அஷ்டலட்சுமி கோயில், ஐதராபாத்து
அட்டலட்சுமி கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தெலங்காணா |
அமைவு: | ஐதராபாத்து |
ஆள்கூறுகள்: | 17°21′53″N 78°32′52″E / 17.364693°N 78.547896°E |
கோயில் தகவல்கள் |
அட்டலட்சுமி கோயில் (Ashtalakshmi Temple) என்பது இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள தேவிகளின் பிரபலமான [[இந்துக் கோயிலாகும்.[1] லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தக் கோயில் நகரின் புறநகரில் தனித்து இருக்கிறது. இப்பகுதியில் உள்ள பல்வேறு இசுலாமியக் கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களுக்கு மத்தியில், இந்த கோயில் வித்தியாசமாக தென்னிந்திய கட்டிடக்கலையின் பாணியைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்து மதங்களில், செல்வத்தின் தெய்வமான லட்சுமி, மக்களின் இதயங்களில் ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகிறார், ஏனெனில் அவர் செழிப்பு மற்றும் மகிழ்ச்சி மற்றும் இரட்சிப்பைக் கொண்டுவருகிறார். ஆனால் மிகச் சில கோயில்களில் லட்சுமி தேவி எட்டு அற்புதமான வடிவங்களில் இருக்கிறார்.
வரலாறு
[தொகு]காஞ்சி சங்கர மடத்தின் கீழ் கட்டப்பட்ட இக்கோயில் ஏப்ரல் 1996 இல் குடமுழுக்கு செய்யப்பட்டது. இது தெலங்காணா மாநிலத்திலுள்ள, ஐதராபாத்தில் [2] தில்சுக் நகர் மற்றும் எல்பி நகர் இடையே, கொத்தப்பேட்டை (தேசிய நெடுஞ்சாலை 9 ) அருகே உள்ள வாசவி காலனியில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான கோயிலாகும். [3]
வடிவமைப்பு
[தொகு]இக் கோவிலின் வடிவமைப்பும் கட்டிடக்கலையும்]] சென்னை அட்டலட்சுமி கோயிலின் பாணியில் கட்டப்பட்டது. இருப்பினும், கட்டுமானம் தொடங்கும் போது பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அட்டலட்சுமி கோவில் கூட்டு முயற்சிக்கு சிறந்த உதாரணமாகும். பல தரப்பு மக்களும் தாராளமாக நன்கொடை அளிக்க முன் வந்தனர். ஐந்தாண்டுகள் இடைவிடாமல் கட்டுமானப் பணி நடைபெற்றது. மொத்தமாக ரூ. 10 மில்லியன் செலவில் பிரமாண்டமான அட்டலட்சுமி கோவிலின் தற்போதைய வடிவம் பெறப்பட்டது.
நன்கு அறியப்பட்ட கட்டிடக் கலைஞர் பத்மசிறீ எஸ்.எம்.கணபதி ஸ்தபதி மற்றும் எம். மதியழகன் ஸ்தபதி ஆகியோர் கட்டமைப்பையும் வடிவமைப்பையும் உருவாக்கினர். அதிகம் அறியப்படாத கடவுள்களின் சுமார் 134 சிலைகள் மகாகோபுரத்தை அலங்கரிக்கின்றன.
மணல் மற்றும் சீமைக்காரையால் கட்டப்பட்டிருந்தாலும், அட்டலட்சுமி கோவில் கலைஞர்களின் குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்துகிறது. உள்ளே ஆதிலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, சந்தானலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, கஜலட்சுமி, விஜயலட்சுமி மற்றும் வரலட்சுமி சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த எட்டு தோரணைகளை சித்தரித்து, சிலைகள் தங்கத்தாலான கழுத்தணிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கல்யாண மண்டபம்
[தொகு]15 மில்லியன் செலவில் இரண்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மண்டபம் மற்றும் அர்ச்சகர்களுக்கான அர்ச்சக நிலையம் குடியிருப்பு ஆகியவற்றைக் கட்டுவதற்கான முன்மொழிவுகள் தயாராகி வருகின்றன.