அஸ்யூத்

ஆள்கூறுகள்: 27°11′N 31°10′E / 27.183°N 31.167°E / 27.183; 31.167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்யூத்
வார்ப்புரு:Script/Coptic
வார்ப்புரு:Script/Coptic

أسيوط
நகரம்
கடிகாரச் சுற்றுப் படி:மேலிருந்து அஸ்யூத் தடுப்பணை, அஸ்யூத் சமய நிறுவனம், அலெக்சன் பாஷா அரண்மனை, தேர் முக்கல்லா மேலோட்டப்ப் பார்வை, அஸ்யூத் பல்கலைக் கழகம், தேர் முக்கல்லாவின் தெற்கு குடியிருப்புகள்
அஸ்யூத் is located in Egypt
அஸ்யூத்
அஸ்யூத்
எகிப்தில் அஸ்யூத் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°11′N 31°10′E / 27.183°N 31.167°E / 27.183; 31.167
நாடு எகிப்து
ஆளுநரகம்அஸ்யூத் ஆளுநரகம்
ஏற்றம்70 m (230 ft)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்389,307[1]
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
தொலைபேசி குறியீடு(+20) 88

அஸ்யூத் (Asyut) தெற்கு எகிப்தில் அமைந்த அஸ்யூத் ஆளுநரகத்தின் தலைமையிடமும், பண்டைய எகிப்தியத் தொல்லியல் களமும் ஆகும். இப்பண்டைய நகரம் கோப்திக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராலயம் மற்றும் தொல்லியல் மேட்டால் புகழ் பெற்றது. இந்நகரம் நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பண்டைய அஸ்யூத் நகர வரலாறு[தொகு]

19-ஆம் வம்ச மன்னர்முதலாம் சேத்தி மற்றும் அவரது இராணியின் சிலை, கிமு 1290–1270) அஸ்யூத் நகரம்

மேல் எகிப்தில், நைல் நதியின் மேற்குக் கரையில் அமைந்த அஸ்யூத் நகரம் கிமு 3100-ஆம் ஆண்டில் எகிப்தின் பதின்மூன்றாவது நோம் பிரதேசத்தின் தலைநகராக விளங்கியது. இந்நகரத்தில் பார்வோன்களும், மக்களும் வழிபட்ட எகிப்திய இறுதிச் சடங்குக் கடவுள்களில் அனுபிஸ் மற்றும் வெபாவெத் ஆவர்.[2]

11-ஆம் வம்ச ஆட்சியின் போது, பார்வோன் இரண்டாம் இன்டெப், பத்தாம் வம்ச மன்னர்களை வென்று, ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா, சக்காரா மற்றும் அபிதோஸ் நகரங்களை கைப்பற்றியதுடன், தீபை நகரத்தை எகிப்தின் தலைநகராக்கினார். இதனால் அஸ்யூத் நகரத்தின் முக்கியத்துவம் மங்கத் தொடகியது.

பார்வோன் கேத்தியின் மண்டையோடு, அஸ்யூத் நகரம், கிமு 1950

கிபி 12-ஆம் நூற்றாண்டின் பைசாந்தியப் பேரரசுக் காலத்தில், எகிப்தின் அஸ்யூத் நகரத்தில் பெரிய அளவில் தொல் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் மேற்குலக நாடுகளின் அருங்காட்சியகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

எகிப்தின் அஸ்யூத் நகரத்தையும், சூடானின் தார்பூர் நகரத்தையும் இணைக்கும் சாலை 700 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. கிபி 14-ஆம் நூற்றாண்டில் இப்பாதையில் 12,000 ஒட்டகக் கூட்டங்கள் கடக்கும்.[3]

நவீன அஸ்யூத் நகரம்[தொகு]

தற்கால நவீன அஸ்யூத் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 4,00,000 ஆகும்.[4] இந்நகரத்தில் வாழும் கிறித்தவர்களில் கத்தோலிக்க கோப்டிக் கிறித்தவர்கள் ஆவார்.[5] இந்நகரத்தில் அஸ்யூத் பல்கலைக் கழகம் உள்ளது. இந்நகரம் நெசவுத் தொழில், மட்பாண்டத் தொழில், மர வேலைபாடுகள், கம்பளிப் போர்வைகளுக்கு பெயர் பெற்றது. [6]

புவியியல்[தொகு]

தட்ப வெப்பம்[தொகு]

இந்நகரத்தின் கோடைக் கால அதிகபட்ச வெப்பம் 51 °C (124 °F) ஆகவும்; குளிர்காலத்தில் குறைந்த பட்ச வெப்பம் −2 °C (28 °F) ஆக பதிவாகியுள்ளது.[7]

தட்பவெப்ப நிலைத் தகவல், அஸ்யூத்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32.2
(90)
39.8
(103.6)
44.2
(111.6)
44.6
(112.3)
47.8
(118)
48.4
(119.1)
44.3
(111.7)
45.2
(113.4)
43.5
(110.3)
41.5
(106.7)
37.6
(99.7)
32.2
(90)
48.4
(119.1)
உயர் சராசரி °C (°F) 19.3
(66.7)
21.7
(71.1)
25.1
(77.2)
31.4
(88.5)
35.2
(95.4)
37.1
(98.8)
36.5
(97.7)
36.0
(96.8)
34.2
(93.6)
30.5
(86.9)
25.1
(77.2)
20.3
(68.5)
29.4
(84.9)
தினசரி சராசரி °C (°F) 11.7
(53.1)
13.9
(57)
17.4
(63.3)
23.2
(73.8)
27.2
(81)
29.6
(85.3)
29.6
(85.3)
29.0
(84.2)
26.9
(80.4)
23.4
(74.1)
17.4
(63.3)
13.3
(55.9)
21.9
(71.4)
தாழ் சராசரி °C (°F) 4.7
(40.5)
6.3
(43.3)
9.7
(49.5)
14.5
(58.1)
18.6
(65.5)
21.3
(70.3)
22.0
(71.6)
21.7
(71.1)
19.6
(67.3)
16.2
(61.2)
10.7
(51.3)
6.7
(44.1)
14.3
(57.7)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.0
(32)
1.2
(34.2)
0.7
(33.3)
6.2
(43.2)
11.3
(52.3)
15.4
(59.7)
17.9
(64.2)
18.0
(64.4)
13.8
(56.8)
10.7
(51.3)
3.0
(37.4)
0.9
(33.6)
0.0
(32)
பொழிவு mm (inches) 0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
ஈரப்பதம் 52 42 36 28 25 27 32 36 40 42 48 52 38.3
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) 0.0 0.1 0.0 0.2 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.3
Source #1: NOAA[8]
Source #2: Weather2Travel for sunshine[9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Asyut


"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்யூத்&oldid=3542332" இருந்து மீள்விக்கப்பட்டது