அஸ்மா ஜெகாங்கீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஸ்மா ஜிலானி ஜெகாங்கீர்
Asma Jahangir Four Freedoms Awards 2010 cropped.jpg
2010இல் அஸ்மா ஜெகாங்கீர் ஃபோர் ஃப்ரீடம்சு விருதினை வழிபாட்டுச் சுதந்திரத்திற்காகப் பெறுதல்
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் குழாம் சங்கம்
பதவியேற்பு
அக்டோபர் 27, 2010
குடியரசுத் தலைவர் அசிஃப் அலி சர்தாரி
பிரதமர் ராசா பர்வேசு அசரஃப்
முன்னவர் காசி அன்வர்
பாக்கித்தானின் மனித உரிமைகள் குழுவின் தலைவர்
பதவியில்
1987 – நடப்பில்
தனிநபர் தகவல்
பிறப்பு அஸ்மா ஜிலானி
சனவரி 27, 1952(1952-01-27)
லாகூர், பஞ்சாப் மாநிலம், மேற்கு பாக்கித்தான் (பாக்கித்தான்)
இறப்பு பெப்ரவரி 11, 2018(2018-02-11) (அகவை 66)
தேசியம் பாக்கித்தானியர்
பிள்ளைகள் 1 மகனும் 2 மகள்களும்
இருப்பிடம் இஸ்லாமாபாத், இசுலாமாபாத் தலைநகர ஆட்புலம் (ICT)
படித்த கல்வி நிறுவனங்கள் பஞ்சாப் பல்கலைக்கழகம் (சட்ட இளங்கலை)
கின்னைர்டு கல்லூரி (கலை இளங்கலை)
செயின்ட் காலென் பல்கலைக்கழகம் (நீதி அறிவியலில் முனைவர்)
பணி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் குழாம் சங்கத் தலைவர்
தொழில் வழக்கறிஞர், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
பாக்கித்தானின் உச்ச நீதிமன்றம் இஃப்திகார் மொகமது சௌத்திரி, பாக்கித்தானின் தலைமை நீதிபதி
Notable Awards Hilal-i-Imtiaz (2010)
Martin Ennals Award (1995)
மக்சேசே பரிசு
Leo Eitinger Award (2002)
Four Freedoms Award (2010)

அஸ்மா ஜிலானி ஜெகாங்கீர் (Asma Jilani Jahangir, உருது: عاصمہ جہانگیر) (பிறப்பு லாகூரில் சனவரி 27, 1952 - 11 பெப்ரவரி, 2018)[1] பாக்கித்தானின் முன்னணி வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற வழக்குரைஞர், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் குழாம் சங்கத் தலைவர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஆவார். சமயச் சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீதான உரிமையடக்கலைத் தடுக்கவும் சிறுவர்கள் சுரண்டப்படுவதைத் தடுக்கவும் பாக்கித்தானிலும் உலகளவிலும் செயற்பட்டு வருபவர்.

இவர் ஆகத்து 2004 முதல் சூலை 2010 வரை சமய அல்லது நம்பிக்கை உரிமைக்கான ஐக்கிய நாடுகள் அவையின் சிறப்பு விசாரணையாளராக இருந்துள்ளார். இது முன்னதாக மனித உரிமைகள் ஆணையத்துடன் இணைக்கப்பட்டிருந்தது; தற்போது மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐநாவின் நீதிமன்றப் புறம்பான, விதிக்கட்டில்லாத,உடனடி மரண தண்டனைகளுக்கான சிறப்பு விசாரணையாளராகவும் இருந்துள்ளார். பாக்கித்தானின் மனித உரிமைகள் குழுத் தலைவராகவும் உள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் விடுதலைப் புலிகளுடனான இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.[2][3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. https://mobile.nytimes.com/2018/02/11/obituaries/asma-jahangir-fearless-pakistani-rights-activist-dies-at-66.html?referer=
  2. "Asma Jahangir to assist UN probe in Sri Lanka". மீரா சீனிவாசன். தி இந்து. 25 சூன் 2014. 26 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "ஐ.நா. விசாரணைக் குழுவின் ஆலோசகர்கள் நியமனம்; அமெரிக்கா வரவேற்பு!". 4தமிழ்மீடியா செய்தித்தளம். 26 சூன் 2014. 2014-06-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 சூன் 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்மா_ஜெகாங்கீர்&oldid=3542329" இருந்து மீள்விக்கப்பட்டது