அ. இராமசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அ. இராமசாமி (19, திசம்பர், 1943) பல்கலைக்கழகத் துணைவேந்தர், வரலாற்றாசிரியர், நூலாசிரியர், அரசு நிருவாகி எனப் பன்முகம் கொண்டவர் ஆவார்.

ஆற்றிய பணிகள்[தொகு]

மதுரைக் கல்லூரி மற்றும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றபின் 26 ஆண்டுகள் அரசுக் கல்லூரிகளில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணி புரிந்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தேர்வாணையராகவும் பதிவாளராகவும் பணியாற்றினார். பிறகு காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராக ஆனார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் பதவியில் இருந்தார்.

எழுத்துப் பணிகள்[தொகு]

அண்ணாதுரையின் மொழிக்கொள்கையைப் பொருளாகக் கொண்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு என்னும் இவருடைய நூலுக்குத் தமிழ் நாடு அரசு பரிசு வழங்கியது. தமிழ்நாட்டு வரலாறு என இவர் எழுதிய நூல் மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது.

எழுதிய நூல்கள்[தொகு]

 • தமிழ்ப் பேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்
 • வள்ளுவமும் வரலாறும்
 • இரத்தத்தில் ஐம்பது நாள்கள்
 • தமிழ் நாட்டு வரலாறு
 • புதுச்சேரி வரலாறு
 • புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு
 • சூரியன் மறைவதில்லை
 • சோழர் வரலாறு
 • என்று முடியும் இந்த மொழிப் போர்
 • துரோகம் ஒரு தொடர்கதை
 • அண்ணாவின் மொழிக் கொள்கை

ஆங்கிலத்திலும் சில வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்.

உசாத்துணை[தொகு]

வள்ளுவமும் வரலாறும்-நூல் பூம்புகார் பதிப்பகம்,பிரகாசம் சாலை,சென்னை-108

மேலும் பார்க்க[தொகு]

http://www.viduthalai.in/previousyear/home/viduthalai/medical/49765-2012-11-30-10-56-32.html

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._இராமசாமி&oldid=2974990" இருந்து மீள்விக்கப்பட்டது