உள்ளடக்கத்துக்குச் செல்

அஸ்மா நபில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்மா நபில்
பிறப்பு1970கள்
இறப்பு1 July 2021 (2021-08)[1][2]
கராச்சி, பாக்கித்தான்
தேசியம்பாக்கித்தானியர்
கல்விமக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலை
படித்த கல்வி நிறுவனங்கள்கராச்சி பல்கலைக்கழகம் (2000)
பணிதிரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், கவிஞர், படைப்பு ஆலோசகர், கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2001–2021
அமைப்பு(கள்)கிரோ மோஷன் பிக்சர்ஸ்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கானி, குதா மேரா பி ஹை

அஸ்மா நபில் (Asma Nabeel) (1970கள்-1 ஜூலை 2021) பாக்கித்தானைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியரும், கவிஞரும், தயாரிப்பாளரும் மற்றும் படைப்பு ஆலோசகரும் ஆவார். குதா மேரா பி ஹை மற்றும் கானி போன்ற பாக்கித்தான் நாடகங்களுக்கு திரைக்கதைகளை எழுதினார்.

கல்வி

[தொகு]

கராச்சி பல்கலைக்கழகத்தில் 2000 ஆம் ஆண்டில் மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

படைப்பாற்றல் ஆலோசகர்

[தொகு]

அஸ்மா பல நிறுவனங்களில் விளம்பர ஆலோசகராக பணியாற்றினார்.[3] இவர் நான்கு ஆண்டுகள் ஜே. டபிள்யூ. டி. என்ற நிறுவனத்தில் படைப்பு இயக்குநராக இருந்தார். மேலும், ORIENTM இல் ஒரு படைப்புத் தலைவராகவும் இருந்தார். அஸ்மா பின்னர் வால்டர் பாக்கித்தான் என்ற நிறுவனத்தில் தலைமை படைப்பு அதிகாரியாக ஆனார்.

திரைக்கதையாசிரியர்

[தொகு]

திரைக்கதை எழுத ஆரம்பித்தபோது அஸ்மாவிற்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பிறகு பல முறை வேதிச்சிகிச்சை அமர்வுகளுக்கு உட்படுத்த வேண்டியிருந்தது. இந்த நேரத்தில் அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. இதனைப் பயன்படுத்தி பல ஒருவரி கதைகளை எழுதத் தொடங்கினார். ஒரு நாள், குதா மேரா பி ஹை என்ற தொடரைத் தயாரிக்க ஒரு புதிய தயாரிப்பாளர் சனா ஷாநவாஸை அஸ்மா சந்தித்தார்.[4][5] அஸ்மா 26 அத்தியாயங்களுக்கு திரைகதை எழுதினார். அதை சனா ஷாநவாஸ் நாடகமாகத் தயாரித்தார்.[6] இந்த நாடகம் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் ஏற்றுக்கொள்ளும் குழந்தைகளின் சகிப்புத்தன்மை பற்றிய பிரச்சினையை எழுப்பியது.[7][8] இது ஏ. ஆர். ஒய் டிஜிட்டல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆயிஷா கான் மற்றும் சையத் ஜிப்ரான் ஆகியோர் முக்கிய நடிகர்களாக நடித்தனர்.[9][10][11]

பின்னர், செவந்த் ஸ்கை என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்காக கானி என்ற தொலைக்காட்சித் தொடருக்கு அஸ்மா திரைக்கதையை எழுதினார். இது ஒரு பிரபலமான தொடராக மாறியது. மேலும் அந்த நேரத்தில் ஒளிபரப்பப்பட்ட பல நாடகத் தொடர்களை விஞ்சியது.[12][13] இதில் பெரோஸ் கான் மற்றும் சனா ஜாவேத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.[14][15] இந்த நாடகம் லக்ஸ் ஸ்டைல் விருதுகள் 2019 இல் ஆறு பரிந்துரைகளைப் பெற்றது.[16]

2018 ஆம் ஆண்டில், இவர் அஹ்சன் ராசா பிர்தௌசியுடன் இணைந்து மான் ஜாவோ நா என்ற காதல் நகைச்சுவைப் படத்திற்கு திரைக்கதை எழுதினார்.[17][18]

கவிஞர்

[தொகு]

கஜோல் நடித்த ஹெலிகாப்டர் ஈலா படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கான பாடல்களை எழுதியதன் மூலம் அஸ்மா பாலிவுட்டில் அறிமுகமானார்.[19] இந்தப் பாடலை ஷில்பா ராவ் பாடியிருந்தார். ஆஸ்மா முன்பு ஹெலிகாப்டர் ஈலா படத்தின் இயக்குனர் பிரதீப் சர்க்கார் விளம்பரங்களில் பணியாற்றியபோது ஒரு சில விளம்பரங்களில் இவரும் பணியாற்றியிருந்தார்.[20] பிரதீப் ஆஸ்மாவின் எழுத்தை விரும்பினார். எனவே அவர் தனது படத்திற்கு ஒரு பாடலை எழுத அஸ்மாவைத் தொடர்பு கொண்டார்.[21][22]

