அஸ்தித்வா
அஸ்தித்வா | |
---|---|
![]() திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | மகேஷ் மஞ்ச்ரேகர் |
தயாரிப்பு | இராகுல் சுகந்த் |
கதை | இம்தியாசு உசேன் மகேஷ் மஞ்ச்ரேகர் |
திரைக்கதை | மகேஷ் மஞ்ச்ரேகர் |
இசை | ராகுல் ரானடே சுக்விந்தர் சிங் |
நடிப்பு | தபூ சச்சின் கேதார் மோனிஷ் பாஹல் இரவீந்திரா மன்கனி சுமிதா ஜெய்கர் சுனில் பார்வே நம்ரதா சிரோத்கர் |
ஒளிப்பதிவு | விஜய் குமார் அரோரா |
படத்தொகுப்பு | வி. என். மாயேகர் |
வெளியீடு | 6 பெப்பிரவரி 2000(India) |
ஓட்டம் | 109 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி |
|
மொத்த வருவாய் | ₹ 2.16 கோடி[1] |
அஸ்தித்வா (Astitva) என்பது மகேஷ் மஞ்ச்ரேகர் எழுதி இயக்கிய 2000 ஆம் ஆண்டு வெளியான மராத்தி மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியத் திரைப்படமாகும். மகிழ்ச்சியாக திருமணமான அதிதி பண்டிட்டின் கதையை இந்தப் படம் சொல்கிறது, அதிதியின் கணவர் ஸ்ரீகாந்த் பண்டிட் எதிர்பாராத விதமாக அதிதியின் முன்னாள் இசை ஆசிரியர் மல்ஹார் காமத் வழங்கிய செல்வத்தைப் பெறும்போது சந்தேகப்படுகிறார். இசை வகுப்புகள் முடிவடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, மல்ஹாரிடமிருந்து இருந்து அவர் ஏன் அதைப் பெறுகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஸ்ரீகாந்த் முயற்சித்து அதைச் செய்கிறார்.
அஸ்தித்வா 2000 ஆம் ஆண்டில் மராத்தியில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[2] தபுவின் நடிப்பு அவருக்கு பல விருதுகளை வென்று கொடுத்ததோடு பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் அவரது சிறந்த திரைப்படங்களில் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.[3][4]
கதைக்களம்
[தொகு]ஆண்களின் ஆதிக்கம், திருமண உறவுக்கு வெளியேயான உறவுகள் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஏற்படும் துன்புறுத்தல் போன்ற பிரச்சனைகளை அஸ்தித்வா உள்ளடக்கியுள்ளது. இது திருமண வாழ்க்கைக்கு வெளியே தனக்கென ஒரு அடையாளத்தைக் கண்டறிய முயலும் ஒரு பெண்ணைப் பற்றியதாக இக்கதை அமைந்துள்ளது.
1997 ஆம் ஆண்டில் ஒரு பழம்பெரும் இசைக்கலைஞரும் இசை ஆசிரியருமான மல்ஹார் காமத் (மோனிஷ் பாஹ்ல்), இறக்கும் தருவாயில் தனது உயிலைத் தயாரிக்கும் போது, அதிதி ஸ்ரீகாந்த் பண்டிட் (தபு) என்பவரிடம், ஒரு மாளிகையை (6100 ச.மீ) உள்ளடக்கிய தனது முழு பண்ணைத் தோட்டம் -1.5 ஏக்கர் நிலம், 1,400 கிராம் தங்கம் மற்றும் சுமார் 860,000 ரூபாய் விட்டுச் செல்கிறார். அவர் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயில் அதிதிக்கு வழங்கப்படுகிறது.
உயில் புனேவில் உள்ள அதிதியை அடையும் போது, டாக்டர் ரவி பாபட் (ரவீந்திர மங்கனி) மற்றும் அவரது மனைவி மேக்னா (ஸ்மிதா ஜெய்கர்) ஆகியோரின் வருகையால் ஏற்பட்ட ஒரு விருந்தில் இருக்கிறார். ரவி அதிதியின் கணவர் ஸ்ரீகாந்த் பண்டிட்டின் (சச்சின் கெடேகர்) நெருங்கிய நண்பர் ஆவார். அதிதி மற்றும் ஸ்ரீகாந்தின் ஒரே மகன் அனிகேத் (சுனில் பர்வீ) தனது வருங்கால மனைவி ரேவதியை (நம்ரதா ஷிரோட்கர்) விருந்தில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்துகிறார்.
அதிதிக்கு முகவரியிடப்பட்ட சான்றளிக்கப்பட்ட சிப்பத்தை மேக்னாவின் எரிச்சலுக்கும் ரவியின் ஆச்சரியத்திற்கும் இடையே ஸ்ரீகாந்த் திறக்கிறார். ஸ்ரீகாந்த் ஆர்வமுற்று, 25 ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதிய தினசரி நாட்குறிப்புகளை பார்க்கிறார். அந்த காலகட்டத்தில் தான் வேலை நிமித்தமாக பயணத்தில் இருந்ததால், அதிதி தன்னால் கர்ப்பமாக இருந்திருக்க முடியாது என்று எண்ணுகிறார். அவர் தனது நாட்குறிப்பை அவளிடம் காட்டி, உண்மைகளை முன்வைத்து, விளக்கம் கேட்கிறார்.
