அஸ்வகோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


வனத்தின் அழைப்பு என்ற கவிதைத் தொகுதியின் மூலமாக பெருங்கவனிப்பைப் பெற்றவர்

அஸ்வகோஷ். தொண்ணூறுகளில் சரிநிகரில் பிரசுரமானபோதே வனத்தின் அழைப்பு, அவலம்,

காண்டாவனம் போன்ற நெடுங்கவிதைகள் அஸ்வகோஷைப் பற்றிப் பலரையும் பேச வைத்தது.

கடந்த காலத்தின் தீராத வலியுடைய நாட்களின் சித்திரங்களை உயிர்ப்புடன் முன்வைத்த

அஸ்வகோஷின் அடையாளம் என்றும் தனித்துலக்கமுடையது.

யாழ்ப்பாணம் - வடமராட்சியில் பிறந்த அஸ்வகோஷின் இயற்பெயர் ரமணேஷ். தொடர்ந்து

கொண்டிருந்த யுத்தத்தின் மத்தியில் வளர்ந்த தலைமுறையைச் சேர்ந்தவர். கூருணர்வுடன்

யுத்தத்தின் இரு பக்கங்களையும் கவித்துவத்துடன் பதிவுசெய்தவர். ஈழத்து கவிதைகளில்

தவிர்க்கவே முடியாத சில கவிதைகள் அவருடையது. ராம் கதிரவேல் என்ற பெயரில் ஞாயிறு

தினக்குரல் பத்திரிகையில் 2002-2005 காலப்பகுதியில் இவர் தொகுத்த பனுவல் என்ற இலக்கிய

பக்கம் வெகுசன ஊடகத்தில் காத்திரமான கருத்தாடல்களை மக்களுக்கு காட்சிப்படுத்தும்

இலக்குடன் வெளிவந்தது.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்வகோஷ்&oldid=2304685" இருந்து மீள்விக்கப்பட்டது