சமூகப் பணி

[தொகு]

சமூகப் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தும் திட்டங்களில் அஸ்மா ஈடுபட்டார்.[23]

அஸ்மா பல சமூகப் பிரச்சினைகள் குறித்த பேச்சாளராகவும் இருந்தார். இவர் இளம்பிள்ளை வாதம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகளை நடத்தினார்.[24][25] இவர் அடிக்கடி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை பற்றி பேசினார். மேலும் அதைச் சுற்றியுள்ள தடையை அகற்றுவதற்காகப் பணியாற்றினார்.[26]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Asma Nabeel passes away after a prolonged battle with cancer". The Express Tribune (in ஆங்கிலம்). 2 July 2021. Retrieved 2 July 2021.
  2. "Renowned screenwriter, producer Asma Nabeel breathes her last". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 2 July 2021.
  3. "Asma Nabeel 2.jpg". Independent Urdu (in உருது). Retrieved 24 November 2020.
  4. "Khuda Mera Bhi Hai raises important questions". The Nation (in ஆங்கிலம்). 4 April 2017. Retrieved 24 November 2020.
  5. Tahir, Mariam. "Kami Sid compares her upcoming film 'Rani' to Khuda Mera Bhi Hai". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  6. Images Staff (23 October 2019). "Writer Asma Nabeel is working on a movie about breast cancer". Images (in ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  7. Saleem, Sadiq. ""I always have an agenda when I write a story"". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  8. "Khuda mera bhi hai | Pakistan Today". www.pakistantoday.com.pk. Retrieved 24 November 2020.
  9. "khuda mera bhi hai Archives". ARY NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 11 December 2020. Retrieved 24 November 2020.
  10. "Khuda Mera Bhi Hai: A game changer for Pakistan's dramasphere". The Express Tribune (in ஆங்கிலம்). 6 April 2017. Retrieved 24 November 2020.
  11. "Khuda Mera Bhi Hai, staring Aisha khan, has made many mistakes". Something Haute (in அமெரிக்க ஆங்கிலம்). 7 January 2017. Retrieved 24 November 2020.
  12. "Khaani -a tale of love, obsession & revenge". The Nation (in ஆங்கிலம்). 29 June 2018. Retrieved 24 November 2020.
  13. "Khaani concludes on a high note | Instep | thenews.com.pk". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  14. "It's Feroze Khan that people are falling in love with - Asma Nabeel". Something Haute (in அமெரிக்க ஆங்கிலம்). 8 February 2018. Retrieved 24 November 2020.
  15. "'Khaani' — the end of a new beginning". Daily Times (in அமெரிக்க ஆங்கிலம்). 7 July 2018. Retrieved 24 November 2020.
  16. Viqas, Rumaisa (26 June 2019). "Drama Serial "Khaani" Gets Honored with 6 Nominations in Lux Style Awards 2019". ACE NEWS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  17. "Asma Nabeel – Karachi Literature Festival" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  18. Mahmood, Zeeshan (7 February 2017). "Asma Nabeel talks about upcoming youth based rom-com 'Maan Jao Naa'". Galaxy Lollywood (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  19. Images Staff (7 August 2018). "Maan Jao Naa screenwriter Asma Nabeel turns lyricist for Kajol's film Helicopter Eela". Images (in ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  20. Shabbir, Buraq. "Asma Nabeel on writing a song for Kajol-starrer Helicopter Eela". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  21. "Pakistani screenwriter Asma Nabeel pens lyrics for Kajol's 'Helicopter Eela' | Pakistan Today". www.pakistantoday.com.pk. Retrieved 24 November 2020.
  22. Kalam, Kayenat (6 August 2018). "Asma Nabeel Makes Debut in Bollywood As Lyricist For Kajol's Helicopter Eela!". VeryFilmi (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  23. Shabbir, Buraq. "Asma Nabeel announces her next film, Fly". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 24 November 2020.
  24. "Lalkar | 24 October World Polio Day | Public Service Message by Asma Nabeel". Newsone (in அமெரிக்க ஆங்கிலம்). 24 October 2020. Retrieved 24 November 2020.
  25. "Breast Cancer Awareness". Chughtai Lab (in அமெரிக்க ஆங்கிலம்). 7 October 2019. Archived from the original on 26 November 2020. Retrieved 24 November 2020.
  26. "The will to survive; 'Let our stories become your strength'". The Express Tribune (in ஆங்கிலம்). 27 October 2016. Retrieved 24 November 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்மா_நபில்&oldid=4424311" இலிருந்து மீள்விக்கப்பட்டது