ஒரு முன் நிகழ்வு பற்றிய நினைவில், ஸ்ரீகாந்த் ஒரு நிறுவனத்தில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக இருக்கிறார், அவர் தன்னைத் தானே வெற்றி கொள்ள விரும்புகிறார். ஸ்ரீகாந்தின் வேலை அவரைக் கிட்டத்தட்ட தொடர்ந்து பயணிக்க வைக்கிறது. இதனால் அவரது புதுமணமான மனைவி அதிதி தனிமையிலும் விரக்தியிலும் இருக்கிறார்.
அதிதி தனது சலிப்பைப் போக்குவதற்கும் தனது நேரத்தை ஒரு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கும் எங்காவது வேலை செய்ய அனுமதிக்குமாறு அவள் அவனிடம் கேட்கும்போது ஸ்ரீகாந்த் இதை ஒரு அவமானமாக எடுத்துக் கொண்டு, தனது குடும்பத்தில் எந்தப் பெண்ணும் வீட்டிற்கு வெளியே வேலை செய்யவில்லை என்றும், அவர்கள் வசதியாக வாழ அவர் போதுமான அளவு சம்பாதிக்கிறார் என்றும் கூறுகிறார். இறுதியில், மிகவும் திருப்தியற்ற நிலையில் அதிதி தனது நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள இசையைக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். அதிதிக்கு இசை கற்றுத் தர இசைந்த ஆசிரியர் மல்ஹார் காமத் ஆவார். ஸ்ரீகாந்த் உலகம் முழுவதும் தனது முடிவற்ற பயணங்களைத் தொடர்கிறார், இருப்பினும் இசை அதிதிக்கு ஒரு பொழுதுபோக்கு என்ற அளவில் தவிர வேறு எந்த முக்கியத்துவத்தையும் கொண்டிருக்காது என்பதை மல்ஹாருக்கு தெளிவுபடுத்துகிறார்.
அதிதியின் சகோதரி சுதா (ரேஷம் டிப்னிஷ்) மற்றும் அவரது கணவர் அதிதியுடன் வாழ வருகிறார்கள். அவர்களின் தொடர்ச்சியான காதல் அதிதியின் ஏக்கம் மற்றும் கைவிடப்பட்ட உணர்வுகளை மேலும் ஆழப்படுத்துகிறது. ஒரு வசந்த கால பிற்பகலில், மழையில் மல்ஹார் தனது புதிய கஜலில் நுழையும்போது, பருவத்தின் தாக்கத்தால் அதிதியின் தீர்மானம் உடைகிறது. இரண்டு நாட்களுக்குப் பிறகு மல்ஹார் மீண்டும் காமத்தைத் தேடி வரும் போது, அதிதி தான் ஸ்ரீகாந்தை மட்டுமே காதலிப்பதாகக் கூறி வெளியேறச் சொல்கிறாள். அதிதி ஒரு சிறிது நேரம் தனது சபலத்தின் காரணமாக தன்னை இழந்து விட்டார். சுதா இதைப் பற்றித் தெரிந்து கொண்டு, ஏதாவது செய்யுமாறு அறிவுறுத்துகிறார்.
ஸ்ரீகாந்த் திரும்பி வரும்போது, அதிதி உடைந்து போய் தனது கர்ப்பத்தைப் பற்றிய உண்மையை அவரிடம் சொல்ல முயற்சிக்கிறாள். ஆனால் ஸ்ரீகாந்த் தனது சொந்த நிறுவனத்திற்கான முதல் பெரிய ஒப்பந்தத்தை வென்றும், நெருங்கி வரவிருக்கும் தந்தைமை பற்றி கேள்விப்பட்டும், அதிதியை கூற வந்ததை முடிக்க அனுமதிக்காமல் கொண்டாட்டங்களுக்குள் நுழைகிறார்.
கதை நிகழ்காலத்திற்கு திரும்பும்போது, ஸ்ரீகாந்த் அதிதியை தண்டிக்கிறார். அனிகேத், ரவி மற்றும் மேக்னா முன்னிலையில் உண்மையைச் சொல்லும்படி கட்டாயப்படுத்துகிறார். மேக்னா ரவியைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, குடிகார கணவரின் வன்முறையால் துன்பப்பட்டவளாக இருந்ததால் அவள் ஸ்ரீகாந்தை வெறுக்கிறாள். தன் உண்மையான தந்தை யார் என்பதை அறிந்த பிறகு, அனிகேத் தன் தாயை வெறுப்புடன் பார்க்கிறான்.
