாடு கொண்டவரும், இலக்கிய சமயச் சொற்பொழிவாளரும், இஸ்லாமியத் தமிழலக்கியக் கழகத்தின் மகளிர் பிரிவுச் செயலாளரும், மகாகவி பாரதி தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவருமாவார்.[1] மேலும் காரைக்காலில் நடந்த விசுவின் அரட்டை அரங்கத்தில் நடுவராக இருந்தவரும், புதுவை ஆளுநரின் உரையை மொழிபெயர்த்தவரும்ää எழுத்தாலும் பேச்சாலும் பெண்களின் முன்னேற்றத்துக்குக்காகப் பாடுபட்டு வருபவரும்கூட.
பெற்ற விருதுகளும் கௌரவங்களும்[தொகு]
- சொல்லின் செல்வி
- தமிழ்மாமணி
- கலைக்கோ மாமணி
- காப்பியச் சீர் காவலர்
- சமுதாயச் சிற்பி
உசாத்துணை[தொகு]
- ↑ "உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு". 21 November 2021 அன்று பார்க்கப்பட்டது.
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011