அ. இர. இளம்பரிதி
| அ. இர. இளம்பரிதி | |
|---|---|
| நாடு | இந்தியா |
| பிறப்பு | மார்ச்சு 28, 2009 சென்னை, இந்தியா |
| பட்டம் | கிராண்டுமாசுட்டர் (2025) |
| உச்சத் தரவுகோள் | 2518 (அக்டோபர் 2025) |
அ. இர. இளம்பரிதி (Ilamparthi A. R.) இந்தியாவைச் சேர்ந்த ஒரு சதுரங்க கிராண்டுமாசுட்டர் ஆவார். 2009 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28 ஆம் தேதியன்று பிறந்தார். பிடே அமைப்பு 2025 ஆம் ஆண்டு இவருக்கு சதுரங்க கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த இவர் இந்தியாவின் 90 ஆவது கிராண்டு மாசுட்டராகவும் தமிழ்நாட்டின் 35 ஆவது கிராண்டு மாசுட்டராகவும் சிறப்பு பெற்றுள்ளார்.[1][2]
சதுரங்க வாழ்க்கை
[தொகு]2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் உலக இளைஞர் சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வென்ற சில நாட்களில் உலக விரைவு சதுரங்க இளையோர் வெற்றியாளர் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இவர் வென்றார்.[3]
2024 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் நடைபெற்ற சுலோவாக்கியா சதுரங்க திறந்தநிலை போட்டியில் ஐந்து வீரர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இறுதியில் சமநிலை முறிவு ஆட்டங்களில் வெற்றி பெற்று போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[4]
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற சிங்சு காம்பிட் தரப்புள்ளி திறந்தநிலை போட்டியில் 7.5/8 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் இவரை விட ஓர் அரைப் புள்ளி மட்டுமே பின்தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[5]
2025 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் நடைபெற்ற வேலம்மாள் எம் எச்.எசு. உலக பள்ளிகள் அணி வெற்றியாளர் போட்டியில் இளம்பரிதி விளையாடினார். இவர் இடம்பெற்றிருந்த அணி போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது. நான்காவது பலகையில் விளையாடிய இவர் தனிநபர் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.[6]
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் போசுனியா மற்றும் எர்சகோவினாவில் நடந்த பிச்செல்சினா சதுரங்கப் போட்டியில் இளம்பரிதி பட்டம் வென்றார். இப்போட்டியில் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவதற்கான விதிமுறையான 2500 தரப்புள்ளிகளை பெற்றார். இதன் மூலம் இளம்பரிதிக்கு இந்தியாவின் 90ஆவது மற்றும் தமிழகத்தின் 35ஆவது சதுரங்க கிராண்டு மாசுட்டர் என்ற சிறப்பு கிடைத்தது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிரிவு, இணையதளச் செய்திப் (2025-10-30). "தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!". Dinamani. Retrieved 2025-11-08.
- ↑ தினத்தந்தி (2025-10-30). "கிராண்ட்மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து". www.dailythanthi.com. Retrieved 2025-11-08.
- ↑ Ahmed, Shahid (February 28, 2023). "Ilamparthi wins WR Chess Juniors U-14 Boys and Blitz 2023".
- ↑ "Pawel Sowinski triumphs in Slovakia Chess Open". July 18, 2024.
- ↑ Ahmed, Shahid (December 2, 2024). "Ilamparthi decimates Singh's Gambit Rating Open 2024".
- ↑ Ahmed, Shahid (August 9, 2025). "Velammal MHS Golden at World Schools Team Championship 2025 with a perfect score".
- ↑ "Chess boom continues! 16-year-old Ilamparthi AR has become India's 90th Grandmaster". October 30, 2025.