ரவி ஸ்ரீகாந்திடம் திருமணத்திற்கு புறம்பான பல உறவு விவகாரங்களை நினைவூட்டுகிறார். ஆனால், ஸ்ரீகாந்த் தான் ஒரு ஆண் என்றும், அந்த விவகாரங்களில் இருந்து பிறந்த எந்த குழந்தைகளையும் வீட்டிற்கு கொண்டு வரவில்லை என்றும் கூறி அந்த வாதத்தை ஏற்க மறுக்கிறார்.
ஸ்ரீகாந்த் அதிதியுடன் தொடர்ந்து வாழ்வதெனவும் ஆனால், அவர்களுக்கு இடையே கணவன் மனைவி உறவு இருக்காது எனவும் முடிவு செய்கிறார். ரேவதி உண்மையை அறிந்த பிறகு, அனிகேத் தனது தந்தையாக அறிந்த மனிதரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல என்பதை உணர்ந்ததால் தனது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொள்கிறாள்.
அதித்தியை தன்னுடன் கோவாவுக்கு அழைத்துச் செல்ல மேக்னா முடிவு செய்கிறாள், ஆனால் அதிதி இதற்கு மறுத்துவிடுகிறார். வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, தன் தரப்பு வாதத்தைக் கேட்பதற்கு தனது கணவர் மற்றும் மகனின் இருப்பைக் கோருகிறாள். தனது பலவீனம் பாவம் என்று அழைக்கப்படும் அதே நேரத்தில் ஸ்ரீகாந்தின் பலவீனங்கள் எளிதில் எவ்விதத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என்று கேட்கிறார். தனது பலவீனத்தை ஏற்றுக்கொள்ள யார் அதிகாரம் கொண்டுள்ளார் என்றும் அவள் கேள்வி கேட்கிறாள். ஸ்ரீகாந்த் ஆண்மை இல்லாதவர் என்றும், அதனால்தான் அவருடன் எந்த குழந்தைகளையும் பெற்றெடுக்க முடியவில்லை என்ற இரகசியத்தையும் என்று அதிதி வெளிப்படுத்துகிறார். ரேவதி அனிகேத்திடம் அவனது தாய் வேறு முடிவு எடுக்காததால்தான் அவன் உயிருடன் இருக்கிறான் என்றும் அதித்தி வேறு விதமான முடிவை எடுத்திருந்தால் இன்று அனிகேத் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறாள். ரேவதியும் அதித்தியும் இந்த உரையாடலுக்குப் பின் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்து செல்வதுடன், ஸ்ரீகாந்தும் அனிகேத்தும் வாசலில் நின்று அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருக்க படம் முடிகிறது.
தயாரிப்பு
[தொகு]கதையின் நாயகி பாத்திரம் முதலில் படம் வவர்ந்த காலத்தின் முன்னணி நடிகையான மாதுரி தீட்சித்திற்கு வழங்கப்பட்டது. அவர் இந்த வாய்ப்பை நிராகரித்தபோது, அது தபு வசம் சென்றது, தபு தனது நடிக வாழ்க்கையின் ஒரு முக்கியமான திரைப்படத்தைப் பெற்றார்.[5]
இந்தக் கதை கை டி மோபாஸான்டின் நாவலான "பியர் எட் ஜீன்" ஐ அடிப்படையாகக் கொண்டது. 1943 ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு திரைப்படமான பியர் அண்ட் ஜீன், 1952 ஆம் ஆண்டில் வெளியான மெக்சிகன் திரைப்படமான யுனா முஜெர் சின் அமோர் மற்றும் 2015ஆம் ஆண்டில் வெயான அமெரிக்கத் திரைப்படமான பீட்டர் அண்ட் ஜான் ஆகியவை இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவானவை.[6]
நடிகர்கள்
[தொகு]- அதிதி பண்டிட்டாக தபு
- ஸ்ரீகாந்த் பண்டிட்டாக சச்சின் கெடேகர்
- ரவியாக ரவீந்திர மங்கனி
- மேக்னாவாக ஸ்மிதா ஜெய்கர்
- மல்ஹார் காமத் கதாபாத்திரத்தில் மோனிஷ் பாஹ்ல்
- அனிகேத் பண்டிட்டாக சுனில் பார்வே
- ரேவதி வேடத்தில் நம்ரதா ஷிரோட்கர்
- அஸ்மா பர்வீனாக குல்பாம் கான்
- சுதாவாக ரேஷம் டிப்னிஸ்
குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Astitva Box Office Collection till Now | Box Collection". Bollywood Hungama (in ஆங்கிலம்). 6 October 2000. Retrieved 2023-12-12.
- ↑ "48th National Film Awards".
- ↑ Singh, Shikha (2016-11-04). "Top 5 Performances by Tabu". BookMyShow (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-06-25.
- ↑ "From 'Maachis' To 'Andhadhun', Here's Why Tabu Is One Of The Most Versatile Actors Of Our Time". www.scoopwhoop.com. October 2018. Retrieved 2019-06-25.
- ↑ "Casting chronicle: One's miss is another's hit". India Today. 5 May 2014. Retrieved 2014-05-05.
- ↑ "Pierre and Jean (1943)". en.unifrance.org (in ஆங்கிலம்). Retrieved 2022-05-10.