அஸ்ஹர் மஹ்மூத்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | அஸ்ஹர் மஹ்மூத் சாகர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 11 அங் (1.80 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலதுறை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 146) | அக்டோபர் 6 1997 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 4 2001 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 108) | செப்டம்பர் 16 1996 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | மார்ச்சு 17 2007 எ. அயர்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 18 2009 |
அஸ்ஹர் மஹ்மூத் சாகர் (Azhar Mahmood Sagar, பிறப்பு: உருது :اظہر محمود ساگر, பிப்ரவரி 28 1975), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்க தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1997 இலிருந்து 2007 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். ஓக்லாந்து துடுப்பாட்ட அணி, பார்படோசு , இஸ்லாமதாபாத் துடுப்பாட்ட சங்கம் , ராவல்பிண்டி, சர்ரே அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் இவர் விளையாடியுள்ளார். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் இவர் கிங்சு லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளில் விளையாடியுள்ளார்.
சர்வதேச போட்டிகள்
[தொகு]தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]1997 ஆம் ஆண்டில் தென்னப்பிரிக்கா துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அக்டோபர் 6 இல் ராவல்பிண்டியில் நடைபெற்ற தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 267 பந்துகளில் 128 ஓட்டங்கள் எடுத்தார். பந்துவீச்சில் 21 ஓவர்கள் வீசி 74 ஓட்டங்களை விட்டு கொடுத்து 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில்1 ஓவரை மெய்டனாக வீசினார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 96 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 8 நான்குகளும்1 ஆறுகளும் அடங்கும். இந்தப் போட்டி சமனில் முடிந்தது. இவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.[1]
2001 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. மே 31 இல் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 63 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஹோகார்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் பந்துவீச்சில் 8 ஓவர்கள் வீசி 35 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இரண்டாவது ஆட்டப் பகுதியில் 30 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்து கட்டிக்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இரண்டாவது ஆட்டப்பகுதியில் இவருக்குப் பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 108 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
[தொகு]1996 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி கனாடாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 16, இல் தொராண்டோவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 11 பந்துகளில் 6 ஓட்டங்கள் எடுத்து வெங்கடேஷ் பிரசாத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 4 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார் ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. இதில் இந்திய அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]
இறுதிப் போட்டி
[தொகு]2007 ஆம் ஆண்டில் கிங்ஸ்டன், யமைக்காவில் நடைபெற்ற 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் டி பிரிவில் 9 ஆவது போட்டியாக மார்ச் 17 இல் அயர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 21 பந்துகளில் 2 ஓட்டங்கள் எடுத்து ரான்கின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்கினைக் கைப்பற்றினார். இதில் அயர்லாந்து அணி 3 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "1st Test, South Africa tour of Pakistan at Rawalpindi, Oct 6-10 1997 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
- ↑ "2nd Test, Pakistan tour of England at Manchester, May 31-Jun 4 2001 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
- ↑ "1st ODI, Pakistan tour of Canada at Toronto, Sep 16 1996 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25
- ↑ "9th Match, Group D, ICC World Cup at Kingston, Mar 17 2007 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-25